வீட்டிலேயே உங்களுடைய முடியை செலவே இல்லாமல் ஸ்ட்ரெயிட்னிங் செய்து கொள்ளலாம். இதற்கு சமையலறையில் வைத்திருக்கும் 1 மூடி தேங்காய் போதும்.

hair16
- Advertisement -

கரடுமுரடாக ட்ரையாக இருக்கக்கூடிய முடியை சில்கி ஸ்மூத்தாக சைனிங் செய்து கொள்ள வேண்டுமென்றால் பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் காசு செலவு செய்ய வேண்டும். அதேசமயம் கெமிக்கல் கலந்த பொருட்களை நம்முடைய தலையில் தேய்க்க வேண்டும். இதெல்லாம் செய்யும்போது நம்முடைய முடி உடைந்து போவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. எப்போதுமே செயற்கையான அழகை, சீக்கிரமாக பெற நாம் எந்த வழிகளையும் பின்பற்ற கூடாது. அது நம்முடைய அழகிற்கு ஆபத்தை தரக்கூடியது. மிக மிக சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து முடியை எப்படி ஸ்ட்ரெயிட்னிங் செய்து கொள்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் 1/2 மூடி தேங்காயை எடுத்து துருவி மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு திக்கான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு சிறிய பௌலில் 1/4 கப் தண்ணீரில், 1 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு போட்டு கட்டிகளில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இதோடு நமக்கு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு தேவைப்படும். அதையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து முதலில் தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கை விடாமல் கலக்க வேண்டும். 2 நிமிடம் போல தேங்காய்ப்பால் கடாயில் சூடாக்கி வந்த பிறகு உடனடியாக கரைத்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவை கொதிக்கும் தேங்காய் பாலில் ஊற்றி, கூடவே எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சை பழச் சாறையும் இதில் ஊற்றி கைவிடாமல் கலந்து கொண்டே வர வேண்டும்.

3 லிருந்து 4 நிமிடங்கள் வரை அடுப்பை சிம்மில் வைத்து விட்டு கலக்கும் போது நமக்கு இது கிரீமியாக வர தொடங்கும். க்ரீம் கெட்டியாக தளதளவென வரும்போது உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள். இதை ஒரு பௌலில் மாற்றி நன்றாக ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஆறிய பின்பு இந்த க்ரீமை அப்படியே உங்களுடைய தலையில் தேய்த்துக் கொள்வதாக இருந்தாலும் சரி தான். அப்படி இல்லை உங்களுடைய முடி ரொம்ப ட்ரையாக உள்ளது என்றால் இதோடு 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அதன் பின்பு இந்த பேக்கை தலையில் அப்ளை செய்யவேண்டும். (அதாவது இந்த பேக் சூடாக இருக்கும்போதே, விளக்கெண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள்.) ஆறிய பின்பு தான் பேக்கை தலையில் அப்ளை செய்யவேண்டும்.

இந்த பேக்கை உங்களுடைய தலையில் அப்ளை செய்யும் போது தலையில் அழுக்கு எண்ணெய் இருக்கக்கூடாது. சிக்கு எடுத்து முடி நீட்டா ஆக இருக்கவேண்டும். தயார் செய்து வைத்திருக்கும் இந்த க்ரீமை முடியின் மேல் பாகத்தில் இருந்து கீழ் பாகம் வரை நேராக முடியை பாகம் பாகமாக எடுத்து பிரித்து க்ரீமை அப்ளை செய்யவேண்டும்.

அதன்பின்பு ஒரு பெரிய பல் உள்ள சீப்பை எடுத்து உங்களுடைய முடியை அப்படியே நேராக சீவி விடுங்கள்‌. (தலையில் பேக் இருக்கும் போதே சீவலாம் தவறு கிடையாது.)  முடி அப்படியே வளைந்து வளைந்து இல்லாமல் நேராக நிற்கும். அப்படியே ஹேர் பேக்கை விட்டு விடுங்கள். ஹேர் பேக் நன்றாக காயட்டும். கொண்டை எல்லாம் கட்டக்கூடாது. பேக் முடியில் இரண்டு மணி நேரத்தில் நன்றாக காய்ந்து விடும். அதன் பின்பு தலையை தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி விட வேண்டும்.

ரொம்பவும் ஷாம்பு போட்டு முடியை தேய்த்து கசக்கி விடாதீர்கள். தேவைப்பட்டால் மைல்டான பேபி ஷாம்புவை போட்டு தலைக்கு குளித்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வெறும் தண்ணீரை ஊற்றி தலையை அலசுவது பெஸ்ட் ரிசல்ட்டை உடனடியாகக் கொடுக்கும். இப்படி செய்து விட்டு, லூஸ் ஹேரில் சென்று பாருங்கள். உங்களுடைய மூடி அப்படியே காற்றில் பறக்கும்போது அடுத்தவர்களுடைய கண்ணைப் பறிக்கும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -