முடி ஸ்ட்ரெயிட்னிங் பண்ணிக்க ரொம்ப ரொம்ப ஆசை. காசுதான் கையில் இல்லை என்பவர்கள், செலவே இல்லாமல் இப்படி, வீட்டில் இருந்தபடியே ஸ்ட்ரெயிட்னிங் செஞ்சுக்கோங்க.

hair8
- Advertisement -

முடி பார்ப்பதற்கு ஸ்ட்ரெயிட்னிங் செய்தது போல அழகாக இருக்கவேண்டும். ஹேர் கண்டிஷனர் போட்டது போல எப்போதும் பளபளப்பாக இருக்கவேண்டும். ஆனால், இதற்கு செயற்கையான முறையை பின்பற்ற கூடாது. பியூட்டி பார்லர் போகக்கூடாது. வீட்டில் இருந்தபடியே எந்தெந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய மூடியை சினிமா நடிகை முடி போல அழகாக மாற்றுவது. என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த டிப்ஸ் ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா உங்க தலை முடி அப்படி ஷைனிங் லுக் கொடுக்கும்.

அரை மூடி தேங்காயை துருவியும் எடுத்துக் கொள்ளலாம். பல்லு பல்லாக வெட்டியும் எடுத்துக்கொள்ளலாம். இதை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தேங்காய் பாலை எடுக்க வேண்டும். 2 டேபிள் ஸ்பூன் அல்லது 3 டேபிள்ஸ்பூன் மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். நிறைய தண்ணீர் ஊற்றக் கூடாது.

- Advertisement -

திக்கான தேங்காய்ப்பால் நமக்கு கிடைத்திருக்கும். அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். தேங்காய்ப்பால் நமக்கு ஜெல் போல கிடைத்திருக்கும். இதோடு விட்டமின் ஈ டேப்லெட் 2 அல்லது 3 உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலக்குங்கள். உங்களுடைய தலைமுடிக்கு தேவையான பேக் தயாராகிவிட்டது. (தேவை பட்டால் இதில் முட்டையின் வெள்ளைக் கருவையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.)

மூன்றே பொருள் தான். தேங்காய்ப்பால், வைட்டமின் E டேப்லெட், அலோ வேரா ஜெல். இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து ஹேர் பேக் ரெடி பண்ணிட்டீங்க. ஒருவேளை உங்களுக்கு இந்த பேக் ரொம்பவும் தண்ணியாக இருந்தால், ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வைத்தால் கொஞ்சம் கெட்டியான க்ரிமியான பதத்திற்கு வந்துவிடும்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை எப்படி தலையில் அப்ளை செய்வது. முதலில் தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு நன்றாகக் குளித்து விட வேண்டும். தலை முடியில் எண்ணெய் இல்லாமல் ப்ரெஷ்ஷாக இருக்கட்டும். தலை நன்றாக காய்ந்து இருக்க வேண்டும். அதன் பின்பு இந்த பேக்கை தலைமுடியில் எல்லா இடங்களிலும் படும்படி போடலாம். மேல் பக்கத்தில் இருந்து கீழ் பக்கம் வரை உங்களுடைய முடியை நீளமாக வைத்து விட்டு ஒவ்வொரு பாகமாகப் பிரித்து ஹேர் பேக்கை, மேல் பக்கத்தில் இருந்து கீழ் பக்கத்திற்கு உங்கள் கைகளைக் கொண்டு தடவி அப்ளை செய்து கொண்டை கட்டக்கூடாது. முடியை நீளமாக விட்டு விடுங்கள்.

30 நிமிடங்கள் ஹேர் பேக் தலையில் அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசி விடவும். ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க கூடாது. அதன் பின்பு தலைமுடியை காய வைத்து விட்டு, சிக்கு எடுத்தால் உங்களுக்கே தெரியும். முடியில் இருக்கும் வித்தியாசம். வாரத்தில் 2 நாட்கள் இப்படியே ட்ரை பண்ணிட்டு வந்தீங்கன்னா, உங்க முடி நிரந்தரமா எப்போதும் ஸ்டைட்னிங் பண்ண மாதிரி மாறிடும். உங்களுடைய முடி ரொம்ப சிறிய முடியாக இருந்தால், மேலே சொன்ன பொருட்களை குறைத்தும் போட்டு ஹேர் பேக் தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -