மகரம் ராசி: (உத்திராடம் 1, 2, 3ஆம் பாதம், திருவோணம் அவிட்டம் 1, 2 ம் பாதம்.)
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியானது எத்தகைய பலன்களை தரப்போகிறது என்று பார்க்கலாம். தாராள குணமும் அனைவருக்கும் உதவும் மனமும் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு குரு பகவான் 12-ஆம் இடத்திற்கு வர இருக்கிறார் அதனால் வீண் அலைச்சலும் மன சோர்வும் உண்டாகும். இதுவரை நிம்மதியாக இருந்த நீங்கள் இனி சற்றே குழப்பத்துடனும் மன இறுக்கத்துடனும் காணப்படுவீர்கள். உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.
மகர ராசிக்கு 12-ஆம் இடத்திற்கு குரு வருவது அவ்வளவு நல்லதல்ல மேலும் ராகுவை தவிர அனைத்து கிரகங்களும் உங்களுக்கு எதிராகவே அமைந்திருக்கின்றன. சோதனைகள் பல கடந்து இறுதியில் சாதனை படைப்பீர்கள் எனவே மனக்கலக்கம் கொள்ளத் தேவையில்லை. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது பிரிவினையை உண்டாகாமல் காக்கும் இல்லையெனில் குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை உருவாகும். எதிலும் நிதானத்துடன், கவனத்துடன் இருப்பது நல்லது. ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து அதன்பின் அச்செயலை தொடங்குவது உத்தமம்.

நீங்கள் மேற்கொண்ட வழக்குகள் உங்களுக்கு பாதகமாக முடியலாம். புதிய வழக்குகளில் சிக்காமல் இருந்து பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டு. வேண்டி வைத்திருந்த நேர்த்திக்கடனை தவறாமல் முடித்து விடவும். வீண் விவாதங்களால் மனக்கசப்பு உண்டாகும் எனவே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பொருளாதாரம்:
28.3.2020 முதல் 7.7.2020 வரை குரு பார்வையால் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்ப தேவைகள் திருப்திகரமாக இருக்கும். புதிதாக வீடு கட்டுவதற்கான முதல் படியை ஆரம்பிக்கலாம். திருமண யோகம் உண்டு எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வரன் பார்ப்போர் நன்றாக விசாரித்து கொள்ளவும். வாகன யோகம் அமையப்பெறும். ஆடை, அணிகலன்கள் சேர்ப்பீர். தன வரவு திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் வரலாம் பாதுகாப்பாக இருப்பது நல்லது.

தொழில்:
வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வது அவ்வளவு நல்லதல்ல. எதிரிகள் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுய அறிவை பயன்படுத்தி வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள பாக்கி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது தான் உங்களுக்கு நல்லது. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வேலைப்பளு அதிகமாக இருக்கலாம் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். மனதை ஒரு நிலைப்படுத்தி கொள்ளுங்கள்.
கல்வி:
கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். அதனை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுப்பீர்கள். கவனத்தை சிதறவிடாமல் படிப்பில் ஆர்வம் கொண்டு தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். உயர்கல்வியில் விடுபட்ட தேர்வுகளை வெற்றிகரமாக எழுதி முடிப்பீர்கள். நினைத்த நேரத்தில் நினைத்த வேலை கிடைக்கப் பெறும்.
பரிகாரம்:
விநாயக பெருமானுக்கு சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி வழிபட்டு வாருங்கள் வாழ்வில் சகல யோகமும் உண்டாகும். தங்களால் இயன்ற வரை ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்து வாருங்கள்.