குரு பெயர்ச்சி பலன்கள் 2019 துலாம்

துலாம்: ( சித்திரை 3, 4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதம்)

Libra zodiac sign

எதையும் நியாயமாக, நிதானமாக சிந்தித்து செயலாற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எவ்வாறு அமைய போகிறது என்பதை இப்பதிவில் காண்போம். குருவின் பார்வை பலத்தால் உங்களின் வாழ்க்கை துணையே இனி உங்களுக்கு உதவிகரமாக துணை நிற்பார். தனவரவுக்குக் குறைவிருக்காது. தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும்.

உங்களுடன் இருந்து கொண்டே உங்களுக்கு எதிராக சிலர் செயல்படுவார்கள். உங்கள் முகத்திற்கு முன் ஒன்றும் பின் ஒன்றுமாய் பேசி வீண் பிரச்சினைகளை கொண்டு வருவார்கள். ஜாக்கிரதையாக பழகுங்கள். எவரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு பேச வேண்டாம். வில்லங்கம் வராமலிருக்க விலகி நிற்பதே நலம்.

உங்களின் தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உறவினர்களால் வீண் விரயங்களும், அலைச்சலும் உண்டாகும். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அனுகூலம் உண்டாகும்.

Guru peyarchi palangal Thulam
Guru peyarchi palangal Thulam

பொருளாதாரம்:
உங்கள் ராசிக்கு குரு பெயர்ச்சியால் பொருளாதாரம் மேம்படும். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதிலும் வெற்றி காண்பீர்கள். தீராத பிரச்னைகளுக்குத் நிரந்தர தீர்வு கிடைக்கும். திடீர்த் தனவரவு உண்டாகும். நின்று போன வீடு கட்டும் பணி இனி விரைவில் முடிவுக்கு வரும். பொன், பொருள் சேர்க்க நேரம் வரும். வாகன யோகமுண்டு. வேண்டியவர்களின் திருமணத்தை நீங்கள் முன்னின்று செய்து முடிப்பீர்கள். சாதனை படைக்கும் மன தைரியம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்குவார்கள். உங்களின் சமூக அந்தஸ்து பன்மடங்கு உயரும்.

- Advertisement -

தொழில்:
வியாபாரத்தில் உங்களின் சுய அறிவைக் கொண்டு முன்னேறி அதற்கேற்ப லாபம் சம்பாதிப்பீர்கள். பழைய கடன்களை போராடித்தான் வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களை கவர புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதனால் வியாபாரம் விருத்தி அடையும். உத்தியோகஸ்தர்களுக்கு மனக்கஷ்டம் ஏற்படும். அலைகழிப்பு இருக்கும். ஆனாலும் நண்பர்களின் உதவியினால் தடைப்பட்ட வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சரியான நேரத்தில் சம்பள பாக்கி கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

Guru peyarchi palangal Thulam
Guru peyarchi palangal Thulam

கல்வி:
மாணவ, மாணவியர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்தபடி முன்னேற்றம் கிட்டும். தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல வேலை கிடைக்கப் பெறும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி உங்களது சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். கலைத்துறையினர் எதார்த்தமான பல நல்ல படைப்புகளை கொடுத்து பாராட்டை பெறுவீர்கள்.

ஜாக்கிரதையாக இருக்கவேண்டியவை:
எதையும் பல முறை யோசித்து செய்யுங்கள். எதையும் போராடித்தான் முடிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். புதிதாக அறிமுகமானவர்களை நம்ப வேண்டாம். தம்பதியருக்குள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எந்த பொறுப்புகளையும் யாரிடமும் ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக தலையிட்டு செயலாற்றுவது நன்மை பயக்கும். யாரிடமும் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நலம்.

guru

பரிகாரம்:
பைரவரை வழிபட்டு வாருங்கள் காரிய சித்தி உண்டாகும். விநாயகருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நலம். உங்களால் முடிந்த அளவு ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.