குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 ரிஷபம்

Guru peyarchi rishabam

முயற்சியைக் கை விடாதவர்களே!

2.9.17 முதல் 2.10.18 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் பிரவேசிக்க இருக்கிறார். சகட குரு கலக்கத்தைத் தருவாரே என்று அச்சப்படவேண்டாம். சின்னச் சின்ன போராட்டங்களைச் சந்திக்கவேண்டி இருந்தாலும், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்குள் பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லவும். கடன்கள் கவலை தரும். புதியவர்களை நம்பி முடிவு எடுக்கவேண்டாம்.

rishabam

குருபகவானின் பார்வை:

குருபகவான் தனது 5-ம் பார்வையால் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வி.ஐ.பி.-க்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

குருபகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். காணாமல் போன முக்கியமான ஆவணம் திரும்பக்கிடைக்கும்.

- Advertisement -

குருபகவான் தன்னுடைய 9-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

guru

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

2.9.17 முதல் 5.10.17 வரை உங்கள் ராசிக்கு 7 மற்றும் 12 ஆகிய வீடுகளுக்கு உரிய செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை 3,4-ம் பாதம் துலாம் ராசியில் செல்வதால், கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட காலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால், பிரச்னைகளைப் போராடி சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள்.

உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11-ம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால், பரபரப்பாகச் செயல்படுவீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பணம் மற்றும் கடன்கள் விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

guru

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குருபகவான் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்ப்பதால் திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், மனதில் இனம் தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வீண் விரயங்கள், ஏமாற்றங்கள் வந்து செல்லும்.

வியாபாரம் ஒரு வாரம் இருப்பதுபோல் மறு வாரம் இருக்காது. வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கும் கடன் உதவியும் தள்ளிப் போகும். போட்டியாளர்களால் லாபம் குறையும். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். எந்த ஒரு மாற்றமும் செய்யவேண்டாம். இருப்பதை தக்கவைத்துக் கொள்ளவும். பங்குதாரர்கள் சிலர் தங்கள் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள்.

guru

உத்தியோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. மற்றவர்கள் உங்கள் திறமைகள் மறக்கடிக்கப்படும். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னை வந்து செல்லும். உங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சலுகைகளைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கும்.

மாணவ மாணவியர் சமயோசிதமாக நடந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். விளையாட்டுப் போட்டிகளில் அடிபடக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.

கலைத்துறையினர்களே! விமர்சனங்களால் சோர்வு அடையவேண்டாம். வாய்ப்புகளை அலைந்து திரிந்துதான் பெறவேண்டி இருக்கும். மூத்த கலைஞர்கள் உதவி செய்வார்கள்.

இந்த குரு பெயர்ச்சி அவ்வப்போது சுகவீனங்களையும் தோல்விகளையும் தந்தாலும், ஆராய்ந்து செயல்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அமையும்.

பரிகாரம்: அமாவாசை தினத்தன்று தென்குடித்திட்டை திருத்தலத்துக்குச் சென்று, பசுபதிநாதரையும் தட்சிணாமூர்த்தி பகவானையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் பலிதமாகும்.