குரு பெயர்ச்சி பலன்கள் 2018 கும்பம்

guru-peyarch

கும்பம்:

Kumbam Rasi

தங்களது கடமையில் தவறாமல் இருக்கும் கும்ப ராசிக்காரர்களே 04-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் தொழில், வியாபாரம் மற்றும் உத்தியோகங்களில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தின் தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்ய முடியும். பிறருடன் பேசும் போது கவனமுடன் பேச வேண்டும். உங்களுடன் பணிபுரிபவர்களின் சதிச்செயல்களுக்கு ஆளாக நேரிடும். 13-02-2019 அன்று ஏற்படும் ராகு-கேது பெயர்ச்சிகளுக்கு பிறகு ஓரளவிற்கு அனுகூலமான பலன்களை பெற இயலும். பிறரை நம்பி பெரிய அளவிலான தொகைகளை கடனாக தருவதை தவிர்ப்பது நல்லது. அவ்வளவாக பரிட்சயம் இல்லாத நபர்களை பணியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விடயங்களில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அதிக காரம் இனிப்பு சம்பந்தமான உணவுகளை உண்ணக்கூடாது. குடும்பத்தில் பெரியவர்களுக்கு மனக்கவலைகள் அதிகம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். காண்ட்ராக்ட், பங்கு வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடுமையாக உழைத்து உங்களுக்கான செல்வத்தை ஈட்டுவீர்கள். தொழில் வியாபாரங்களில் போட்டியாளர்களாலும், அரசாங்கத்தாலும் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். தொலைதூர பயணங்களால் வீண் பொருள் மற்றும் கால விரயம் ஏற்படும்.

உத்தியோகிஸ்தர்கள் என்ன தான் கடினமாக உழைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கேற்ற பலன்களை பெற முடியாது. சக ஊழியர்களின் உதவிகளும் தகுந்த நேரத்தில் கிடைக்காது. பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க கூடிய சூழ் நிலை ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் தங்களின் இருப்பை தக்க வைப்பதற்கே திண்டாடவேண்டியிருக்கும். விளைபொருட்களுக்கு தகுந்த விலை விவசாயிகளுக்கு கிடைக்காது. லாபம் ஓரளவுக்கே கிடைக்கும். கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் சக போட்டியாளர்களுக்கு சென்று விடும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவதால் பொருளாதார சிக்கலின்றி வாழலாம். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும்.

Guru peyarchi palangal Kumbam
Guru peyarchi palangal Kumbam

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

புதிதாக தொடங்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் கடின முயற்சிகள் செய்து வெற்றியை பெறுவீர்கள்.. தொழில் வியாபாரங்களில் எதிரிபார்த்த லாபங்களை பெற முடியும். உத்தியோகிஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெறுவார்கள். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் மறையும் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் யோகம் உண்டாகும். திருமண முயற்சிகளில் பல தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும்.

- Advertisement -

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

உடல் ஆரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். திருமண ஆகாத பெண்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும். தொழில் வியாபாரங்களில் சராசரியான அளவிலேயே லாபங்கள் இருக்கும். மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்களால் தன லாபம் கிடைக்கும். பொருள் வரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். சக ஊழியர்களின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உறவினர்களோடு உங்களுக்கு பிரச்சனைகள் எழலாம். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். எதிலும் நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும் அவசரத்தன்மையை குறைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும் சூழ்நிலை உண்டாகும். உடல் நலத்தில் கவனம் கொள்வது அவசியம். வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரங்களில் உங்களின் மறைமுக எதிரிகள் நீங்கி உங்களுக்கு அனைத்து நன்மைகளும் ஏற்படும். புதிய சொத்துகளை வாங்கும் போது பலமுறை யோசிப்பது நல்லது. பிறருக்கு பணத்தை கடனாக கொடுத்தால் திரும்ப வசூலிப்பதில் பிரச்சனைகள் உருவாகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து தக்க சமயத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும்.

Guru peyarchi palangal Kumbam
Guru peyarchi palangal Kumbam

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

அதிகப்படியான பொருள் வரவு இருக்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். சிலர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் நலத்தில் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். உடன் பிறந்தவர்களால் பொருளாதார ரீதியில் லாபம் கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

அவ்வப்போது உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பணியிடங்களில் உங்களின் பணியில் மட்டுமே கவனத்தை செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரங்களில் பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைப்பதால் நல்ல லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் ஒரு சிலருக்கு தாமதங்களும் பிரச்சனைகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து நன்றாக படித்து சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு குருபகவான் 10 ஆம் இடத்தில் இருப்பதால் வியாழக்கிழமைகள் தோரும் குருபகவானுக்கு விரதமிருந்து அவரை வழிபடுவது நல்லது. மேலும் ராகு காலங்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழ தீபமேற்றி வழிபடுவது நன்மையை தரும். ஆடைகள், தேன், நெய் போன்றவற்றை ஏழை பிராமணர்களுக்கு தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும். சரபேஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்வது நன்மை பயக்கும்.