வருடத்தின் 365 நாளும் ராம நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு இந்த அனுமனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். ராம மந்திரம் எந்த இடத்தில் எல்லாம் உச்சரிக்கப்படுகிறதோ, அந்த இடத்திற்கு எல்லாம் அனுமன் வந்து அமர்ந்து கொள்வார். வருடத்தின் 365 நாட்களில் எந்த நாளில் அனுமன் வழிபாட்டை செய்தாலும், அது சிறப்பு குறிய வழிபாடு தான்.
இந்த நாளில் தான் அனுமனை வணங்க வேண்டும், இந்த நாளில் ஹனுமனை வணங்கக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் அனுமன் ஜெயந்தி, அனுமன் பிறந்த நாளன்று அனுமனை வழிபாடும் போது அதற்குரிய பலன் நமக்கு சிறப்பாக இரட்டிப்பாக கிடைக்கும்.
அந்த வகையில் 2024 டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை, மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் வருகிறது. இந்த நாளில் தான் அனுமன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் அனுமன் கோவிலுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுத்து, வழிபாட்டை மேற்கொள்வது, ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
எங்களுடைய வாழ்க்கையில் சனி பகவானால் தான் பிரச்சனை. எங்கள் குடும்பம் சனி பகவானின் தாக்கத்தால் ரொம்பவும் கஷ்டப்படுகிறது. மிளகு வடை, உங்களால் முடிந்த எண்ணிக்கையில் செய்து கொள்ளுங்கள். 11, 21, 27, 51, உங்கள் வசதி படி செய்து, அதை கோர்த்து அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு வடை மாலை சாத்திவிட்டால் போதும்.
உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் சனி பகவானின் தாக்கங்கள் படிப்படியாக குறையும். அதுவும் கருப்பு உளுந்தில் வடைதட்டி மாலை போட்டால் இன்னும் சிறப்பு. வெங்காயம் சேர்க்காமல் உளுந்த வடை மாலையை அனுமனுக்கு சேர்த்து வழிபாடு செய்து பாருங்கள் வாழ்வில் நிம்மதி பிறக்கும்.
தீரா கடன் வீட்டில் கொழுந்து விட்டு எரிகிறது. வீட்டில் பயங்கரமான பண பிரச்சனை, வருமை. கொஞ்சம் செல்வ வளம் கிடைத்தால் நன்றாக இருக்கும். எங்களுடைய வாழ்வில் கொஞ்சம் நிம்மதி நிலவும். இந்த கடுமையான கடன் சுமையிலிருந்து எப்படி வெளிவருவது? அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சாத்துங்கள்.
முடியவில்லை ஒரு பாக்கெட் வெண்ணெயாவது வாங்கிக் கொண்டு போய், கொஞ்சம் வெண்ணெயை அனுமனது வாயில் தடவி, மீதம் வெண்ணெயை அனுமன் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து மீண்டும் அந்த வெண்ணெயை வாங்கி வந்து நீங்கள், குடும்பத்தில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடுங்கள். உங்கள் பண கஷ்டம் நீங்கும்.
சுபகாரிய தடை வீட்டில், கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு, ராகு கேதுவால் பிரச்சனை இருக்கும் போல இருக்கிறது. இதிலிருந்து வெளிவர வேண்டும். கணவன் மனைவி குழந்தைகள் என்று சந்தோஷமாக, குடும்பத்தில் நாட்கள் செல்ல வேண்டும். இதற்கு என்ன பரிகாரம் செய்வது. அனுமனுக்கு கொஞ்சம் செந்தூரம் வாங்கிக் கொண்டு போய் கொடுங்க. அனுமன் பாதத்தில் அந்த செந்தூரத்தை தடவி விட்டு, மீதம் செந்துரத்தை அனுமன் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து அந்த செந்தூரத்தை கொண்டு வந்து தினமும் குடும்பத்தில் இருப்பவர்கள் வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் பல மடங்கு அதிகரிக்கும்.
வாழ்வில் வெற்றி மேல் வெற்றி கிடைப்பதற்கு அனுமனுக்கு வெற்றிலை மாலை, உங்கள் வாழ்நாள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமா. அனுமனுக்கு ஏலக்காய் மாலை, இப்படி அனுமனை, அனுமன் ஜெயந்தி அன்று உங்களால் முடிந்த முறையில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இவையெல்லாம் செய்வதைவிட ராம நாமத்தை அனுமன் ஜெயந்தி அன்று மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள். “ராமா ராமா ராமா” என்று சொல்லுங்கள். ஸ்ரீ ராம ஜெயம் சொல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஈசன் பாதத்தில் இடம் கிடைக்க சனி மஹா பிரதோஷ பரிகாரம்
ஹனுமன் உங்கள் பக்கத்திலேயே இருப்பார். கண்ணுக்கு தெரியவில்லையே என்று சொல்லக்கூடாது. கட்டாயம் காற்றோடு காற்று கலந்திருக்கும் அனுமன் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் பக்கத்தில் இருப்பார். நம்பிக்கையோடு இதை செய்பவர்களுக்கு, அந்த அனுமன் ஏதாவது ஒரு ரூபத்தில் உணர்த்தவும் செய்வார். நீங்கள் வேண்டுமென்றால் இந்த அனுமன் ஜெயந்தி அன்று நேரம் கிடைக்கும் போதெல்லாம், ராம மந்திரத்தை உச்சரித்து பாருங்கள், அனுமனை உணருவீர்கள். ராம நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் பதிவு சமர்ப்பணம்.