உங்களுக்கு தடைகள் நீங்கி காரிய வெற்றிகள் உண்டாக செய்யும் சக்தி வாய்ந்த மந்திரம்

hanuman

ஒரு மனிதன் உயிர் வாழ உணவும், சுவாசிக்க காற்றும் அவசியமாகும். அதிலும் இந்த காற்று ஒரு மனிதனுக்கு மிகுந்த பலத்தை தருகிறது. அப்படிப்பட்ட காற்றுக்கு அதிபதியாகிய வாயு தேவனின் அம்சம் தான் “ஸ்ரீ ஆஞ்சநேயர்”. பல தேவர்களின் ஆசிகளுடன் பிறந்த ஆஞ்சநேயர், வஜ்ரத்தை போன்ற உடலும், சிங்கத்தை போன்ற தைரியம் மற்றும் மனோதிடம் கொண்டவர். வாயுவான காற்றின் மிகுந்த பலத்தை பெற்றவர். அவருக்குரிய இந்த அனுமன் பீஜ மந்திரம் துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

hanuman

அனுமன் பீஜ மந்திரம்

ஆவ்ம் ஐம் ப்ரீம் ஹனுமதே
ஸ்ரீ ராமா தூதாய நமஹ்

சிரஞ்சீவியாக இருக்கின்ற ஸ்ரீ அனுமனின் சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு 108 உரு ஜெபிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் உடல் மற்றும் மன சுத்தியுடன், வீட்டில் சிறிய அளவில் இருக்கும் ஆஞ்சநேயர் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் நீங்கள் ஈடுபடும் எத்தகைய காரியங்களிலும் தடை, தாமதங்கள் ஏற்படாது. திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். சோம்பல் குணம் நீங்கும். எதிர்மறை சக்திகள், தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் போன்றவை உங்களையும், உங்களை சார்ந்தவர்களும் அணுகாமல் காக்கும் கவசமாக இம்மந்திரம் இருக்கும்.

Hanuman

ஹனுமான் வழிபாட்டிற்குரிய தினங்கள்

- Advertisement -

சக்தி வாய்ந்த தெய்வமாக ஆஞ்சநேயர் எனப்படும் அனுமனை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக இருக்கிறது. இந்த தினங்களில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுவர்களின் வாழ்வில் ஸ்ரீ ஹனுமான் மிக சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்துவார்.

hanuman

ஹனுமான்

ஆஞ்சநேயரை அவருக்குரிய பீஜ மந்திரத்தை துதித்து வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக அஷ்டம சனி, ஜென்ம சனி, ஏழரை நாட்டு சனி போன்ற அனைத்து சனி தோஷங்களின் கடுமை தன்மை குறைந்து, நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். பெருமாளின் அருள் முழுமையாக கிடைக்கும். உடல் வலிமையும், மன தைரியமும் அதிகரிக்கும். துஷ்ட சக்தி பாதிப்புகள் மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். எதிரிகள் தொல்லை, திடீர் ஆபத்துக்கள் உண்டாகாமல் காக்கும். கல்வியில் சிறந்த தேர்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். தொழில், வியாபாரங்கள் போன்றவற்றில் நஷ்ட நிலை நீங்கி, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து லாபங்கள் பெருகும். தரித்திரம், வறுமை நிலை அறவே நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டிகள் நீங்கி செல்வம் பெருக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hanuman beej mantra in Tamil. It is also called as Hanuman mantras in Tamil or Beej mantras in Tamil or Dushta shakti neenga manthiram in Tamil or Hanuman manthirangal in Tamil.