உங்க உடம்பு இப்படி இருந்தா கண்டிப்பா முடி உதிரும்! இப்படி உதிர்ந்த முடியை ஒரே மாதத்தில் மீண்டும் நன்கு வளர செய்ய இதை செய்தால் போதுமா?

hair-coconut-oil
- Advertisement -

பொதுவாக நம்முடைய உடல் இரண்டு விதமான அமைப்பை கொண்டுள்ளதாக இருக்கிறது. ஒன்று குளிர்ச்சி மற்றொன்று உஷ்ணம். குளிர்ச்சி உடம்பு உள்ளவர்கள் நம்மை சுற்றிலும் குறைவாக இருந்தாலும் இவர்களுக்கு பெருமளவு பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் உஷ்ணம் எனப்படும் சூடு உடம்பு கொண்டவர்களுக்கு தான் முடி உதிர்தல், சளி பிடித்தல், ஆஸ்துமா போன்ற தொந்தரவுகளை அடிக்கடி சந்திக்க வேண்டி இருக்கும். இப்படிப்பட்டவர்கள் என்ன செய்தால் சீக்கிரம் இழந்த முடியை திரும்ப பெறலாம்? என்பதைத்தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு முதலில் எதனால் முடி உதிர்கிறது? என்பதை கண்டுபிடிப்பது ஆகும். உடல் உஷ்ணம் கொண்டவர்கள் சீதோசன நிலைக்கு ஏற்ப தங்களை பராமரித்துக் கொள்ள வேண்டும். அந்தந்த காலகட்டத்தில் தலை முடியை பராமரிப்பதில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஒரே மாதிரி நீங்கள் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் சீதோசன நிலை மாற்றம் காரணமாக தலை முடியை வேகமாக இழக்க வேண்டி இருக்கும்.

- Advertisement -

பொதுவாக உஷ்ணத்தால் தான் சளி பிரச்சனைகள் வருகிறது. உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால் இத்தகைய பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விடலாம். நீங்கள் உஷ்ண உடல் அமைப்பைக் கொண்டவர்களா? அல்லது குளிர்ச்சி உடலை கொண்டவர்களா? என்பதை தெரிந்து கொள்ள ஒரு எளிய பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

ரெண்டு டீஸ்பூன் அளவுக்கு தேங்காய் எண்ணெயை எடுத்து நன்கு உச்சந்தலையில் தடவுங்கள். நீங்கள் தடவிய கொஞ்ச நேரத்திலேயே தேங்காய் எண்ணெய் எங்கு சென்றது என்றே தெரியாது. தலை முழுவதுமாக அதை கிரகித்துக் கொண்டிருக்கும். இத்தகையவர்கள் உஷ்ண உடலை கொண்டவர்கள் ஆவர். அதனால் தான் சீக்கிரம் தலையில் இருக்கும் எண்ணெய் உறிஞ்சி கொள்ளப்பட்டு விட்டது. ஆனால் குளிர்ச்சி உடம்பு கொண்டவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் அவ்வளவு எண்ணெய் காயாது, அப்படியே தான் இருக்கும். மெது மெதுவாக தலையில் வைத்த எண்ணெய் காய ஆரம்பிக்கும்.

- Advertisement -

எண்ணெய் சீக்கிரம் காய்ந்து விடுகிறது என்றால் நீங்கள் முதல் நாள் இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் உலர் திராட்சை, ஒரு ஸ்பூன் பாதாம் ஆகியவற்றை நன்கு அலசி சுத்தம் செய்துவிட்டு தண்ணீரில் ஊற வையுங்கள். ஒன்றாகவும் ஊற வைக்கலாம், தனித்தனியாகவும் நீங்கள் ஊற வைக்கலாம், அது உங்கள் விருப்பம். காலையில் எழுந்ததும் இந்த தண்ணீருடன் சேர்த்து பாதாம், திராட்சை, வெந்தயம் ஆயவற்றையும் பருகி சாப்பிட்டு விட வேண்டும். இதனால் உடல் நல்ல குளிச்சியுற்று, சத்துக்களும் போதிய அளவு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
முகச்சுருக்கங்கள் நீங்கி முகம் எப்போதும் இளமையாக இருக்க பலாக்கொட்டை ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க. முகம் மட்டும் இல்லங்க நீங்களே இளமையா இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவீங்க.

வாரத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக தலைக்கு ஷாம்பு போடுவதை தவிர்த்து விட்டு சீயக்காய்க்கு மாறுங்கள். சீயக்காயை சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் குழைத்து தலைக்கு தேய்த்து குளியுங்கள். நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முந்தைய நாள் ரெண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கேஸ்டர் ஆயில் எனப்படும் விளக்கெண்ணையை சேர்த்து கலந்து தலைக்கு தேய்க்க வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி தேய்த்தாலும் நிறைய எண்ணெய்யை அப்பி கொள்ள வேண்டாம். தலைக்கு எண்ணெய் தேய்த்த மறுநாள் சீயக்காய் போட்டு குளித்து விடுங்கள். அவ்வளவுதான், இதுபோல வாரம் ரெண்டு முறை மட்டும் உங்கள் தலைமுடியை பராமரித்து வந்தால் கண்டிப்பாக ஒரே மாதத்தில் நல்ல ரிசல்ட் காணலாம்.

- Advertisement -