நாளை ஹனுமன் ஜெயந்தி. அனுமனுக்கு உங்கள் கையால் இந்த மாலையை தொடுத்து போட்டால் நினைத்தது நடக்கும். வேண்டுதல் பலிக்கும்.

hanuman
- Advertisement -

மார்கழி மாதம் என்று சொன்னாலே சிறப்பு தான். இந்த மார்கழி மாதத்திற்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில், நாளைய தினம் அனுமன் ஜெயந்தியும் சேர்ந்து வருகின்றது. ஹனுமன் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது ராமாயணம். அனுமனைப் போல ஒரு தொண்டனை, உண்மையான பக்தனை இந்த உலகத்தில் காண முடியாது என்று எம்பெருமானே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள, முயற்சியில் வெற்றி பெற, எண்ணிய காரியம் எல்லாம் ஈடேற ஹனுமன் வழிபாடு மிக மிக சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் அருமை பெருமைகளை இந்த ஒருபதிவில் முழுமையாக நம்மால் சொல்லிவிட முடியாது. வானளாவிய பெருமைகளைக் கொண்ட ராம பக்தரான அனுமனின் ஆசீர்வாதத்தை பெற நாளைய தினம் சுலபமான முறையில் அனுமன் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது.

எப்போதும்போல நாளைய தினம் அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட வேண்டும். பூஜை அறையில் அனுமனின் திருவுருவப்படம் இருந்தால் அதை சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து பூக்களால் அலங்காரம் செய்து கட்டாயம் இரண்டு துளசி இலைகளை அனுமனுக்கு பூஜையில் வைக்க வேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு வெற்றியைத் தரும் வெற்றிலை பூஜைக்கு அவசியம் தேவை. 11, 21 என்ற ஒற்றைப்படை கணக்கில் உங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனை வெற்றிலைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் செந்தூரமும் நமக்குத் தேவை. செந்தூரத்தில் தண்ணீர் ஊற்றி கலந்து, மோதிர விரலால் அந்த செந்தூரத்தை தொட்டு, வெற்றிலையின் நடுவே ‘ராம’ என்ற வார்த்தையை எழுதி வெற்றிலையைச் சுருட்டி மாலையாகக் கட்டி, உங்கள் வீட்டில் இருக்கும் அனுமனின் திருவுருவப் படத்திற்கு போடலாம்.
அனுமனின் திரு உருவப்படம் வீட்டில் இல்லை என்றால், ராமபிரான் திருவுருவப் படத்திற்கு இந்த மாலையை போட்டு வழிபாடு செய்யலாம். எந்த படமும் வீட்டில் இல்லாதவர்கள் இந்த மாலையை அப்படியே பூஜை அறையில் வைத்து பூஜை செய்து கொள்ளுங்கள்.

வீட்டில் உங்களால் முடிந்த நிவேதனத்தை அனுமனுக்கு செய்து வைக்கலாம். குறிப்பாக நாளைய தினம் அனுமன் ஜெயந்தியாக சிறப்பான நிவேத்யம் என்றால் அது வடை. உளுந்து மிளகு சேர்த்த உளுந்த வடை செய்து அனுமனுக்கு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து சிறிதளவு வெண்ணையையும் நிவேதனமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அனுமனுக்கு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய பிரார்த்தனையை மனதார வைத்துக்கொண்டு தீப தூப ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இறுதியாக நீங்கள் தொடுத்து வைத்திருக்கும் வெற்றிலை மாலையை எடுத்துக்கொண்டு போய் உங்கள் வீட்டின் அருகில் கோவிலில் இருக்கும் அனுமன் சிலைக்கு மாலையாக போட்டு விட வேண்டும்.

நீங்கள் என்ன நினைத்து வேண்டி இந்த மாலையில் ‘ராம’ என்ற மந்திரத்தை எழுதுகிறீர்களோ, நீங்கள் என்ன நினைத்து இந்த மாலையை தொடுக்கிறீர்களோ, அந்த வேண்டுதல் நிச்சயமாக கூடிய விரைவில் நிறைவேறும்.

நாளைய தினம் பூஜை அறையில் அமர்ந்து அனுமனுக்கு உகந்த மந்திரங்களை உச்சரிக்கலாம். மந்திரம் தெரியாதவர்கள் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ மந்திரத்தை நாளைய தினம் முழுவதும் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள். ராமாயணத்தில் அனுமனுக்கு மிக மிகப் பிடித்த பகுதி என்றால் அது சுந்தரகாண்டம். வாய்ப்பு உள்ளவர்கள் நாளை ஒரு முறை சுந்தர காண்டத்தை படித்தீர்கள் என்றால், அனுமன் மனம் மகிழ்ந்து நீங்கள் வேண்டிய வரங்களை கொடுத்து விடுவார்.

அமாவாசையும் அனுமன் ஜெயந்தியும் நாளையதினம் சேர்ந்து வரவிருப்பதால், எந்த நேரத்தில் ஹனுமன் வழிபாடு செய்வது என்ற குழப்பம் நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும். நாளை தினம் காலை நேரத்தில் அனுமன் வழிபாடு செய்வது சிறப்பு. முடியாதவர்கள் மாலை 6 மணிக்கும் அனுமன் வழிபாட்டினை மேற்கொள்ளலாம். அனைவருக்கும் ஹனுமனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -