குரு பெயர்ச்சி பலன்கள் 2023 – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு

Guru peyarchi palangal 2023 in Tamil
- Advertisement -

முழு சுப கிரகமான குரு கிரக பெயர்ச்சி என்பது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு கிரையர் பயிற்சியாகும் அந்த வகையில்2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி அதிகாலை 5.14 மணிக்கு குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார் இதன் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சியால் ஏற்படப் போகின்ற பலன்கள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்

மேஷம்:
மேஷ ராசிக்கு, மேஷ ராசியிலேயே குருபகவான் பெயர்ச்சி ஆகியுள்ளார். மேஷத்திற்கு சொந்த ராசியிலேயே குருபகவான் பெயர்ச்சியாகியிருப்பதால், அவர்களுக்கு குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மேஷ ராசியினருக்கு நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்களே எதிரிகளாக மாறும் நிலை ஏற்படும். பொருளாதார ரீதியிலாக பார்க்கும் பொழுது ஏற்றத்தாழ்வான நிலையே இருக்கும்.

- Advertisement -

பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைத்து, பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து ஈடுபடுவது நன்மை அளிக்கும். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும், பல முயற்சிகளுக்குப் பிறகே அது வெற்றி பெறும். பிறருடனான வீண் விவாதங்களால் மனஸ்தாபங்கள் பிரச்சனைகள் உண்டாகும். அரசியலில் இருப்பவர்கள் சிறை செல்லுதல், தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிடும். ஆறு மாதத்திற்கு பிறகு மேன்மையான பலன்கள் மேஷ ராசியினருக்கு ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: திருமண பொருத்தம் பார்க்க

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு குருபகவான் விரய ஸ்தானமாகிய பன்னிரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். இதனால் உடன் இருப்பவர்களே துரோகிகளாக மாறும் சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு உடல் நல பாதிப்புகள் அவ்வப்பொழுது ஏற்பட்டு விலகும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு பெரிய அளவிலான லாபங்கள் ஏதும் கிடைக்காது, என்றாலும் பணத்தேவையை சமாளிக்க முடியும்.

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பெண்கள் ரீதியில் அவமானங்கள் உண்டாகலாம். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வதால் உடல் அலைச்சல் அதிகரிக்கும். பிறருடனான பணம் தொடர்பான விவகாரங்களில் நன்கு யோசித்து செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவார்கள். கலைஞர்களுக்கு எதிர்ப்பாராத வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி என்பது மிகச் சிறப்பான பலன்களை கொடுக்க வல்லதாக இருக்கிறது. பழைய கடன் தொகைகள் அனைத்தும் வசூல் ஆகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் உண்டாகும். பூர்விக சொத்துக்களில் உங்களுக்கு சேர வேண்டிய பாகம் வந்து சேரும். சிலர் புதிய வீடு, மனை வாகனம் போன்றவற்றை வாங்குவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த இடத்திற்கு பணி மாறுதல் பெறுவார்கள். வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று பணி புரியும் யோகமும் ஏற்படும். தங்களின் திறமையை வெளிப்படுத்தி புகழும், செல்வமும் சேர்ப்பீர்கள். பிரிந்து சென்ற உறவினர்களின் உறவு மீண்டும் ஏற்படும். சிலருக்கு அந்நிய நபர்களால் நன்மைகள் உண்டாகும்.

கடகம்:
இந்த குரு பெயர்ச்சி என்பது கடக ராசிக்கு பலவிதமான மாறுதல்களை கொடுப்பதாக அமையும். பிறருடன் பேசும் பொழுது கவனம் தேவை. குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு நேரடி மறைமுக எதிர்ப்புகள் எழும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் பிரச்சனைகள் உண்டாகும். ஒரு சிலருக்கு பார்க்கின்ற வேலையையே விட்டு விடக் கூடிய சூழலும் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் கூட்டாளிகளால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உண்டு.

பெண்களுக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும். கலைஞர்களுக்கு எதிர் பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சொந்தக் கட்சியினராலேயே அவமானத்தையும், துரோகத்தையும் சந்திக்க வேண்டியது இருக்கும். வருடத்தின் பிற்பகுதியில் கடக ராசியினருக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் சிறப்பான பலன்களை தருகிறது. இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சிம்ம ராசியினருக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபார ரீதியாக வெளியூர் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள கூடும். அதன் மூலம் ஆதாயங்களும் ஏற்படும். அந்நிய நபர்களால் பொருள் வரவு உண்டாகும். அரசியல் துறையில் இருப்பவர்கள் உயர் பதவிகளை பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்படைவார்கள்.

திருமண வயதில் உள்ள பெண்களுக்கு அவர்கள் விரும்பிய படியான வரன் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் வருமானம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். விருந்து, உபகாரங்களில் கலந்து கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்புக் கூடும். உணவு விடையங்களில் கவனம் தேவை.

இதையும் படிக்கலாமே: பெயர் பொருத்தம் பார்க்க

கன்னி:
கன்னி ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி என்பது உடல் நல ரீதியான பாதிப்புகள் தருவதாக உள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களின் வழியில் சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். வீண் அலைச்சல்கள் ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கும். தனக்கு கீழே இருக்கும் பணியாளர்களால் பிரச்சனை சந்திக்க நேரிடும். கோர்ட் வழக்கு போன்ற ரீதியில் சிலருக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள், எதிர்பார்ப்புக்கேற்ற லாபங்களை பெறுவார்கள்.

பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். பல கடினமான முயற்சிகளுக்குப் பிறகு கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடும். வாகன பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. பொருளாதார ரீதியில் ஏற்ற – இறக்கமான நிலை இருக்கும்.

துலாம்:
இந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்டிருக்கும் குரு பெயர்ச்சியால் துலாம் ராசியினர் பல நன்மைகளைப் பெறுகிறார்கள். தங்களின் பேச்சு சாதுர்யத்தால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். அரசாங்க ரீதியான ஆதரவு கிடைக்கும். நோய், கடன், எதிரிகள் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சிறப்பான லாபங்கள் உண்டாகும்.

வெளியூர், வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலர் அடிக்கடி ஆன்மீக ரீதியான பயணங்கள் மேற்கொள்வார்கள். பெண்களுக்கு தங்கள் மனதில் நினைத்தது ஈடேறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் சிறப்பான முறையில் நடைபெறும். சிலர் புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவார்கள். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி காரணமாக உடல்நல ரீதியிலான பிரச்சனைகளை சந்திக்க கூடும். எதிர்பார்த்த பொருள் வரவு வருவதில் தாமதங்கள் ஏற்படும். பிறருடன் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் அவசியம். கணவன் – மனைவியிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலும் பல அலைச்சல்களுக்குப் பிறகு வெற்றி பெறும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் புதிய முதலீடுகளில் ஈடுபடக் கூடாது.

அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வெளியூர் பயணங்களின் பொழுது உங்கள் உடைமைகளின் மீது கவனம் தேவை. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சிறக்க கடின முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கலைஞர்களுக்கு தொழில் ரீதியாக கடும் போட்டி ஏற்படும். பிறரிடம் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி வாழ்வில் பல சிறப்பான பலன்களை கொடுக்கக் கூடியதாக உள்ளது. உடலிலும், மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமான உயர்வுடன் கூடிய புதிய பதவிகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு தன லாபம் உண்டாகும். வீட்டில் திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடைபெறும். திருமணம் ஆகி குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

சிலர் தங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று நீண்ட நாள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். புது வாகனம் யோகம் உண்டு. தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சொன்ன வாக்கை நிறைவேற்றுவீர்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு கட்சியிலும் மக்களிடத்திலும் செல்வாக்கு பெருகும்.

இதையும் படிக்கலாமே: அமாவாசை பௌர்ணமி தினத்தில் மட்டும் இதை செய்தால் போதும். நம்முடைய உடம்பில் கெட்ட சக்தியால் தங்கவே முடியாது.

மகரம்:
மகர ராசியினருக்கு இந்த 2023 ஆம் ஆண்டு ஏற்படும் குரு பெயர்ச்சியால் எதிர்பாராத பொருள் விரயங்கள் ஏற்படும். மனதில் குழப்பமான நிலை இருக்கும். அரசாங்க ரீதியான காரியங்களில் சுலபத்தில் வெற்றி கிடைக்காது. அக்கம், பக்கம் வசிப்பவர்களுடன் வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும். சிலருக்கு நீதிமன்றம் செல்லக்கூடிய நிலை ஏற்படும். வாகனங்களில் பயணிக்கும் பொழுது சிறு விபத்துகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் சக போட்டியாளர்களின் சவாலை எதிர்கொள்ள திணறும் நிலை ஏற்படும்.

பெண்களுக்கு பணியிடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு கத்தி மேல் நடப்பது போன்ற சூழல் நிலவும். மாணவர்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால் கல்வியில் பின் தங்க கூடும். கலைஞர்கள், சக கலைஞர்களின் துரோகத்திற்கு ஆளாக நேரிடும். வருடத்தின் பிற்பகுதியில் பொருளாதார நிலை ஏற்றம் பெறும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இது 2023 ஆம் ஆண்டு ஏற்படும் குரு பெயர்ச்சியால் அவ்வப்பொழுது மருத்துவ ரீதியிலான செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். தங்களின் உழைப்பை சுரண்டி பிறர் லாபம் பெறுவார்கள். குடும்பத்தில் அமைதியின்மை ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, உறவுகள் முறியும். பெண்களுக்கு சோம்பல் தனம் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் விரயங்கள் ஏற்படும். மாணவர்கள் மந்த நிலை அடைந்து கல்வியில் பின் தங்குவார்கள்.

அரசியலில் இருப்பவர்கள் சிறை செல்லக்கூடிய நிலை ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் சக கூட்டாளிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொருளாதார ரீதியில் அதிருப்தி நிலவும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் அவமானங்களை சந்திக்க நேரிடும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இந்த 2023 ஆம் ஆண்டு ஏற்படப் போகின்ற குருபெயர்ச்சியால் எதிர்பாராத சிறு சிறு வீண் விரயங்கள் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் பிரச்சனைகளை சந்திக்க கூடும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும் என்றாலும் பொருளாதார நெருக்கடி இருக்கும்.பழைய வாகனங்களை விடுத்து, புதிய வாகனங்களை வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். சகோதரர்களால் பெரிய உதவிகள் ஏதும் இருக்காது. பழைய கடன்களை அடைப்பதற்குள்ளாக படாத பாடு பட வேண்டியிருக்கும்.

சிலர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால் உடல் நலக் கோளாறுகள் உண்டாகி, மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள் பறிபோகும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். வருடத்தின் பிற்பகுதியில் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

- Advertisement -