கேரள பெண்களை போல தலைமுடி அடர்த்தியாகவும் அழகாகவும் இருக்க, முடி வேகமாக வளர, முடி கொட்டாமல் இருக்க இந்த ஒரு எண்ணெய் போதும்.

hair oil making tamil
- Advertisement -

முடி கொட்டுவது, இளநரை போன்ற பிரச்சனைகள் இன்று பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் நாற்பது வயதை கடந்தும் நரை முடி இருப்பதில்லை முடியும் கொட்டுவதில்லை. அதிலும் குறிப்பாக கேரள பெண்களுக்கு தலை முடி மிக நீளமாகவும் அழகாகவும் இருக்கும். அதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் உணவு வகைகள். அந்த வகையில் வீட்டில் உள்ள சில பொருட்களை கொண்டு தயார் செய்யக்கூடிய ஒரு அருமையான மூலிகை எண்ணெய் குறித்து இந்த அழகு குறிப்பு பதிவில் பார்ப்போம்.

தலைமுடி எண்ணை காய்ச்ச தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர், கற்றாழை ஜெல் – 3 தேக்கரண்டி, வெந்தயம் – 2 தேக்கரண்டி, செம்பருத்தி பூ – 4, மிளகு – 10, சின்ன வெங்காயம் – 10, கருவேப்பிலை – 1 கைப்பிடி.

- Advertisement -

இந்த எண்ணெயில் உடலுக்கு குளிர்ச்சிதரும் சில பொருட்களை நாம் சேர்ப்பதால் தொடர்ச்சியான தலைவலி உள்ளவர்கள், தொடர்ச்சியான சளி தொல்லை உள்ளவர்கள் இதைனை பயன்படுத்த வேண்டாம். இப்போது இந்த எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

தலைமுடி வளர எண்ணெய் தயாரிப்பது எப்படி
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் குறிப்பிட்டுள்ள அளவு வெந்தயம் சேர்த்து, அதை அப்படியே நான்கு மணிநேரம் ஊற விடவேண்டும்.

- Advertisement -

வெந்தயம் நன்றாக ஊறி அரைக்கும் பதத்திற்கு வந்த பிறகு ஒரு மிக்சி ஜாரில் நாம் ஏற்கனவே ஊறவைத்துள்ள வெந்தயத்தை சேர்த்து, அதோடு கருவேப்பிலை மற்றும் செம்பருத்தி பூவை சேர்த்து அரைக்க வேண்டும். இவை ஓரளவிற்கு அறைந்த பிறகு இதனுடன் கற்றாழை ஜெல் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வகையில் அரைக்க வேண்டும்.

இப்போது நாம் அரைத்துவைத்துள்ள இந்த பேஸ்டை தான் எண்ணெயில் கலக்கபோகிறோம். அதற்காக முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அத்துடன் நாம் அரைத்துவைத்துள்ள பேஸ்டை சேர்த்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் நன்கு கொதித்த உடன், அதில் மிளகு சேர்த்து (மிளகை பொடியாக்கி கூட சேர்க்கலாம்) ஓர் இரு நிமிடங்கள் விட்டு அடுப்பை அணைத்துவிடவும். அவ்வளவு தான் எண்ணெய் தயாராகிவிட்டது.

- Advertisement -

இந்த எண்ணெய் ஆறிய பிறகு அதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எப்போதெல்லாம் தலைக்கு குளிக்கப்போகிறீர்களோ அதற்க்கு அரைமணி நேரம் முன்பாக, இதில் இருந்து உங்கள் தலைக்கு தேவையான அளவு எண்ணெயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அந்த கிண்ணத்தை வெந்நீருக்கு மேலே வைத்து எண்ணெயை சற்று சூடாக்கி அதை தலைக்கு தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு அதன் பிறகு குளியுங்கள்.

இதையும் படிக்கலாமே: வேரிலிருந்து உங்க முடி கருகருன்னு, விறுவிறுன்னு வளர இந்த எண்ணெய் போதும். 50 வயதை தாண்டும் போதும் வெள்ளை முடி வெளியே வர பயப்படும்.

இப்படி நீங்கள் தொடர்ச்சியாக செய்து வர முடி வளச்சியில் மாறுதல் தெரிய துவங்கும். இந்த எண்ணெயில் நாம் மிளகு சேர்த்திருப்பதால் இது உடல் குளிர்ச்சியை பெரிதாக அதிகரிக்காது. எனினும் நாம் முன்பே கூறியது போல தலைவலி, சளித்தொல்லை உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -