கட்டுக்கடங்காத முடி வளர ஹேர் மாஸ்க்

hair mask
- Advertisement -

எப்படி ஒரு மன்னனுக்கு கிரீடம் அழகோ அதே போல் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தலைமுடி அழகு. இயற்கையாகவே நமக்கு கிடைத்த கிரீடம் தான் நம்முடைய தலைமுடி. இந்த தலைமுடியை நாம் பேணி பராமரிப்பது நம்முடைய இன்றியமையாத காரியங்களில் ஒன்றாகவே திகழ்கிறது. ஆனால் இதற்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் பல விதமான பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி முடியை கட்டுக்கடங்காத அளவிற்கு வளர செய்யக்கூடிய ஒரு ஹேர் மாஸ்கை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

முடி சார்ந்த பிரச்சினைகள் என்று நாம் பார்க்கும் பொழுது முடி உதிர்தல், இளநரை, சொட்டை விழுகுதல், பொடுகு, அரிப்பு, முடி வெடிப்பு இப்படி நாம் பலவற்றை கூறலாம். இவற்றை சரி செய்வதற்கு நாம் பல வழிமுறைகளை பின்பற்றினாலும் இயற்கையிலேயே கிடைக்கக் கூடிய பொருட்களை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் தான் அதன் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும். ஒரு சிலர் இரண்டு மூன்று தடவை உபயோகப்படுத்திய பிறகு எந்த வித மாற்றமும் இல்லை என்று நிறுத்தி விடுவார்கள். இது ஒன்றும் மேஜிக் அல்ல. நம்முடைய முயற்சிகளை தொடர்ந்து நாம் செய்யும் பொழுது தான் அதில் வெற்றியை நம்மால் காண முடியும்.

- Advertisement -

ஹேர் மாஸ் தயாரிக்கும் முறை
நம் தலை முடியை பாதுகாக்க கூடிய முக்கிய பங்கு வகிப்பது வெந்தயம் மற்றும் வெங்காயம். இந்த இரண்டிற்கும் நம் தலைமுடியின் பிரச்சினையை தீர்த்து முடி உதிர்தலை முற்றிலுமாக தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடியை வேகமாக வளரச் செய்யவும் உதவுகிறது என்று பலரும் அறிந்திருப்பர். முதல் நாள் இரவே இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு பவுலில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் காலையில் எழுந்து இந்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை ஒரு பவுலில் மாற்றி சாதாரணமாக தலைக்கு உபயோகப்படுத்தும் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் தலைமுடியை நன்றாக சிக்கி இல்லாமல் சீவிய பிறகு சிறு சிறு பாகங்களாக பிரித்து இந்த பேஸ்டை உங்கள் தலையில் தடவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறைந்தது 30 நிமிடத்தில் இருந்து 40 நிமிடம் வரை தலையில் அது அப்படியே இருக்கட்டும். நன்றாக இது ஊறிய பிறகு நீங்கள் எப்பொழுதும் உபயோகப்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து விடலாம். முடி பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் இந்த ஹேர் மாஸ்கை வாரத்திற்கு ஒருமுறை என்று தொடர்ந்து மூன்று மாதங்கள் உபயோகப்படுத்தும் பொழுது அவர்களுக்கு நல்ல மாற்றங்கள் தென்படும்.

அதற்குப் பிறகு இதை விட்டு விடாமல் மாதத்திற்கு இரண்டு முறை ஆவது தொடர்ந்து உபயோகப்படுத்தி வருவதன் மூலம் அவர்கள் தலைமுடியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் தலைமுடி ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வளரும்.

இதையும் படிக்கலாமே: தலை முடிக்கு டீ டிகாஷன்

நமக்கு இயற்கையாகவே பல அற்புதமான மூலிகைகள் கிடைக்கின்றன என்பதை உணர்ந்து கெமிக்கல் நிறைந்த பொருட்களை தவிர்த்து இயற்கையான மூலிகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

- Advertisement -