தலையில் வேரிலிருந்து உதிரும் முடியை சட்டுன்னு நிறுத்த தேங்காய் எண்ணெயுடன் இந்த 1 பொருளை சேர்த்தால் போதும்! வேறு எதுவும் தேவையே கிடையாது.

hair-fall-oil
- Advertisement -

முடி உதிர்வது என்பது ரொம்பவும் சாதாரண விஷயம் போல் தோன்றினாலும் நாளடைவில் இந்த பிரச்சனை தொடர்ந்தால் நம்முடைய முக அழகும் கெட்டுவிடும் அபாயம் உண்டு. சாதாரணமாக ஒரு நாளைக்கு இவ்வளவு முடி உதிரும் என்பது இயற்கையானது தான், ஆனாலும் ஒரு அளவுக்கு மேல் உதிரும் பொழுது நமக்கே ஒரு பதட்டம் ஏற்படும். அதுவும் உச்சந்தலையில் இருந்து வேருடன் ஒவ்வொரு முடியாக கொட்டுவதை அலட்சியமாக விட்டு விடக்கூடாது

இப்படி வேரில் இருந்து கொட்டக்கூடிய முடி சிறுக சிறுக ஒரு கட்டத்தில் கொத்துக்கொத்தாக இழக்க நேரிடலாம் எனவே இதை ஆரம்ப காலத்திலேயே சரி செய்து விடுவது மிகவும் நல்லது. இழந்த முடியை மீண்டும் வளர செய்யவும், முடி உதிராமல் கட்டுப்படுத்தவும் தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளையும் சேர்த்து பயன்படுத்துங்கள் போதும்! இதற்காக பெரிதாக நாம் ஒன்றும் மெனக்கெட போவதில்லை. தலை முடி பிரச்சனைக்கு தீர்வு தரும் அந்த ரகசியம் என்ன? என்பதை இனி இந்த பதிவில் தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

- Advertisement -

தலைமுடி வேரில் இருந்து உதிர்வதற்கு பெரும்பாலும் உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கு ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு முடியாக வேருடன் கொட்டுகிறது என்றால் உங்கள் உடம்பில் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. இதனால் தலையில் வறட்சி ஏற்பட்டு, சரியான ரத்த ஓட்டம் இல்லாமல் முடி ஒவ்வொன்றாக உதிர துவங்குகிறது. இந்த பிரச்சனையை ரொம்பவும் சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு பொருள் என்றால் அது ‘விளக்கெண்ணை’ ஆகும்.

தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயில் இருக்கும் சத்துக்கள் நம் உடம்பில் இருக்கும் உஷ்ணத்தையும் குறைத்து, முடி வளர்ச்சியையும் அதிகரிக்க செய்யும். ரத்த ஓட்டத்தை சீராக்கி புதிய முடியை வளர வேர்கால்களை தூண்டிவிடும். இதனால் இழந்த இடத்தில் கூட முடி முளைக்க துவங்கும். சிறிதளவு விளக்கெண்ணையை தூங்கும் முன் புருவங்களில் தடவி விட்டு தூங்கினால் புருவ முடி நன்கு அடர்த்தியாக வளரும். விளக்கெண்ணையை பயன்படுத்தினால் அதில் இருக்கும் ஒருவிதமான பிசுபிசுப்பு தன்மை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். மேலும் சுத்தமான விளக்கெண்ணையை அப்படியே தலையில் தடவவும் முடியாது. பிறகு என்ன செய்ய வேண்டும்?

- Advertisement -

தேங்காய் எண்ணெய் வாங்குபவர்கள் கடைகளில் விற்கப்படும் எண்ணெயை வாங்காமல் மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 100 எம்எல் அளவிற்கு சுத்தமான விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளக்கெண்ணெய் வெள்ளையாக இருக்கும். இது சுத்தமான விளக்கெண்ணெய் கிடையாது. நல்ல அடர்த்தியான பிரவுன் இடத்தில் நல்லெண்ணெய் போலவே இருக்கும் விளக்கெண்ணை தான் சுத்தமான விளக்கெண்ணெய். அரை லிட்டருக்கு 50ml என்று உங்கள் தேவைக்கு ஏற்ப கலந்து கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயுடன் இந்த அளவில் நீங்கள் விளக்கெண்ணையை சேர்த்து வைத்து விட்டால் உங்களுக்கு பிசுபிசுப்பு தன்மை சுத்தமாக இருக்காது. எப்பொழுதும் போல தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவது போலவே இந்த எண்ணெயையும் தடவுங்கள். விளக்கெண்ணையில் இருக்கும் குளிர்ச்சி தன்மை சளி பிடிக்க வைக்கும் எனவே நான்கு மிளகுகளை பொடித்து எண்ணெயில் போட்டுக் கொள்ளுங்கள். மிளகில் இருக்கும் உஷ்ணம் விளக்கெண்ணையில் இருக்கும் குளிர்ச்சி தன்மையை சமன் செய்துவிடும். அதன் பிறகு வழக்கம் போல நீங்கள் தினமும் இந்த எண்ணெயை மசாஜ் செய்வது போல செய்து, தலை முழுவதும் தடவி நன்கு தலை முடியை சிக்குகள் இல்லாமல் வாரி கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தாலே போதும், வேரிலிருந்து கொட்டக்கூடிய தலைமுடி சட்டென நின்றுவிடும். மீண்டும் இழந்த இடத்திலிருந்தும் முடி முளைக்க துவங்கும். நாளடைவில் முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும். கருகருவென அலைபாயும் கூந்தல் பெற இந்த ஒரு குறிப்பு போதும்.

- Advertisement -