குரு பெயர்ச்சி பலன்கள் 2018 மகரம்

guru-peyarchi

மகரம்:

Magaram rasi

அனைவரிடமும் உண்மையான அன்புடன் பழகும் மகர ராசிக்காரர்களே, 04-10-2018 அன்று உங்களின் ராசிக்கு 11 ஆம் இடத்தில் குரு பெயர்ச்சியாகவிருப்பதால், இவ்வளவு காலம் இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நிலை மாறும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் வட்டியுடன் அடைத்துவிடக்கூடிய சூழல் உண்டாகும். இவ்வளவு நாட்கள் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். உங்கள் ராசிக்கு விரயச் சனி நடைபெற்றாலும் கடுமையான பாதிப்புகள் எதுவும் இருக்காது. வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை பல அலைச்சல்களுக்கு பிறகு கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து சொந்தம் கொண்டாடுவார்கள். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தொழில் வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவியுயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

உங்களின் உடல் ஆரோக்கியம் பொதுவாக நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியது வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தன்னிறைவுயும் ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்கள். உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெருந்தொகையை முதலீடாக போட்டு செய்யும் வியாபாரங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். தொழிலாளிகள், பணியலாளர்களின் திறமையாலும் ஒத்துழைப்பாலும் பல புதிய தொழில் ஒப்பந்தங்கள் உங்களை தேடி வரும்.

பணியில் இது நாள் வரை நீங்கள் சுமந்த களங்கம் நீங்கி, உங்களுக்கு எதிர்பாராத பல நன்மைகள் ஏற்படும். புதிய இடங்களுக்கு பணிமாறுதல்கள் கிடைப்பதால் உங்களுக்கு பல அனுகூலங்கள் ஏற்படும். உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்கள் பாராட்டை பெறக்கூடிய காரியங்களை செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக அமையும். புதிய நிலங்கள் வாங்கி அதிலும் விவசாயம் செய்து லாபத்தை அடைவீர்கள். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

Guru peyarchi palangal Magaram
Guru peyarchi palangal Magaram

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

நீங்கள் தொடங்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் வெற்றியை பெறுவீர்கள். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் வியாபாரங்களில் எதிரிபார்த்ததைவிட அதிக லாபங்களை பெற முடியும். உத்தியோகிஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெறுவார்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும் சிலருக்கு உண்டாகும். சுப காரியங்களுக்கான பொருள் விரயம் சிலருக்கு ஏற்படும்.

- Advertisement -

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறிது பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கும். வியாபாரகங்களில் சக போட்டியாளர்கள் உங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவார்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.வெளிநாட்டு வியாபார ஒப்பந்தங்கள் உங்களை தேடி வரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பணம் பிறருக்கு கடனாக வழங்கும் போது முன்னெச்சரிக்கை தேவை. எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். முன்கோபத்தன்மையை குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். திருமண வயதுடைய பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களை ஓட்டும் போது அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனைகள் செய்வார்கள்.

Guru peyarchi palangal Magaram
Guru peyarchi palangal Magaram

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

வீண் விரயங்கள் அதிகம் ஏற்படும்.தொழில் வியாபாரங்களில் சில பிரச்சனைகள் தோன்றும். அவசரப்பட்டு வீடு, வாகனங்களை வாங்கும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. பிறருக்கு பணத்தை கடனாக கொடுக்க கூடாது. எதிர்பாரா இடங்களிலிருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும். உறவினர்களின் வருகை உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

அதிகப்படியான பொருள் வரவு இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. பொன், பொருள், ஆபரணங்கள், வாகனம், வீடு, நிலம் போன்ற பலவற்றை வாங்கி குவிக்கும் பொருளாதார நிலை உண்டாகும். சிலர் உல்லாச பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் நலத்தில் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு சமூகத்தால் பாராட்டப்படக்கூடிய அமைப்பும் ஏற்படும். சகோதரர்கள் வழியில் சுமூகமான உறவுகள் இருக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

சிறு சிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பிறர் விடயங்களில் தேவையில்லாமல் தலையிடுவது பிரச்சனைகளை கொண்டு வரும். தொழில் வியாபாரங்களில் சில வாய்ப்புகள் தாமதமாக கிடைத்தாலும் லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. மாணவர்களுக்கு கல்வியில் அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். சமுதாயத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு ஏழரை சனி நடப்பதால் சனிக்கிழமைகள் தோரும் திருப்பதி ஏழுமலையானுக்கு வழிபாடுகள் செய்வது நல்லது. அனுமன் மற்றும் விநாயகரையும் சனிக்கிழமை தோறும் வழிபட்டு வர வேண்டும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், சனியின் தீய பலன்களை போக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆடைகள் தானம் செய்வது சிறந்தது. வியாழக்கிழமைகள் தோறும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்வது குருவ