கொத்து கொத்தாக கொட்டும் முடி உதிர்வை தடுக்கவும், முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளரவும் இந்த வெங்காயச் சாறு மட்டும் போதும்

hair
- Advertisement -

முடி உதிர்வு என்பது இப்பொழுது அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் முடிவுதிர்வு ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் முந்தய காலத்தில் பலருக்கும் நீளமான முடிகள் இருந்தது. ஆனால் இன்று அதிகப்படியான முடி இருப்பதில்லை. இருக்கின்ற முடியை கொட்டாமல் பாதுகாப்பதே பெரும் கஷ்டமாக இருக்கிறது. முடிவுதிர்வு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் இருக்கிறது. வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் தான் முடி உதிர்வு பிரச்சனையை தீர்ப்பதற்கு பெரும் காரணமாக அமைகிறது. முடி உதிர்தல், முடி வளர்ச்சி, பொடுகு, பேன் தொல்லை, முடி வெடிப்பு ஆகிய அனைத்து பிரச்சனைக்கும் வெங்காயம் சிறந்த பலனை அளிக்கிறது. வாருங்கள் இந்த வெங்காயத்தைப் பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்சினையை எவ்வாறு சரி செய்ய முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

ஆய்வு செய்து பார்த்ததில் முடி கொட்டி வழுக்கை விழுந்த இடத்தில் கூட மறுபடியும் முடி வளர்ச்சியை ஏற்படுத்த உதவுகிறது இந்த வெங்காயம். எனவே முடி அதிகமாக கொட்டி விட்டால் அந்த இடத்தில் வெங்காயத்தை பயன்படுத்தி வாருங்கள். முடி உதிர்ந்த இடத்தில் மறுபடியும் முடி வளர ஆரம்பிக்கும். வெங்காயத்தில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் ஸ்கால்பில் எந்தவித தோற்றும் வராமல் தடுக்கும். இந்த வெங்காயத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஹேர் மாஸ்க்குகளை செய்ய முடியும்.

- Advertisement -

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு வடிகட்டி வைத்து நன்றாக வடிகட்டி வெங்காயச்சாறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு இந்த வெங்காய சாறுடன் சிறிதளவு சுடு தண்ணீர் கலந்து அதனை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் சுடுதண்ணீரில் ஒரு டவலை நினைத்து, அதனை தலையில் கட்டி 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும்.

- Advertisement -

அதற்குப் பிறகு தலைமுடியை மைல்டான ஷாம்பு அல்லது குளிர்ந்த நீரை வைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து பாருங்கள். உங்கள் முடி வேகமாக வளர ஆரம்பிக்கும். கொஞ்சம் நாட்களிலேயே நீங்கள் அசந்து போகும் அளவிற்கு உங்கள் முடி வளர்ச்சி அதிகரித்து அதன் அளவும் அதிகமாக இருக்கும்.

அதேபோல் வெங்காய சாறுடன் விட்டமின் ஈ மாத்திரையையும் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, மூடி அதிகமாக கொட்டி உள்ள இடத்தில் ஆங்காங்கே தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஒரு இருபது நிமிடத்திற்கு இவ்வாறு மசாஜ் செய்து முடித்த பிறகு தலை முடியை இறுக்கமாக கட்டிவிட்டு, அதன் பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். இவற்றில் எந்த முறையை யாவது நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வர உங்களின் முடி வளர்ச்சி அதிகமாக இருப்பதை விரைவில் உணர முடியும்.

- Advertisement -