குரு வக்ர நிவர்த்தி 14/9/2021 – மகரத்திற்கு செல்லும் குருவால் என்னென்ன நன்மைகள் நடக்கும்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

guru-astro
- Advertisement -

வருடத்திற்கு ஒரு முறை குரு பகவான் பெயர்ச்சி நடைபெற்றாலும் இடையில் அதிசாரமாகவும், வக்ரமாகவும் மற்ற ராசிகளுக்கும் குரு பகவான் பயணிப்பது உண்டு. அந்த வகையில் ஜூன் 20ஆம் தேதி முதல் கும்பத்தில் வக்கிர சஞ்சாரத்தில் துவங்கிய குரு பகவான் வரும் செவ்வாய்க்கிழமை அன்று 11:43 மணி அளவில் வக்ர நிவர்த்தி பெற கும்பத்திலிருந்து மகரத்திற்கு வருகிறார். மீண்டும் நவம்பர் 21 அதிகாலை 2:06 மணி அளவில் கும்பத்திற்கு சென்று விடுவார். இதற்கு இடையில் இருக்கும் இந்த இரண்டு மாத காலம் 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்களை கொடுக்க இருக்கிறார்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நிறைய நன்மைகளை கொடுக்கப் போகிறார். இதுவரை தொட்டதெல்லாம் போராட்டமாக இருந்து வந்த உங்களுக்கு இனி அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கப் போகிறார். நினைத்ததை சாதித்து முன்னேற்ற பாதையில் செல்லக் கூடிய அற்புத அமைப்பாக இருக்கிறது. விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வருமானம் உயர கூடுதல் உழைப்பை கொடுத்தால் நிச்சயம் பன்மடங்கு லாபத்தை பெறலாம்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி இதுவரை நிலவி வந்த அனைத்து தடைகளையும் அகற்றி வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. நீங்கள் நடக்குமா? நடக்காதா? என்று நினைத்தவைகள் யாவும் நல்லபடியாக நடந்தேறும். குடும்ப ஒற்றுமை வலுவாக இருக்க கூடுதல் அக்கறையும், அரவணைப்பும் தேவை. சாதுரியமான முடிவை எடுப்பதன் மூலம் முன்னேற்றம் காணப்போகிறீர்கள்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வருமான ரீதியான பிரச்சனைகளை தீர்க்கும். பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும். அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டு. புதிய விஷயங்களை தவிர்த்து ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்களை சிறப்பாக செய்தால் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். திடீர் அதிர்ஷ்டம் திக்குமுக்காட செய்யும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி பகைவர்களை கூட நண்பர்களாக மாற்றி தரப் போகிறது. ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் தீர்ந்து புத்துணர்வுடன் செயல்பட வைக்க போகிறது. வரவிற்கு ஏற்ப செலவுகள் ஏற்பட்டாலும் வேறு வழியில் உங்களுக்கு பண தேவைகள் பூர்த்தியாகி விடும். உயர் பதவிகள், புகழ், மதிப்பு போன்றவை அதிகரிக்கும் யோகம் உண்டு. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும் என்பதை நினைவில் கொண்டு செயல்படலாம்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அற்புதம் செய்ய போகிறது. வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி தானாகவே வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சகோதர, சகோதரர்களுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை வலுப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பாராத விதங்களில் அதிர்ஷ்டம் வந்து சேரும். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். தொட்டது துலங்க செய்யும் இந்த காலகட்டத்தில் உங்கள் முழு உழைப்பை செலுத்துவது உத்தமம்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அரிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். பிரிந்த உறவுகள் கூட மீண்டும் இணைவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களை சாதக பலன்களை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த தடைகள் விலகி முன்னேற்றம் இருக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அற்புதமான நன்மைகளை செய்ய இருக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்து திக்குமுக்காடச் செய்யும். உங்கள் பயத்தை கலைத்து புதிய தன்னம்பிக்கை பிறக்கச் செய்யும். பழைய வீடுகளை புதுப்பிப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் விலகி அனுகூலமான பலன்களை கொடுக்கும். நீங்கள் செய்த புண்ணியம் அதற்குரிய பலன்களை கொடுக்கும் காலமாக அமையும் என்பதால் இறை வழிபாடுகளை மேற்கொள்வது சிறப்பு.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வேலைவாய்ப்பில் இருந்த தடைகளை விலக்கும். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். எதிலும் ஏற்றம் காண இருக்கிறீர்கள் என்பதால் புதிய விஷயங்களை நம்பிக்கையோடு, மனிதர்களின் ஆதரவு ஓடத் துவங்குவது சிறப்பு. கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீர ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. ஆரோக்கிய தடைகள், பணப் பிரச்சனைகள் தீரும் அற்புத காலமாக இருக்க போகிறது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நீண்ட நாளாக இருந்து வந்த கனவுகளை நிறைவேற்றிக் கொடுக்கும் அற்புத காலமாக மாற்றிக் கொடுக்க போகிறது. குரு வக்ர நிவர்த்தி காலத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். வீடு, நிலம், வாகனம் போன்ற விஷயங்களை விற்பதில் அதிக லாபம் பெறுவீர்கள். புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் யோகம் உண்டு. பொருளாதார ரீதியான தடைகள் விலகி வருமானம் உயரும். மனக்குழப்பம் தீர்ந்து தெளிவு பிறக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஏற்ற, இறக்கமான பலன்களை கொடுக்கும். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் குருவால் பெரிதாக நன்மைகள் ஒன்றும் நடக்கப் போவதில்லை. குரு இருக்கும் இடத்தை விட, குரு பார்க்கும் இடத்துக்குத் தான் மதிப்பு அதிகம். எனவே எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. தொழில், வீடு, வேலை போன்ற விஷயங்கள் மூலம் இட மாற்றம் நிகழலாம். சாதுரியமாக செயல்பட்டால் அனைத்தையும் உங்கள் வசம் ஆக்கிக் கொள்ளலாம். அவ்வபோது அதிர்ஷ்டம் வீட்டு கதவை தட்டும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நன்மைகளை கொடுக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது மிகவும் முக்கியம். கவனக் குறைவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை நீதியான பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான சூழ்நிலை நிலவும். தொழில் வாய்ப்புகள் அமையப் பெறும். குடும்பத்தில் சுப காரிய தடைகள் விலகி குதூகலம் உண்டாகும். பணத் தேவைகள் பூர்த்தியாகி பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகளை நீக்கும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி இந்த விஷயங்களை மீட்டுத் தரும் அற்புத வாய்ப்பாக இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியை நோக்கி பயணிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, புகழ் போன்றவற்றில் சாதக பலன் கிடைக்கும். வம்பு வழக்குகளில் வெற்றி உங்களுக்கு சாதகமாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் நிலவி வந்த குறைகள் விலகி நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -