குரு பெயர்ச்சி பலன்கள் 2019 கும்பம்

Guru peyarchi palangal 2019 Kumbam

கும்பம் ராசி: (அவிட்டம் 3, 4ஆம் பாதம், சதயம் பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்)

Kumbam Rasi

இனிமையாகவும், கணிவாகவும் பேசக்கூடிய கும்ப ராசிக்காரர்களுக்கு வரவிருக்கும் குரு பெயர்ச்சியானது எத்தகைய பலன்களை தரப்போகிறது என்று பார்ப்போம். விகாரி வருட குரு பெயர்ச்சியானது உங்கள் ராசிக்கு லாப குருவாக அமையப் பெற்றிருக்கிறது எனவே இனி தொட்டதெல்லாம் துலங்கும். வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், மன நிம்மதியும் அடைவீர்கள். இதுவரை இருந்த அனைத்துப் பிரச்சனைகளும் முற்றிலுமாக தீரும்.

29.10.2019 முதல் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பதினோராம் இடத்திற்கு செல்வதால் லாப பலன்களை கொடுக்கப் போகிறார். அதுமட்டுமில்லாமல் சனி பகவான், கேது, ராகு ஆகியோரும் ஏற்கனவே வீற்றிருப்பதால் பலமடங்கு லாபத்தை அடைய இருக்கிறீர்கள். இந்த குரு பெயர்ச்சியால் அதிக பலன்களை பெறவிருக்கும் ராசியில் முதல் இடம் கும்பராசிக்கு உரியது.

Guru peyarchi palangal Kumbam
Guru peyarchi palangal Kumbam

மிகப்பெரிய செயல்களும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அவ்வபோது சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று உற்சாகமடைவீர்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை பலப்படும். அன்னோன்யம் அதிகரிக்கும். பிள்ளைப்பேறு கிட்டும். உறவினர்களிடத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மீண்டும் ஒன்று சேருவர்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ம் வீட்டை பார்ப்பதால் இதுவரை மன இறுக்கத்துடன் இருந்த நீங்கள் இனி மன தைரியத்துடன் காணப்படுவீர்கள்.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் உங்களுக்கு சாதகமாகவே அமையப்பெறும். பிள்ளைகளின் திருமண விஷயம் விரைவில் முடிவுக்கு வரும். தடைப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்களெல்லாம் நல்லபடியாக முடியும்.

- Advertisement -

பொருளாதாரம்:
இந்த குரு பெயர்ச்சியால் பொருளாதாரத்தில் முன்னேறி மகிழ்ச்சியின் உச்சிக்கே செல்வீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள். சிலர் புதிதாக வீடு கட்டிக் குடியேறுவீர்கள். ஆடை, அணிகலன்கள்; பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

Guru peyarchi palangal Kumbam
Guru peyarchi palangal Kumbam

தொழில்:
பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தொழிலில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய யுக்திகளை கையாண்டு வியாபாரத்தை விருத்தியடைய செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிட்டும். நீங்கள் விண்ணப்பித்த இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். பங்கு சந்தை, பங்கு வர்த்தகம் போன்ற அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியுள்ள தொழில்களுக்கு இது உன்னதமான தருணம். அதிக முதலீடுகளை செய்து அதிக லாபத்தையும் ஈட்டுவீர்கள்.

கல்வி:
கல்வி கற்கும் மாணவ, மாணவியர்கள் கவனத்துடன் படித்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். கல்வி வகையில் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உருவாகும்.

ஜாக்கிரதையாக இருக்கவேண்டியவை:
26.3.2020 முதல் 8.7.2020 வரை குரு பகவான் அதிசாரம் பெற்று மகர ராசிக்கு வருவதால் சற்று கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். விரயங்கள் இருப்பினும் அது சுப விரயமாகவே இருக்கும். வீண் அலைச்சல், மனசோர்வு இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனத்துடன் செல்வது நல்லது.

பரிகாரம்:
பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள். ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்யுங்கள். வாழ்வில் சகல சவுபக்கியங்களும் உண்டாகும்.