தினம் உணவின் மூலமாகவே உங்கள் தலைமுடி உதிர்தலை நிறுத்தி வேகமாக வளர செய்யும் ரகசியம் என்ன? நோ கெமிக்கல்ஸ்! நோ ஹேர்ஃபால்!

kitchen-hair-fall
- Advertisement -

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே நம் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கிறது. இந்த சத்துக்கள் தான் மண்டை ஓட்டில் இருக்கும் தலை முடியின் வேர்க்கால்களுக்கு வலுவாக அமையும். கெமிக்கல்ஸ் வகைகளை பயன்படுத்தி துரிதமாக தீர்வு காணும் இன்றைய இளைய தலைமுறைக்கு சற்று தாமதமாகவே இந்த விஷயம் தெரிய வருகிறது. நாம் சாப்பிடும் அனுதின உணவின் மூலமே தலைமுடி உதிர்வை நிறுத்தி வேகமாக வளர செய்ய முடியும்! அதன் ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு செடியின் வளர்ச்சிக்கு உரம் கொடுப்பது அவசியமாகும். இந்த உரம் எங்கு கொடுக்கிறோம்? செடிக்கு மேலே யாரும் உரத்தை கொடுப்பது கிடையாது. செடியின் வேர்க்கால்கள் வலுவாக இருக்க, செடியின் வேர்க்கால்களை சுற்றிலும் உரத்தை கொடுக்கிறோம். செடிக்கு தண்ணீரை ஊற்றி, பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கிறோம் ஆனால் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கால்களையே சேருகிறது. அதே போல தான் நம் தலை முடியும்! தலைக்கு மேலே நீங்கள் செய்யும் எந்த ஒரு விஷயமும் வேர்க்கால்கள் வரை சென்று அடையும் பொழுது தான் பயன் பெறுகிறது எனவே வேர்கால்களுக்கு கொடுக்கக்கூடிய சத்துக்கள் மிகவும் அவசியமாக இருக்கிறது.

- Advertisement -

எந்த எண்ணெய் தேய்த்து நீங்கள் தலைக்கு மசாஜ் செய்தாலும் உடலுக்கு உள்ளே இருக்கும் சத்துக்களும் தலைமுடி பிரச்சனைக்கு மிக முக்கியமான தீர்வை கொடுக்கிறது என்பதையும் மறந்து விடக்கூடாது. வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தலைமுடி பிரச்சனையை வேகமாக சரி செய்ய முடியும். இது வேர்க்கால்களுக்கு மாய்ஸ்ரைஸ் செய்யக்கூடிய அற்புதமான ஒரு வைட்டமின் ஆகும் எனவே வைட்டமின் சி அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கொய்யா பழம் தினமும் ஒன்றிரண்டு தொடர்ந்து தவறாமல் சாப்பிட்டு வர வைட்டமின் சி சத்து கிடைத்து தலைமுடி வளர்ச்சி சீராக இருக்கும்.

முந்தைய காலங்களில் கீரை வகைகளை அதிகம் உண்டு வந்தனர். ஆனால் இன்று கீரை வளரும் இடம் சரியில்லை, கீரை சமைக்க நேரமில்லை என்று ஏதோ ஒரு காரணத்தை கூறி இதை தவிர்த்து வருகிறோம். கீரையில் இருக்கும் ஏராளமான சத்துக்கள் தலைமுடியை அதிக அளவில் பாதுகாக்கும் எனவே வாரம் இரு முறையாவது கீரையை கடைந்து சாப்பிட வேண்டும். இதனால் தலையில் வேர்கால்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி நன்கு வலுவாக கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

கம்பு, ராகி, சோளம் போன்ற சிறு தானியங்களும், பெரிய மீன்கள் அல்லாமல் சிறு சிறு மீன்களில் இருக்கும் ஒமேகா 3 சத்துக்களும் ஒரு நாளைக்கு தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய முக்கியமான சத்துக்களாக இருக்கின்றன. எனவே சிறு தானியங்கள் மற்றும் சிறு மீன்களை தினம் உணவில் ஏதாவது ஒரு வகையில் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதே போல லவங்கப்பட்டை தலைமுடியின் சீரான வளர்ச்சிக்கும், அதிவேக வளர்ச்சிக்கும் உந்துகோளாக இருக்கிறது. எனவே தினமும் நீங்கள் டீ குடிக்கும் பொழுது ஒரு லவங்கப்பட்டையை போட்டு கொதிக்க வைத்து டீ குடித்து வாருங்கள். இப்படி கீரை, கொய்யாப்பழம், சிறு மீன்கள், சிறு தானியங்கள், லவங்கப்பட்டை ஆகியவற்றை தினமும் ஒரு மாதத்திற்கு தவறாமல் ஏதாவது ஒரு வகையில் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டே வாருங்கள் தலைமுடி பிரச்சனை முற்றிலுமாக இயற்கையான முறையில் சீர் செய்யப்பட்டு அதிவேகமாக நன்கு உங்களுடைய முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர துவங்கும்.

- Advertisement -