முடி உதிர்வு பிரச்சனைக்கு உடனடியா ஒரு முடிவு கட்டலாமா? கையில் தொட்டாலே உங்க முடி, கையோடு வருதா? இந்த டிப்ஸ் உங்களுக்காக மட்டுமே.

hair
- Advertisement -

முடி உதிர்வு என்பது சாதாரணமாக இயற்கையாக எல்லோருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனை தான். அந்த தலை முடி உதிர்வு கொஞ்சம் அதிகமானால் கூட தலைமுடியில் அடர்த்தி குறைந்து விடும். தலைமுடி உதிர்வது நீண்ட நாட்களுக்கு நீடித்தால், சில பேருக்கு வழுக்கை கூட விழும் அளவுக்கு பிரச்சனைகள் பெரியதாகும். மிக மிக எளிமையான முறையில் இந்த தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க எளிமையான ஒரு ஹேர் பேக்கை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டால், அலசுவதற்கு சிரமமும் இருக்காது. ஏனென்றால் இந்த ஹேர் பேக் லிக்விட் போல தான் இருக்கும். இதை சீரம் என்றும் சொல்லலாம்.

தலை முடி உதிர்வை கட்டுப்படுத்தும் ஹேர் சீரம்:
இந்த ஹேர்சீரம் தயார் செய்ய அரிசி கலந்த தண்ணீர், வெந்தயம், சின்ன வெங்காயம் இந்த 3 பொருட்கள் நமக்குப் போதும். நம் எல்லோர் வீட்டிலும் சாதம் வடிப்போம் அல்லவா. அரிசியை ஒருமுறை சுத்தமாக கழுவி விட்டு, அதில் நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். அந்த அரிசி ஊற வைத்த தண்ணீரை அரைக்கப் அளவு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரிசி கழுவிய தண்ணீரில், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் போட்டு, ஊற வைக்க வேண்டும். முந்தைய நாள் இரவே இந்த அரிசி கழுவிய தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலை எழுந்து வெந்தயத்தை வடிகட்டி தனியாக எடுத்து விடுங்கள். வெந்தயம் நமக்கு தேவைப்படாது. அரிசி களைந்த தண்ணீரில் வெந்தயத்தின் சத்து நன்றாக ஊறி இறங்கி இருக்கும் அல்லவா. அது நமக்கு போதும். பிறகு 6 சின்ன வெங்காயங்களை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் உரித்த சின்ன வெங்காயங்களை போட்டு, அரிசி கலைந்த தண்ணீரில் வெந்தயம் ஊறி இருக்கிறது அல்லவா, அந்த தண்ணீரை ஊற்றி, அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். சூப்பரான சத்து நிறைந்த சீரம் இப்போது தயார். இந்த சீரம் தான் தலைமுடி உதிர்வை சரி செய்ய போகிறது. ஒரு பஞ்சில் இந்த சீரம் நனைத்து தலையில் அப்ளை செய்ய வேண்டும். தலையில் தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு தலைமுடியை பாகம் பாகங்களாக பிரித்து வேர்க்கால்களில் படும்படி, இந்த சீரத்தை அப்ளை செய்து விட்டு  கொண்டை கட்டிக்கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும். வாரத்தில் மூன்று நாள், அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள் இந்த சீரமை நம் தலைக்கு போட்டு வர தலைமுடி உதிர்வு சீக்கிரம் கட்டுப்படும்.

இதையும் படிக்கலாமே: முகப்பருக்கள், கருந்திட்டுக்கள் வராமல் உங்க ஸ்கின் பேபி சாஃப்டாக இருக்க இந்த தண்ணிய பயன்படுத்தலாமே!

நாம் தயார் செய்த இந்த லிக்விடை பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாது என்பது குறிப்பிடத்தக்கது. மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை அரைத்து வடிகட்டிய பின்பு ஒரு நாளைக்கு தேவையான லிக்விடை மற்றும் தனியாக எடுத்து பயன்படுத்துங்கள். மீதம் இருக்கும் லிக்விடை கைப்படாமல் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இந்த அழகு குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -