அபரிமிதமான முடி வளர்ச்சிக்கும், முடி சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த 5 அற்புதமான எளிய குறிப்புகள் போதுமே! வேறென்ன தேவை நம் தலைமுடிக்கு?

hair-growth-sembaruthi
- Advertisement -

எல்லா முடி சார்ந்த பிரச்சினைகளையும், இயற்கையான முறையில் தீர்வு காணும் பொழுது அதற்கான ரிசல்ட் அபரிமிதமாக நிச்சயம் இருக்கும். எனவே செயற்கையை நாடி செல்லாமல் இயற்கையாக கிடைக்கக் கூடிய மூலிகை மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி நாம் நம்முடைய தலைமுடியை நன்கு வேகமாக வளர செய்ய முடியும்? ஒரே சீரான வளர்ச்சியும், அடர்த்தி கருங்குந்தல் மற்றும் நீண்ட கூந்தலையும் பெற முடியும்? என்பதை இந்த பதிவின் மூலம் சிறு சிறு குறிப்புகளாக பார்ப்போம்.

குறிப்பு 1:
நீண்ட அடர்த்தியாக இருக்கும் கூந்தலை கொண்டுள்ள பெண்களுக்கு தலைக்கு குளிக்கும் பொழுதெல்லாம் அடிக்கடி சளி பிடிக்க வாய்ப்புகள் உண்டு. இவர்கள் சாம்பிராணி புகையுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டு தோலை சேர்த்து நன்கு கரிய விட்டு பின்னர் புகையை தலைக்கு காண்பித்தால் சளி பிடிக்காது, ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
டேமேஜ்டு ஹேர்! சிலருக்கு நுனியில் இரண்டாக பிளவு பட்டிருக்கும், அது போல சிலருக்கு தலை முடியை வாரும் பொழுது பாதியாக உடைந்து மேற்பகுதி டேமேஜ் ஆகி தொங்கிக் கொண்டிருக்கும். இதுபோல சிதைந்துள்ள முடிகளை கூட சரி செய்ய இந்த ஹேர் பேக் போடலாம். ஒரு வாழைப்பழம் மிக்சியில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முட்டையை முழுவதுமாக சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து தலைக்கு மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து குளித்து பாருங்கள், இரண்டு மாதத்தில் எல்லா முடியும் ஒரே சீராக உடையாமல் வளரும்.

குறிப்பு 3:
தலைமுடியின் வேர்க்கால்கள் வலு இழந்து காணப்படும் பொழுது செம்பருத்தியை விட சிறந்த மருந்து அதற்கு கொடுத்து விட முடியாது. ஒரு கைப்பிடி அளவுக்கு செம்பருத்தி பூக்கள், ஒரு கைப்பிடி அளவுக்கு செம்பருத்தி இலைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீரில் நன்கு கைகளால் பிசைந்து கொள்ளுங்கள். இவற்றின் சாறு முழுவதுமாக அந்த தண்ணீரில் இறங்கி இருக்க வேண்டும். பிறகு அதை ஒரு காட்டன் துணியில் இட்டு நன்கு வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஜெல் போல உங்களுக்கு கிடைக்கும். இந்த ஜெல்லை தலைமுடி முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊற விட்டு பின்னர் குளித்து பாருங்கள், தலைமுடியின் வேர்கால்களில் இருக்கும் எத்தகைய பிரச்சனையையும் சரி செய்து முடியை அடர்த்தியாக வலுவாக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
முடியின் விரைவான வளர்ச்சிக்கு மற்றும் வேர் முதல் நுனி வரை ஒரே சீரான வளர்ச்சிக்கும் சூப்பரான ஹேர்பேக் ஒன்றை வாரம் ஒரு முறை போட்டு பாருங்கள். ஒரு கப் அளவிற்கு கற்றாழை ஜெல்லை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நைஸ் ஆக அரைத்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலை முழுவதும் நன்கு தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு அலசினால் தலையில் இருக்கும் உஷ்ணம் தணிந்து வலுவிழந்த வேர்கால்களும் ஆரோக்கியமாக வலுப்பெற்று நன்கு சீரான முடி வளர்ச்சிக்கு உந்து கோளாக இருக்கும்.

குறிப்பு 5:
ஒரு கைப்பிடி செம்பருத்தி பூ, ஒரு கைப்பிடி செம்பருத்தி இலைகள், ஒரு கைப்பிடி கரிசலாங்கண்ணி இலை, கைப்பிடி மருதாணி இலை, ஒரு கைப்பிடி கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு கப் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அரை லிட்டர் தேங்காய் எண்ணையை இரும்பு வாணலியில் போட்டு நன்கு காய்ச்சுங்கள். நீங்கள் அரைத்து வைத்துள்ளவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதிலிருந்து சாறு முழுவதும் எண்ணெயில் இறங்க வேண்டும். கடைசியாக 50ml அளவிற்கு சுத்தமான விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை அணைத்து ஆறு மணி நேரம் குளிர விடுங்கள். அதன் பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் உங்களுக்கு தேவையான பாட்டிலில் ஒரு முறை வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இந்த எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு தேய்த்து வர முடி வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

- Advertisement -