குரு பெயர்ச்சி பலன்கள் 2018 துலாம்

guru-peyarchi thulam

துலாம்:

Thulam Rasi

கள்ளமில்லா உள்ளம் கொண்ட துலாம் ராசிக்காரர்களே 04-10-2018 அன்று உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் குரு பகவான் பெயர்ச்சியாகவிருக்கிறார். இதன் காரணமாக உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த அத்தனை பிரச்சனைகளும் தீரும். நின்று போன சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும். பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள், புதிய வீடு, புதிய வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். உடல் நிலை நன்றாக இருக்கும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். கொடுத்த கடன்களும் சரியான வட்டியுடன் வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும் உங்களிடம் வலிய வந்து சொந்தம் கொண்டாடுவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பல புனித தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். குழந்தைகள் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்.

அவ்வப்போது சிறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டாலும், விரைவில் சரியாகிவிடும். இனிப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடலும் மனமும் மிகவும் ஓய்வாகவும் அமைதியாகவும் இருப்பதை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அவர்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்வீர்கள். வாங்கிய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி தீர்ப்பீர்கள். உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறக்கூடும். நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் விரும்பியவாறு உங்களுக்கு வெற்றி உண்டாகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பணியிடங்களில் உங்களின் திறன்களை வெளிப்படுத்துவதற்கு சூழ்நிலை உருவாகும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் தேவையறிந்து பணி செய்து மக்களின் அபிமானத்தை பெற வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் ஏற்படும். விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை அடைத்து விடக்கூடிய அளவில் பொருளாதார நிலை உயரும். வெளிநாடுகளுக்கு சென்று பெயரும், புகழும் பெரும் யோகம் கலைஞர்களுக்கு உண்டாகும். பெண்களின் உடல் நிலை நன்றாக இருக்கும். ஆபரணம், ஆடை போன்றவற்றின் சேர்க்கை ஏற்படும்.

Guru peyarchi palangal Thulam
Guru peyarchi palangal Thulam

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04-10-2018 முதல் 21-10-2018 வரை இருக்கும் கால பலன்கள்

- Advertisement -

உங்களின் மறைமுக எதிரிகள் ஒழிந்து உங்களின் செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றிகளை காண்பீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளை செய்யாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையேயிருந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகிஸ்தர்கள் பணியில் திறம்பட செயல் புரிவார்கள். நீங்கள் எதிர்பார்த்த விடயங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடக்கும்.

குரு பகவான் அனுஷ நட்சத்திரத்தில் 22-10-2018 முதல் 20-12-2018 வரை இருக்கும் கால பலன்கள்

புதிய வீடு கட்டுதல் அல்லது புதிய வீட்டு மனை வாங்குதல் போன்ற யோகம் சிலருக்கு உண்டாகும். பெரிய அளவில் பொருளை முதலீடு செய்யும் தொழில்களில் நல்ல லாபத்தை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் புரிவார்கள். உடல் நிலை ஆரோக்கியம் மற்றும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21-12-2018 முதல் 12-3-2019 வரை இருக்கும் கால பலன்கள்

நீங்கள் எதிர்பாராத வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆன்மீக மற்றும் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். கோவில் சம்பந்தமான காரியங்கள், பொது நல சேவைகளிலும் ஈடுபடுவீர்கள்.

Guru peyarchi palangal Thulam
Guru peyarchi palangal Thulam

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 13-3-2019 முதல் 9-4-2019 வரை இருக்கும் கால பலன்கள்

சுப காரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தொழில் வியாபாரங்களில் போட்டி கடுமையாகும். கொடுத்த கடன்கள் அனைத்தும் வட்டியுடன் வசூலாகும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வெல்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலை இருக்கும்.

குரு பகவான் வக்ர கதியில் 10-4-2019 முதல் 6-8-2019 வரை

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களிடம் சுமூக உறவும், அவர்களால் தக்க சமயத்தில் உதவிகளும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களிலிருந்த பிரச்சனைகள் எல்லாம் நீங்கி உங்களுக்கு அந்த சொத்து வந்து சேரும். புத்திரர்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலையில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.

குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 7-08-2019 முதல் 28-10-2019 வரை இருக்கும் காலம்

எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை பெறும். சகோதரரர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். தடையின்றி பொருள் வரவு இருக்கும். தொழில், வியாபாரங்களில் முதலீட்டிற்கு அதிகமான லாபத்தை பெறுவீர்கள். பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பரிகாரம்

உங்கள் ராசிக்கு ராகு – கேது கிரகங்களின் தற்போதைய நிலை பாதகமாக இருப்பதால் செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவன், பைரவர் மற்றும் சரபேஸ்வரையும் வழிபடுவது நல்லது. தொழு நோயாளிகளுக்கு ஆடைகள், அன்ன தானம் போன்றவற்றை செய்வது சிறந்த பரிகாரமாகும்.