முடி கொட்டும் பிரச்சனை பேன் தொல்லை பொடுகுத் தொல்லை இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக இந்த இலை மட்டும் இருந்தால் போதும்

hair
- Advertisement -

காலம் மாறினாலும் நமது பெண்களின் மனம் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும். அன்று முதல் இன்று வரை பெண்கள் தங்கள் தலைமுடியை மிகவும் கவனமாக பராமரித்துக் கொள்வார்கள். தலைமுடி கொஞ்சமாக கொட்ட ஆரம்பித்தாலே, பெண்களுக்கு இது பெரும் கவலையாக மாறிவிடும். ஏனென்றால் தங்கள் தலையில் முடி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூட அவர்களால் பார்க்க முடியாது. அவ்வாறு முடி கொட்ட ஆரம்பித்தால் என்ன ஆகுமோ என்ற அச்சம் அவர்களை சூழ்ந்து கொள்ளும். தலை முடி பிரச்சனையில் ஆண்களை விட பெண்களே அதிகம் பயம் கொள்வார்கள். எனவே பொடுகு பிரச்சனை வந்தாலும், முடி கொட்டும் பிரச்சனை வந்தாலும், பேன் பிரச்சனை என்றாலும் பெண்களுக்கு அதில் தீர்வு கிடைத்திட வேண்டும். எனவே தங்களால் முடிந்தவரை இவற்றை சரி செய்ய கடைகளுக்குச் சென்று மருத்துவ பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவார்கள். இதனால் அதிகமாக முடி கொட்டுமே தவிர தீர்வு கிடைப்பதில்லை. ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பப்பாளி மரத்தின் இலை மட்டும் இருந்தால் போதும். இந்த அனைத்து பிரச்சனைகளையும் உடனே சரி செய்து விடலாம். வாருங்கள் அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

தேவையான பொருட்கள்:
பப்பாளி இலை – 2, ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இரண்டு பப்பாளி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பப்பாளி இலையின் சாறை ஒரு வடிகட்டி பயன்படுத்தி தனியாக வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு தாளிப்பு கரண்டி அல்லது இரும்பு கடாயில் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய், இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின் இதனை அடுப்பின் மீது வைத்து கை பொறுக்கும் அளவுக்கு சூடுபடுத்த வேண்டும். பிறகு அடுப்பை அனைத்து விட்டு, கடாயை கீழே இறக்கி, அதனுடன் வடிகட்டி வைத்துள்ள பப்பாளி இலையின் சாறை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பிறகு உடனேயே இதனை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். முதலில் ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்து முடித்து, தலையை நன்றாக ஆற வைத்திருக்க வேண்டும். இவ்வாறு எண்ணெய் இல்லாத தலையுடன் தான் இதனை செய்ய வேண்டும்.

பிறகு கலந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தலை முழுவதுமாக முடிகளின் வேர்கால்களில் படுமாறு நன்றாக தேய்த்துவிட வேண்டும். பிறகு 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து, அப்படியே முடியை இறுக்கமாக கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை ஊறவிட்டு, தலையை தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்துவர முடி கொட்டும் பிரச்சனை உடனே நின்று விடும்

- Advertisement -