இந்த பயனுள்ள 8 டிப்ஸ் தெரிந்து வைத்திருந்தால் தலைமுடி பிரச்சனை இனி இல்லை!

- Advertisement -

இன்று இளம் வயதிலேயே தலைமுடி பிரச்சனை தலை எடுக்க துவங்கி விட்டது. வயது ஆக ஆக தான் தலைமுடி பிரச்சனை வரும், ஆனால் இப்பொழுது வயதுக்கு வந்தாலே தலைமுடி பிரச்சனை வரும் அளவிற்கு சூழ்நிலை மாறி போய்விட்டது. உண்ணும் உணவும், சுற்றுச்சூழலும் தலைமுடி பிரச்சனைக்கு மிகப்பெரிய காரணம் என்றாலும், முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு பல்வேறு வகையிலும் தொந்தரவுகள் உள்ளன. எத்தகைய தலைமுடி பிரச்சனையையும் சரி செய்யக்கூடிய அற்புதமான 8 டிப்ஸ் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

குறிப்பு 1:
தலையில் பொடுகு அதிகமாக இருந்தால் மருதாணி இலையை சிறிதளவு எடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை கொஞ்சம் போல தலையில் முடியின் வேர்கால்களில் மட்டும் தடவி உலர விட்டு கழுவினால் பொடுகு தொல்லை உடனே போய்விடும், முடி உதிர்வதும் தடுக்கப்படும்.

- Advertisement -

குறிப்பு 2:
கூந்தல் அடர்த்தியாக வளரவும், பொடுகு தொல்லை மறையவும் ஒரு கைப்பிடி அளவிற்கு செம்பருத்தி இலைகளை பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தலை முழுவதும் தடவி ஊற விட்டு பின் அலசினால் போதும், பொடுகு மறைந்து கூந்தல் அடர்த்தியாக வளரும்.

குறிப்பு 3:
சிலருக்கு செம்பட்டை முடி இருக்கும். முடியின் நிறமே கருப்பாக இல்லாமல் சிவப்பாகவும், பிரவுன் நிறத்திலும் இருக்க கூடிய இந்த செம்பட்டை முடி மறைய ஒரு கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்து வாரம் ஒரு முறை தலை முழுவதும் தடவி 10 நிமிடம் ஊற விட்டு குளித்து வந்தால் முடி கருப்பாக மாறும்.

- Advertisement -

குறிப்பு 4:
வலுவிழந்த முடி, மெல்லிய முடி உள்ளவர்கள் முட்டையை பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து குளித்து வரலாம், நல்ல ரிசல்ட் கிடைக்கும். இதன் வாசம் பிடிக்காதவர்கள் வெள்ளை கருவை மட்டும் பயன்படுத்தலாம், நீச்ச வாடை வராது. முடியும் ஆரோக்கியமாக வழுவாக வளரும்.

குறிப்பு 5:
முடி உதிர்வு பிரச்சினை முற்றிலுமாக சரி செய்வதற்கு ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவில் கலந்து மிதமாக அடுப்பில் சூடேற்றி, பின் தலை முழுவதும் சுழற்சி முறையில் மசாஜ் செய்து வர மீண்டும் புதிய முடி வளர துவங்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
இளநரை மறைவதற்கு கருப்பு எள் மூன்று ஸ்பூன், கரிசலாங்கண்ணி பொடி ஒரு ஸ்பூன், நெல்லிக்காய் பொடி மற்றும் செம்பருத்தி பொடி தலா அரை ஸ்பூன், 100ml தேங்காய் எண்ணெயில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் ஆறியதும் வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு மசாஜ் செய்து தடவி வர விரைவிலேயே இளநரை மறையும்.

குறிப்பு 7:
வறண்ட கூந்தல் இருப்பவர்கள் கற்றாழை ஜெல்லை தலை முழுவதும் மசாஜ் செய்யுங்கள். இதனால் உச்சந்தலையில் இருக்கக்கூடிய பிஹெச் அளவு சமன்படும். முடியும் வறண்ட தன்மை நீங்கி ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் ஹேர் டேமேஜ் ஆவது தடுக்கப்படும்.

இதையும் படிக்கலாமே:
முகத்தில் சுருக்கங்களாக இருக்கிறதா? ஒரே வாரத்தில் சுருக்கம் நீங்கி உங்க முகம் இளமையாக இருக்க வீட்டில் இருக்கும் 2 பொருளில் இதை ட்ரை பண்ணுங்க!

குறிப்பு 8:
கொத்து கொத்தாக உதிரும் முடியை தடுத்து நிறுத்தி மீண்டும் வளர செய்ய ரெண்டு கைப்பிடி வேப்பிலையை அரை பக்கெட் அளவிற்கு தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து மறுநாள் குளிக்கும் பொழுது இந்த தண்ணீரைக் கொண்டு தலைக்கு அலச வேண்டும். முடி உதிர்வு நிற்கும் வரை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் வேகமாக வளரும்.

- Advertisement -