யம்மி யம்மி ஸ்ட்ரீட் ஸ்டைல் ஹக்கா நூடுல்ஸ் வீட்டிலேயே செய்ய தெரியுமா உங்களுக்கு! இது ரொம்ப ஈசிங்க. வீட்டிலேயே செஞ்சு உங்க குழந்தைகளுக்கு கொடுங்க.

noodles
- Advertisement -

ரோட்டு கடைகளில் செய்யக்கூடிய நூடுல்ஸ் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அங்கே எந்த அளவுக்கு ஆரோக்கியம் இருக்கும் என்பது நமக்கு தெரியாது. கொஞ்சம் நூடுல்ஸ் வாங்கி, நம்முடைய வீட்டிலேயே இதை செய்து கொடுத்தால் மனசுக்கு எவ்வளவு திருப்தியாக இருக்கும். அந்த ரோட் சைட் ஹக்கா நூடுல்ஸ் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ரொம்ப ரொம்ப ஈஸி தாங்க. வாங்க அந்த ரெசிபி என்னவென்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

இதற்கு நமக்கு கடையிலிருந்து வாங்கிய அந்த நூடுல்ஸ் பேக் தேவை முதலில். பேக் பண்ணி விற்பார்கள் அல்லவா அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை வைத்து கொதிக்க விட்டு, அதில் கொஞ்சமாக உப்பு போட்டு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கொதிக்க வையுங்கள். சுடச்சுட கொதிக்கும் தண்ணீரில் 2 பாக்கெட் நூடில்ஸ் உடைத்து போடுங்க.

- Advertisement -

மூன்றிலிருந்து நான்கு நிமிடத்திற்குள் நுடில்ஸ் வெந்து விடும். குழைந்து போகக்கூடாது. இந்த நூடில்ஸை ஒரு வடிகட்டியில் கொட்டி, அதன் மேலே பச்சை தண்ணீரை ஊற்றி, 1 ஸ்பூன் எண்ணெயையும் ஊற்றி கலந்து குழைந்து போகாமல் அப்படியே ஒரு பக்கம் ஆற வையுங்கள். இப்போது அது அப்படியே இருக்கட்டும்.

அடுத்து உங்கள் வீட்டில் என்னென்ன காய்கறிகள் இருக்கிறதோ, அதை எல்லாம் நறுக்கி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நறுக்கியது 1 கைப்பிடி, கேரட் நறுக்கியது 1 கைப்பிடி, முட்டைகோஸ் நறுக்கியது 1 கைப்பிடி, குடைமிளகாய் நறுக்கியது 1 கைப்பிடி. இதை ரொம்பவும் பொடிசாக நறுகாமல் கொஞ்சம் பெருசு பெருசா நறுக்கி வச்சுக்கோங்க. இது அல்லாமல் இஞ்சி துருவல் 1 ஸ்பூன், பூண்டு துருவல் 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது, இதை எல்லாம் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து நூடில்ஸை தாளிக்கலாம். ஒரு பெரிய அகலமான கடாயை அடுப்பில் வையுங்கள். 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், போட்டு வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய், போட்டு அடுப்பை முழு தீயில் வைத்து வதக்குங்கள். காய்கறிகள் வெடுக்கு வெடுக்கென வேகட்டும். (தேவைப்பட்டால் இதில் மஸ்ரூம் கூட சேர்க்கலாம்.)

இதையும் படிக்கலாமே: இடியாப்பத்தை இப்படி செய்யுங்க, இதை செய்யறது இவ்வளவு ஈஸியான நீங்களே ஷாக் ஆயிடுவீங்க. மாவு பிசையாம இட்லி பாத்திரத்தில் வேக வைக்காம சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். அப்புறம் என்னங்க இனி டெய்லி இடியாப்பம் செய்ய வேண்டியது தானே.

காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். அடுத்து காரத்திற்கு ஏற்ப காய்கறிகளில் மிளகுத்தூள் தூவி, கிரீன் சில்லி சாஸ் 1 ஸ்பூன், சோயா சாஸ் ஸ்பூன் 1 ஸ்பூன், ஊற்றி எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, ஆற வைத்திருக்கும் நூடில்ஸை கடாயில் இருக்கும் காய்கறிகளோடு சேர்த்து பக்குவமாக கலந்து விடுங்கள். எல்லா பொருட்களும் நூடுல்ஸுடன் கலந்து வர வேண்டும். இறுதியாக இதன் மேல் வெங்காயத்தாள் தூவி சுட சுட சாப்பிட்டால் ரோடு சைட் ஹக்கா நூடுல்ஸ் தயார். அவ்வளவுதாங்க. இது ஒரு டேஸ்ட் செம்மையா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -