வேரிலிருந்து உங்க முடி கருகருன்னு, விறுவிறுன்னு வளர இந்த எண்ணெய் போதும். 50 வயதை தாண்டும் போதும் வெள்ளை முடி வெளியே வர பயப்படும்.

hair3
- Advertisement -

நரை முடியை மறைப்பதற்கு பெரும்பாலும் நாம் பயன்படுத்தக்கூடிய பொருள் ஹென்னா அவுரி இலை பொடி. இந்த இரண்டு பொருள் இல்லாமல் நரை முடியை வெள்ளையாக மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இந்த இரண்டு பொருட்களை சேர்க்காமல் இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவதற்கு ஒரு புதுவிதமான குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக எளிமையாக கிடைக்கக்கூடிய மூன்று பொருட்களை வைத்து ஹேர்டை எப்படி தயார் செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நரைமுடியை கருப்பாக்க எளிமையான வழி:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் அந்த மூன்று பொருட்கள் என்னென்ன என்பதை பார்த்து விடுவோம். வெந்தயம், கருஞ்சீரகம், நெல்லிக்காய் பொடி. வெந்தயம் நம் எல்லோர் வீட்டு சமையல் அறையிலும் இருக்கும். கருஞ்சீரகம், நெல்லிக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் விற்கும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் வெந்தயம், 2 ஸ்பூன் கருஞ்சீரகம், சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு இரும்பு கடாயில் போட்டு கருக கருக வறுக்க வேண்டும். அதாவது கருஞ்சீரகம் கருப்பாகத்தான் இருக்கும். அது அடர் கருப்பு நிறத்திற்கு வரும். வெந்தயத்தின் நிறம், கருஞ்சீரகத்தின் நிறம் வரும் அளவிற்கு வறுக்க வேண்டும். இரண்டு பொருட்களை ஒன்றாக போட்டு புகைய புகைய வறுத்தெடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக ஆற வைத்து முடிந்தவரை பொடி செய்து கொள்ளுங்கள். இது நைசான பவுடராக அரைபடுவது ரொம்பவும் சிரமம்தான். கொஞ்சம் கஷ்டப்பட்டு பொடி செய்து இந்த பொடியை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதே இரும்பு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை போட்டு, கருக கருக வறுக்க வேண்டும். நெல்லிக்காய் பொடி வறுபட்டு கருப்பு நிறத்திற்கு மாறிய பின்பு ஒரு சின்ன டம்ளர் அளவு தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்து வரும்போது மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் பொடியையும் இதோடு சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும். இப்போது எல்லா பொருட்களையும் கலந்து அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். தண்ணீர் சுண்டி சுண்டி இது ஒரு ஹேர் டை பக்குவத்தில் வந்துவிடும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். இது பார்ப்பதற்கே அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்.

- Advertisement -

ஒரு மூடி போட்டு இரும்பு கடாயிலேயே அந்த டையை அப்படியே ஒரு மணி நேரம் ஆற வைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த டையை தலையில் அப்ளை செய்ய வேண்டும். நாம் தயார் செய்த இந்த ஹேர் டை தலையில் அப்ளை செய்வதற்கு முன்பு தலைக்கு குளித்துவிட்டு தலையை ஈரம் போக நன்றாக துவட்டி காய வைத்து விட வேண்டும். தலையில் ஈரம் இருக்கக் கூடாது. எண்ணெயும் இருக்கக் கூடாது.

தயார் செய்த ஹேர் டை இரண்டு கைகளிலும் எடுத்து எண்ணெய் தேய்ப்பது போல தேய்த்து உங்களுடைய தலைமுடியில் எங்கெல்லாம் வெள்ளை முடிகள் இருக்கிறதோ, அந்த இடத்தில் எல்லாம் தடவி விட வேண்டும். தேவைப்பட்டால் தலை முடியில் வேர்க்கால்களில் எல்லாம் இந்த ஹேர் டை தடவி விடலாம். முடியை பாகம் பாகமாகப் பிரித்து, முடியின் வேர்க்கால்களில் இருந்து, முடி நுனி வரை இந்த டையை தடவி கொண்டை கட்டிக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து சாதாரண தண்ணீரில் ஷாம்பு போடாமல் தலையை அலசி விட வேண்டும்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாள் இந்த குறிப்பை பின்பற்றி வர மூன்று மாதத்தில் நல்ல ரிசல்ட்டை எதிர்பார்க்கலாம். வெள்ளை முடி கருப்பாவதோடு இல்லாமல் தலை முடி உதிர்வு பிரச்சனைக்கும் நல்லதொரு தீர்வு கிடைக்கும். இதில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை தரும் வெந்தயம், நெல்லிக்காய் பொடியும் சேர்க்க பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் பெண்கள் இதையெல்லாம் செய்வதால் கூட, அவர்களுக்கு சீக்கிரமே முதுமை தோற்றம் வந்து விடுமாம் தெரியுமா?

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை உள்ளது தலைபாரம் வரும் என்றால் ஒரு மணி நேரத்தில் தலையை அலசிக் கொள்ளுங்கள். ரொம்ப நேரம் தலையில் ஹேர் டை வைத்துக் கொள்ள வேண்டாம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மேல் சொன்ன அழகு குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -