நாம் வாங்கக்கூடிய எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை அதிக அளவில் வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படாத நபர்களே இருக்க மாட்டார்கள். வீட்டில் தங்கம், வெள்ளி என்ற விலை உயர்ந்த பொருட்கள் நிறைவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும். அப்படி நிறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமை உடன் சேர்ந்து வரக்கூடிய பூச நட்சத்திர நாளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாழக்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய பூச நட்சத்திர நாளை குரு புஷ்யமி யோகம் என்று கூறுவோம். இந்த நாளில் நாம் வாங்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குரு புஷ்யமி யோகம் ஏற்படுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
குரு புஷ்யமி யோகம்
27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அதிலும் அந்த நட்சத்திரங்கள் வரக்கூடிய கிழமைக்கு ஏற்றவாறு அதன் பலன்களும் மாறுபடும் என்றே கூற வேண்டும். அந்த வகையில் பூச நட்சத்திரம் என்பது மிகவும் சிறப்புக்குரிய நட்சத்திரமாக திகழ்கிறது. தை மாதத்தில் வரக்கூடிய பூச நட்சத்திர நாளன்று தான் அனைத்து முருகன் ஆலயங்களிலும் தைப்பூசம் என்ற திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.
அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த பூச நட்சத்திரம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வருவதை தான் குரு புஷ்யமி யோகம் என்று கூறுவோம். வியாழக்கிழமையுடன் சேர்ந்து வரக்கூடிய பூச நட்சத்திர நாள் அன்று நம்மால் இயன்ற அளவு தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள், சொத்துக்கள் போன்றவற்றை வாங்க முயற்சி செய்ய வேண்டும். அன்றைய நாளில் நாம் வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் நமக்கு பல மடங்கு பெருகும் என்றே கூறப்படுகிறது. அப்படி சிறப்பு வாய்ந்த அந்த நாளில் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு கருமஞ்சள் வேண்டும். கருமஞ்சள் கிடைக்காத பட்சத்தில் அல்லது கிடைக்க தாமதமாகும் என்னும் பட்சத்தில் விரலி மஞ்சள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கருமஞ்சள் கிடைத்தவுடன் விரலி மஞ்சளை எடுத்து விட்டு அதற்கு பதிலாக கருமஞ்சளை வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் வெள்ளி நாணயம் ஒன்று வேண்டும். அடுத்ததாக மஞ்சள் நிற பட்டுத் துணி வேண்டும். ஒரிஜினல் பட்டு தான் வாங்க வேண்டும் என்று இல்லை. சைனிங்காக இருக்கக்கூடிய பட்டு துணியை கூட நாம் இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த துணியில் கருமஞ்சள் மற்றும் வெள்ளி நாணயத்தை வைத்து நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். வேறு எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மறுபடியும் எப்பொழுது பூச நட்சத்திரம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறதோ அப்பொழுது அந்த துணியையும் மஞ்சளையும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக துணியையும் கருமஞ்சளையும் வாங்கி அந்த வெள்ளி நாணயத்துடன் வைக்க வேண்டும். வெள்ளி நாணயம் வீட்டில் இல்லை என்பவர்கள் கண்டிப்பான முறையில் அருகில் இருக்கக்கூடிய நகை கடைக்கு சென்று ஒரு கிராமாவது வெள்ளி நாணயத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.
அந்த ஒரு கிராம் வெள்ளி நாணயம் வாங்குவதற்கு கூட பணம் இல்லை என்பவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை வெள்ளி நாணயமாக நினைத்து வைத்தும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை பூச நட்சத்திரம் முடிவடைவதற்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வியாழக்கிழமை அன்று செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் அதிகமாக திருமணங்கள் நடைபெறும், சுப முகூர்த்த நாட்கள் வரும் திருமணத்திற்காக நகை வாங்க வேண்டும்,ஆடை வாங்க வேண்டும். தீபாவளி பண்டிகை வரப்போகிறது. அதற்காக பொருட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் இன்றைய தினத்தில் சென்று வாங்கும் பொழுது அது பல மடங்காக நமக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: கோரிக்கைகளை நிறைவேற்றும் பைரவர் வழிபாடு
இவ்வளவு அற்புதமான இந்த நாளை தவறவிடாமல் இந்த பரிகாரத்தை செய்வதோடு நமக்கு அதிக அளவில் சேர வேண்டும் என்ற பொருட்களை நாம் வாங்கினோம் வாங்கி மகிழ் வாங்கினால் அவை பல மடங்கு பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொஉண்டாகும்.