பொடுகு தொல்லையை நீக்க உதவும் எண்ணெய்

dandruff oil
- Advertisement -

முடி தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் பொடுகு. பொடுகு பிரச்சனை ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அந்த பிரச்சனை வந்துவிட்டது என்றால் அது அவ்வளவு எளிதில் நீங்குவது கிடையாது. மேலும் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பொடுகு பிரச்சினையை சரி செய்வதற்கு உதவக்கூடிய எண்ணெயை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தலைமுடியில் சுத்தம் இல்லாமல் அழுக்குகளும் தூசுகளும் நிறைந்திருக்கும் பட்சத்தில் பொடுகை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல் தலைக்கு குளித்த பிறகு தலையை துவட்டாமல் ஈரத் தலையுடன் இருப்பதாலும் பொடுகு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் தலைக்கு குளிக்காமல் எண்ணெய் மட்டும் வைத்துக் கொண்டே வருவதாலும் பொடுகு பிரச்சனை ஏற்படும். இது மட்டுமில்லாமல் சில தொற்றுகளின் மூலமாகவும் பொடுகு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

ஒரு முறை பொடுகு வந்து விட்டது என்றால் அந்த பொடுகை நாம் என்னதான் பாடுபட்டு எவ்வளவு ஹேர் பேக் போட்டு நீக்கினாலும் சிறிது காலம் கழித்து மறுபடியும் பொடுகு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் உபயோகப்படுத்தும் துண்டு, தலையணை, சீப்பு போன்றவற்றை பிறர் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். அதையும் மீறி பகிர்ந்து கொண்டால், அவருக்கும் பொடுகு பிரச்சனை வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது.

வாரத்திற்கு ஒரு முறையாவது தங்களுடைய தலையணை உரை, சீப்பு போன்றவற்றை சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தாங்கள் தலைக்கு துடைக்கும் துண்டையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் தங்கள் தலைமுடியை அழுக்கில்லாமல் தூசுகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமும் பொடுகு பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும். வந்த பொடுகு பிரச்சினையை சரி செய்வதற்கு ஹேர் பேக், ஹேர் மாஸ்க் என்று பயன்படுத்துவதற்கும் பதிலாக ஒரு கூட்டு எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் பொடுகு பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

இந்த எண்ணெயை தயார் செய்வதற்கு சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 500 எம்எல் வேண்டும். இதனுடன் 100 எம்எல் வேப்ப எண்ணெய், 200 எம்எல் நல்லெண்ணெய் மற்றும் 200 எம்எல் பொடுதலை தைலம் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து ஒரு லிட்டர் எண்ணையாக தயார் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நம்முடைய பொடுகு பிரச்சினையை நீக்கக்கூடிய தலைக்கு தேய்க்கக்கூடிய எண்ணெய் தயாராகி விட்டது.

இதை அதிகப்படியான பொடுகு பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று முறை என்ற வீதம் தலையில் தடவி நன்றாக பத்து நிமிடம் மசாஜ் செய்து விட்ட அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு கெமிக்கல் குறைவாக இருக்கக்கூடிய ஷாம்புக்களை பயன்படுத்தி தலைக்கு குளித்து வர வேண்டும். பொடுகு பிரச்சனை நீங்கிய பிறகு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையோ இந்த எண்ணையை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் பொடுகு பிரச்சினையே வராமல் பொடுகிற்கு நிரந்தரமான தீர்வை நம்மால் கொண்டுவர முடியும்.

இதையும் படிக்கலாமே: வாழைப்பழ ஹேர் மாஸ்க்

நாட்டு மருந்து கடைகளில் இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை நாம் பயன்படுத்தி நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்துக் கொள்வோம்.

- Advertisement -