குரு பெயர்ச்சி பலன்கள் 2018 சிம்மம்

guru-peyarchi simmam

சிம்மம்:

simmam

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 04-10-2018 அன்று அவர்களின் ராசிக்கு 4 ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சியாகவிருக்கிறார். இதன் காரணமாக குடும்பத்தில் ஒற்றுமை குறைவும், பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடம் வம்பு சண்டைகள் ஏற்படக்கூடும். சுக வாழ்க்கையில் பாதிப்புகளை உண்டாகும். சுப காரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். புத்திர வழியில் மனக்கவலைகள் உருவாகும். பிறரின் சொந்த விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு பெரிய அளவில் கடன்கள் கொடுக்க கூடாது. தொழில் வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். பணியிடங்களில் தங்களின் பணிகளை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது.

சரியான நேரத்திற்கு உண்ண முடியாததால் அல்சர், அஜீரண கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடும். குடும்பத்தில் வயதானவர்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். உடலில் அசதியும், மனதில் கவலைகளும் அதிகரிக்கும். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும். குடும்ப பாரம்பரிய சொத்துகள் சம்மந்தமான விடயங்களில் சற்று அலைச்சல் உண்டாகும். குழந்தைகள் வழியில் பிரச்சனைகள் உண்டாகும். அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன்களை வசூலிப்பதில் சிலருக்கு சட்ட ரீதியான பிரச்சனைகள் எழும். நீதிமன்றங்கள் செல்லும் நிலையும் சிலருக்கு ஏற்படும்.

புதிய தொழில் வியாபாரங்களில் ஈடுபடுபவர்களுக்கும், அவற்றை விரிவு படுத்த நினைப்பவர்களுக்கும் அரசாங்க அனுமதி கிடைப்பதில் சற்று தாமதங்கள் ஆகும். தொழிலாளர்கள் மற்றும் பணியாட்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளாமலிருப்பதால் உடல் மற்றும் மன சோர்வை தடுக்க முடியும். பணியாளர்கள், ஊழியர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிர்பாரா பணியிடமாற்றங்களும் சிலருக்கு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் ஆதரவை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

Guru peyarchi palangal Simmam
Guru peyarchi palangal Simmam

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

- Advertisement -

போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று விலகும். எல்லாவற்றிலும் கடின முயற்சிகளை மேற்கொண்டாவது வெற்றி பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனங்கள் சொத்துக்களை வாங்க கூடிய யோகம் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் சிறந்த லாபம் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

தேவையற்ற பயணங்களால் பொருள் மற்றும் நேர விரயங்கள் உண்டாகும். பணியிலிருப்பவர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய யோகம் ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் பல முறை நன்கு ஆலோசித்து ஈடுபட வேண்டும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறும். வீண் விரயங்கள் ஏற்படுவதை தடுக்க வரவு செலவுகளில் கவனமுடன் இருக்க வேண்டும். வெளிநபர்கள் மற்றும் உறவினர்களிடமும் எதிலும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உருவாகக்கூடும். பொருள் வரவிற்கு பஞ்சமிருக்காது.

Guru peyarchi palangal Simmam
Guru peyarchi palangal Simmam

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

தொழில், வியாபாரங்களில் இருந்த போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். நல்ல லாபங்களும் கிடைக்க பெறும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சண்டைகள் ஏற்படலாம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். மாணவர்கள் கல்வியில் சாதனைகளை செய்வார்கள். நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகளும், பணியிட மாறுதல்களும் கிடைக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

புதிய முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் ஏற்படுவதோடு பொருள் விரயங்களையும் ஏற்படுத்தும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். கடன்களை அடைப்பதில் சற்று நெருக்கடிகள் ஏற்பட்டாலும் முயற்சி செய்து அடைத்துவிடுவீர்கள். எதிரிபார்த்த ஊதிய உயர்வுகள் சிறிது தாமதத்திற்கு பின்பு கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெற்றுவிடுவீர்கள். பெரிய அளவு முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் தொழில், வியாபார முயற்சிகளை சற்று ஒத்திப்போடுவது நல்லது. வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.

பரிகாரம்

வியாழக்கிழமைகள் தோறும் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது குரு பகவானின் அருளை பெற்று தரும். ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள், ஆடைகள், போன்றவற்றை தானமளிப்பது குரு பகவானின் முழுமையான அருளை பெற்று தரும் சிறந்த பரிகாரமாகும். தினமும் விநாய பெருமானையும் வழிபட்டு வர தடை தாமதங்கள் விலகும்.