தலை முடிக்கு டீ டிகாஷன்

tea water
- Advertisement -

தலைமுடியை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை நாம் அனைவருமே ஏதாவது ஒரு சூழ்நிலையில் மேற்கொள்ள தான் செய்கிறோம். அப்படி மேற்கொள்ளும் பொழுது பலரது பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படுவது இல்லை. அப்படிப்பட்டவர்கள் தலைக்கு குளிக்கும் பொழுது இந்த தண்ணீரை மட்டும் பயன்படுத்தி குளித்தால் அவர்களுடைய தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் எந்த தண்ணீரை தலைக்கு ஊற்றி குளிப்பதன் மூலம் தலைமுடியின் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

தலைமுடி பிரச்சினைகளை போக்குவதற்கு பல இயற்கையான பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களின் பயன்களை முழுமையாக அறிந்து கொள்வதன் மூலமே நம்முடைய முடி பிரச்சினையை நம்மால் எளிதில் தீர்க்க முடியும். அந்த வகையில் இந்த பதிவில் நாம் டீ டிகாஷனை பயன்படுத்தி தலைமுடி பிரச்சனையை தீர்க்கும் முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

விட்டமின் சி, விட்டமின் இ போன்ற சத்துக்கள் இதில் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் டி ஹெச் டி என்று சொல்லக்கூடிய ஹார்மோனின் உற்பத்தியை சீராக்குவதற்கும் இந்த டிகாஷன் பயன்படுகிறது. இதை நாம் தலைக்கு உபயோகப்படுத்துவதன் மூலம் இளநரை பிரச்சினை என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மேலும் முறையற்ற உணவுப் பழக்கங்களாலும் சூரிய ஒளி கதிர்களாலும் ஏற்பட்ட முடி பிளவு பிரச்சினையும் நீங்கும். பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, முடி உதிர்தல் முற்றிலுமாக நின்று முடியை அழகாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

டிகாஷன் தயாரிக்கும் முறை:

இதற்கு எந்தவித பொருட்களும் சேர்க்காத சாதாரண டீ தூள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஒருமுறை தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை அதை நாம் நம்முடைய தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ஸ்பூன் டீத்தூளுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் என்ற வீதம் அடுப்பில் மிதமான தீயில் வைத்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பிறகு ஐந்து நிமிடம் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை முற்றிலுமாக ஆறவைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

என்றைக்கு நாம் தலைக்கு குளிக்கிறோமோ அன்றைய தினம் ஒரு கிளாஸ் டிகாஷனை மட்டும் எடுத்துக்கொண்டு எப்போதும் போல் தலைக்கு ஷாம்புவோ சிகைகாயோ போட்டு குளித்த பிறகு தலையை நன்றாக அலசிக்கொள்ள வேண்டும். பிறகு இந்த டிகாஷனை தலையின் வேர்க்கால்களிலிருந்து நுனி மூடி வரை அனைத்து இடங்களுக்கும் பரவும் படி ஊற்றி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட்டு சாதாரண தண்ணீரில் ஒரே ஒரு மக்கு தண்ணீரை மற்றும் ஊற்றி தலையை அலசி விட வேண்டும். இப்படி எப்பொழுதெல்லாம் தலைக்கு குளிக்கிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த டிகாஷனை நம் தலைக்கு பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கழுத்து சுருக்கம் நீங்க டிப்ஸ்

அன்றாடம் காலையிலும் மாலையிலும் நாம் குடிக்கக்கூடிய டீயால் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதைப் போல இந்த டிகாஷனை நம் தலை முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியும் மிகவும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

- Advertisement -