முகச்சுருக்கங்கள் நீங்கி முகம் எப்போதும் இளமையாக இருக்க பலாக்கொட்டை ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க. முகம் மட்டும் இல்லங்க நீங்களே இளமையா இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவீங்க.

face jack fruit
- Advertisement -

முகச்சுருக்கம் என்பது முன்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மேல் தான் வரும். அப்போதும் கூட அவர்களுடைய வயதிற்கும் முகசுருக்கத்திற்கும் சம்பந்தம் இல்லாத அளவிற்கு தான் இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினர்களுக்கு கூட இந்த முகச்சுருக்கங்கள் வந்து சிறிய வயதிலேயே முதிர்வான தோற்றத்தை தந்து விடுகிறது . இது மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனை என்றே சொல்லலாம். இதை சரி செய்வதற்கான எளிய வழியை தான் இந்த அழகு குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக முகச்சுருக்கம் வருவதற்காக முக்கிய காரணம் மன அழுத்தம், தூக்கமின்மை உடல் எடையை விரைவாக குறைக்க எடுக்கும் முயற்சிகள் போன்றவை தான். வயதானவர்களுக்கு முகத்தில் இந்த சுருக்கம் வருவதற்கு காரணம் முகத்தில் சுருக்கக் கூடிய எலாஸ்ட்டின் கொலாஜன் என்று வேதிப்பொருள் குறைய ஆரம்பிக்கும் போது இந்த பிரச்சனை வரத் தொடங்கும். எந்த காரணத்தால் இந்த சுருக்கங்கள் வந்தாலும் அதை சரி செய்ய இந்த பலாக்கொட்டை பேக் பெரிதும் உதவி செய்யும். வாங்க இப்போது அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முகச்சுருக்கங்களை நீக்கி முகம் இளமையாக மாற பலாக்கொட்டை ஃபேஸ் பேக்
இதற்கு பலாக்கொட்டைகளை சுத்தம் செய்து காய வைத்து அதை தூள் செய்து பவுடராக்கி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய பவுலில் இரண்டு ஸ்பூன் பலாக்கொட்டையுடன் அதை கலக்க காய்ச்சாத பசும்பால் அல்லது பால் ஆடை இரண்டில் ஏதேனும் ஒன்றை கலந்து நன்றாக பேஸ்ட் போல குறைத்து முகத்தில் பேக் போட வேண்டும்.

இந்தப் பேக் முப்பது நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே இருக்க வேண்டும். 30 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை செய்து விட லாம். அதிகமாக முகச்சுருக்கம் வந்தவர்கள் இந்த பேக்கை மூன்று மாதங்கள் தொடர்ந்து போட வேண்டும். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நிச்சயம் மறந்து விடும். ஒரு வேளை இப்பொழுது தான் வர ஆரம்பிக்கிறது அல்லது முகச்சுருக்கம் வருவதை தள்ளி போட வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த பேக்கை போட்டால் போதும்.

- Advertisement -

முகத்தில் ஏற்படும் கருந்திட்டுக்கள் அல்லது வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும் கூட அதை எல்லாம் ஓரளவுக்கு சரி செய்து விடலாம். இந்த முக சுருக்கம் வந்து விட்டால் மட்டும் அத்தனை எளிதில் இதை சரி செய்ய முடியாது. ஆனால் இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும் போது இதில் உள்ள புரதச்சத்துக்கள் முகத்திற்கு நல்ல ஒரு பொலிவை தருவதுடன் விரைவில் முகச்சுருக்கங்களை மறைய செய்யும்.

இதையும் படிக்காலமே: முடி உதிர்வை படு வேகமாக நிறுத்தி, ராக்கெட் வேகத்தில் உங்கள் முடியை வளர்த்துக் காட்டலாம். இந்த ஹேர் சீரமை மட்டும் தலையில் அப்ளை செய்து பாருங்கள்.

இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பொழுது முகமும் நல்ல சிகப்பாக மாறும் எனவே முக அழகிற்காக பயன்படுத்துபவர்களும் இந்த பேக்கை வாரம் ஒரு முறை இதை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதை ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -