குரு பெயர்ச்சி பலன்கள் 2019 மிதுனம்

Guru peyarchi palangal Mithunam

மிதுனம் : மிருகசீரிடம் 2,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

Gemini zodiac sign

29.10.2019 முதல் 13.11.2020 வரை குருவானவர் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமரவுள்ளார். எனவே உங்கள் திறமைக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். எதிலும் உங்களுக்கு வெற்றி கிட்டும். வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்கள் கிடைக்கும். இதுவரை நீங்கள் வெளிப்படுத்தாமல் இருந்த உங்களின் அத்தனை திறமைகளும் வெளிப்பட நல்லதொரு வாய்ப்புகள் அமையும். சுப காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

நீண்ட நாட்களாக திருமண தள்ளி போனவர்களுக்கு திருமணம் கை கூடும். தம்பதியர்களுக்குள் ஒற்றுமை மேலோங்கும். பெரிய இடத்தின் நட்பும் அதனால் ஆதாயங்களும் உண்டாகும். அரசாங்க ரீதியான விடையங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். எதிர்பார்த்த இடத்தில் எதிர்பார்த்த அளவு கடன் கிடைக்கும். உற்றார் உறவுணர்கள் உங்களது புதிய முயற்சிகளுக்கு துணை நிற்பார்கள். பிள்ளைகளுக்கு சிறப்பான வேலையும், தக்க நேரத்தில் நல்லதொரு இடத்தில் சம்மந்தமும் பேசி முடிவாகும்.

வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும். இணைய வழி தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு லாபம் கிடைக்கும். ஆன்மீக பயணம் சென்று மனதை சாந்தப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

Guru peyarchi palangal Mithunam
Guru peyarchi palangal Mithunam

தொழில்:
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சரியான நேரத்தில் உங்களின் திறமைக்கு நல்லதொரு பாராட்டு கிடைக்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை எதிர்பார்த்த படி இருக்கும்.

- Advertisement -

வியாபாரிகளை பொறுத்தவரை, லாபம் ஈட்டும் ரகசியங்களை நீங்கள் அறிந்து அதற்க்கு ஏற்றார் போல தொழில் செய்து பயன் பெறுவீர்கள். வியாபார நுணுக்கங்களை நன்கு அறிவீர்கள். புதிய தொழிலை தொடங்குவது, ஏற்கனவே செய்யும் தொழிலை பெருக்குவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இதுவரை முடங்கி இருந்த தொழிலும் கூட புது பொலிவு பெரும். தொழில் ரீதியான குழப்பங்கள் விலகும்.

Guru peyarchi palangal Mithunam
Guru peyarchi palangal Mithunam

கல்வி:
மாணவர்ளை பொறுத்தவரை விளையாட்டில் நல்லதொரு சாதனைகளை செய்வார்கள். படிப்பில் அக்கறை அதிகாரிக்கும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் அன்பை பெறுவார்கள். கல்வியில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும். கல்லூரி படிப்பை முடிப்பவர்களுக்கு நல்லதொரு வேலை கிடைக்கும்.

guru

பொருளாதாரம்:
பொருளாதாரத்தில் நல்லதொரு முன்னேற்றம் இருக்கும். சிலர் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொட்ட காரியம் எல்லாம் துலங்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு வருவாய் கிடைக்கும்.

பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் கை கூடி வரும். எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும்.

பரிகாரம்:

உங்கள் வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோயிலிற்கு தினமும் சென்று வழிபடுவது நல்ல பலன் தரும். காளஹஸ்திக்குச் சென்று சிவனை வழிபடுவதால் நல்ல பலன் உண்டு. ஏழைகளின் கல்வி செலவிற்கு உதவுங்கள் நல்லது நடக்கும்.