சன் டேன் சட்டுனு நீக்க இந்த டிப்ஸ் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சருமத்தை பளிச் பளிச்சென மாற்றலாம்.

hand
- Advertisement -

ரொம்ப நேரம் வெளியில் இருந்தால் நம்முடைய கழுத்துக்குப் பின்பக்கம், கை கால்களில், மிகவும் அதிகமாக டேன் படிந்து விடும். சென்சிடிவ் ஸ்கின்னாக உள்ளவர்களுக்கு வெயிலில் 10 நிமிடம் சென்றாலே சருமம் கருத்துப் போகும். அந்த சன் டேனை நீக்குவதற்கு பல வழிகள் உள்ளது. அதில் இன்று இரண்டு சுலபமான வழிமுறைகளை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இந்த டேன் ரிமூவல் க்ரீமை தயார் செய்து விடலாம். இதை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம். உங்களுடைய கை, கால் கருப்பாக இருக்கும் முட்டிப் பகுதிகளில் எல்லாம் இந்த டிப்ஸை தாராளமாக ட்ரை பண்ணி பார்க்கலாம்.

குறிப்பு 1:
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலையை மாவு – 2 டேபிள்ஸ்பூன், முல்தானி மெட்டி – 1 டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், பல் தேய்க்கும் பேஸ்ட் – 1 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் கலக்குவதற்கு தேவையான அளவு வினிகர். அதிகபட்சம் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் நமக்கு தேவைப்படும். இப்போது நமக்கு ஒரு பேக் கிடைத்திருக்கும் அல்லவா. இதை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எந்த இடத்தில் உங்களுக்கு சன் டேனாகி இருக்கிறதோ கழுத்துக்குப் பின்பக்கமாக இருக்கட்டும், கைகள் கால்கள், எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தை முதலில் சோப் அல்லது பாடி வாஷ் போட்டு நன்றாக சுத்தம் செய்து ஈரத்தை துடைத்து விடுங்கள். அதன் பின்பு இந்த பேக்கை சன்டேன் படிந்த இடத்தில் திக்காக அப்ளை செய்ய வேண்டும். ஒரு முறை அப்ளை செய்து விட்டு காய்ந்தவுடன் இரண்டாவது கோட்டிங் கூட போடலாம்.

10 லிருந்து 15 நிமிடங்கள் கழித்து போட்ட பேக் நன்றாக காய்ந்ததும், பேக் போட்ட இடத்தில் தண்ணீரை ஸ்பிரே செய்து விட்டு ஒரு எலுமிச்சம் பழத்தோலை வைத்து நன்றாக ஐந்து நிமிடங்கள் ஸ்கிராப் செய்து, பேக்கை துடைத்து எடுத்து விடுங்கள். அதன் பின்பு நீங்கள் பயன்படுத்தும் மாய்சரைசரை போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். உங்களுடைய சன் டேன் குறைந்து இருப்பதை நன்றாக உங்களால் உணர முடியும்.

- Advertisement -

குறிப்பு 2:
ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சூடாக இருக்கும் பால் – 4 டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் 1/2 லெமன் ஜூஸை பிழிந்து விட்டால், இரண்டு நிமிடத்தில் பால் திரிந்து தயிர் போல நமக்கு ஒரு லிக்விட் கிடைத்திருக்கும். இந்த திரிந்த பாலில் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பல் தேய்க்க பயன்படுத்தும் பேஸ்ட் – 1/2 ஸ்பூன், சேர்த்து நன்றாக பேக் போல கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை டேன் பட்ட இடத்தில் திக்காக அப்ளை செய்து விட்டு நன்றாக காய விடுங்கள். பின்பு எலுமிச்சம்பழத் தோலை வைத்து நன்றாக ஸ்கிரப் செய்து டேன் பட்ட இடத்தை தேய்க்க வேண்டும். பின்பு குளிர்ந்த தண்ணீரில் நன்றாக கழுவி விட்டால், டேன் ரிமூவ் ஆனது உங்களுக்கே தெரியும்.

மேலே சொன்ன இரண்டு குறிப்புகளில் உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறதோ அதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக சருமம் சில நிமிடத்தில் பளிச் பளிச்சென்று மாறிவிடும்.

- Advertisement -