ஜோதிடம் : உங்களுக்கு குரு திசை காலத்தில் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

guru-bagawan
- Advertisement -

ஜாதகத்தில் திசைகள் என்பது நவகிரகங்களில் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஜாதகரின் மீது ஆதிக்கம் செலுத்தும் காலம் ஆகும். அனைத்து கிரகங்களின் திசைகளை ஆராய்ந்து பார்க்கும் போது சுக்கிர திசை மற்றும் குரு திசை மட்டுமே நன்மையான பலன்களை அதிகம் தரும் திசைகளாக இருக்கிறது. இதில் குரு திசை காலத்தில் நமக்கு ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Nakshatra

ஒருவரது ஜாதகத்தில் குரு திசை மொத்தம் என்பது மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் குரு பகவானுக்குரிய நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குரு திசை முதல் திசையாக வரும். ஜாதகத்தில் குரு பலம் பெற்று குரு திசை முதல் திசையாக குழந்தை பருவத்திலேயே வந்தால் அந்த குழந்தைக்கு நல்ல உடல் ஆரோக்கியம், மற்றும் சுறுசுறுப்பு தன்மை இருக்கும். பெற்றோருக்கு நன்மையான பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

ஒருவரின் இளமை பருவத்தில் குரு திசை வருமானால் அந்த ஜாதகர் கல்வியில் மிகுந்த மேன்மையான நிலையை பெறுவார். மிக சிறந்த அறிவாற்றல் இருக்கும், தெய்வீக சிந்தனைகள் மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சமுதாயத்தில் நல்ல பெயரை எடுக்கும் அமைப்பு உண்டாகும். வாழ்வில் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி மகிழ்வுடன் வாழ்வார்கள்.

guru-bagawan

மத்திம வயதுகளில் குரு திசை நடைபெறுமானால் வரைமுறையின்றி பண வரவு இருக்கும். நல்ல பழக்க வழக்கங்களோடு வாழ்வார்கள். ஆன்மீக விடயங்கள், பொது நலப் பணிகளில் ஈடுபடும் ஆர்வமும், வாய்ப்பும் ஏற்படும். மக்கள் செல்வாக்கு ஏற்படும், சமுதாயத்தால் கௌரவிக்கப்படும் நிலை உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் அதிக நாட்டம், தெய்வ தரிசனங்களுக்காக தீர்த்தயாத்திரைகள், பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். தாராளமான மனப்பான்மை உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திடீர் செல்வ சேர்க்கையை தரும் அமைப்பு

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Guru thisai in Tamil. It is also called as Jathagathil guru in Tamil or Guru bhagavan in Tamil or Guru palangal in Tamil.

- Advertisement -