முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீங்க

oily skin
- Advertisement -

ஒவ்வொருவருடைய சருமமும் ஒவ்வொரு வகைகளாக இருக்கும். இதில் எண்ணெய் பசை மிகுந்த சருமம் மிகவும் சோர்வாக தென்படும். வறண்ட சருமம் குளிர்காலங்களில் மிகவும் வறட்சி ஏற்பட்டு தோல் வெடிப்புகள் ஏற்படும். இப்படி ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கும். அந்த வகையில் இன்று நாம் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் அதிகப்படியாக சுரக்கும் எண்ணெய் பசையை குறைப்பது எப்படி என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம் தோலிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும். அப்படி சுரப்பதால் தான் நம் தோல் இளமையாக தென்படுகிறது. இதே எண்ணெய் பசை சுரக்காமல் இருந்தால் தோல் வறட்சி அடைந்து விரைவிலேயே சுருக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே ஏற்படும். அதிகப்படியான எண்ணெய் சுரக்கும் பொழுது அதனால் எப்பொழுதுமே முகத்தில் ஒருவித சோர்வு தென்படுவது போல் தோன்றும். அதுமட்டுமல்லாமல் முகப்பரு பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

- Advertisement -

சரி இப்படி அதிகப்படியாக சுரக்கக்கூடிய எண்ணெய் பசையை நீக்க உதவக்கூடிய ஃபேஸ் பேக் பற்றி இப்பொழுது பார்ப்போம். இந்த ஃபேஸ் பேகை நாம் இயற்கையான முறையில் தான் தயார் செய்யப் போகிறோம் என்பதால் இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. அதிகப்படியாக சுரக்கக்கூடிய எண்ணெய் மட்டுமே கட்டுப்படுத்தும் என்பதால் முக வறட்சியும் ஏற்படாது. இதை தயார் செய்வதற்கு முதலில் பப்பாளி பழ சாறு ஒரு ஸ்பூன் தேவைப்படும்.

பிறகு அதில் அரை ஸ்பூன் அளவிற்கு வேப்ப இலை பொடியை சேர்க்க வேண்டும். அடுத்ததாக முல்தானி மெட்டி பவுடர் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். இவை மூன்றையும் நன்றாக கலந்த பிறகு ஃபேஸ் பேக் போடும் பதத்திற்கு தேவையான அளவு பன்னீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் உலர விட வேண்டும். நன்றாக உணர்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் முகத்தில் ஏற்படக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பசை ஆனது குறைய ஆரம்பிப்பதோடு மட்டுமல்லாமல் எண்ணெய் பசையால் ஏற்படக்கூடிய முகப்பருக்கள் வேப்பிலை பொடியால் குறைய ஆரம்பிக்கும். மேலும் முகப்பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் நீங்குவதற்கு முல்தானி மெட்டி உதவுகிறது. எண்ணெய் பசையை குறைப்பதற்கு பப்பாளி உதவுகிறது.

இப்படி நாம் இந்த பேஸ் பேக்கில் சேர்த்த ஒவ்வொரு பொருட்களும் நம் சருமத்திற்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் தரும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு மூன்று முறை என்ற வீதம் உபயோகப்படுத்துவதன் மூலம் நல்ல மாற்றத்தை கண்கூடாக உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: தேவையற்ற முடிகளை நீக்க ஃபேஸ் பேக்

கண்ட கண்ட கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இப்படி இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் செய்து முகத்திற்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் எளிமையான முறையில் எண்ணெய் பசையை குறைக்க முடியும்.

- Advertisement -