நாளைய தினம் மார்கழி மாதத்தில் வந்திருக்கக்கூடிய சனி மஹா பிரதோஷ தினம். இந்த நாளில் எம்பெருமான் வழிபாடு செய்வது எத்தனை கோடி புண்ணியம் தரும் என்பது வார்த்தையால் சொல்ல முடியாத ஒரு விஷயம். நாளை அனைவரும் எம்பெருமானை மனதார நினைத்து வணங்க வேண்டும்.
வழிபாட்டோடு சேர்த்து நாம் செய்யக்கூடிய எளிமையான பரிகாரங்கள் நம் வாழ்வில் இருக்கும் துன்பங்களை நீக்கி, இன்பங்களை கொடுக்கும். அந்த வகையில் நாளைய தினம் செய்ய வேண்டிய ஒரு வழிபாடு, செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவை மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
முதலில் நாளை குளிக்க கூடிய தண்ணீரில் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும் என்று பார்த்து விடுவோம். மார்கழி மாதம் என்றாலே பிரம்ம முகூர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளிப்பது தான் நல்லது. வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளித்தாலும் சரிதான். வாய்ப்பு உள்ளவர்கள் தலைக்கு குளிக்கலாம்.
இல்லை என்பவர்கள் வெறும் உடம்புக்கு மட்டும் குளித்தாலும் போதும். உடம்பு குளித்துவிட்டு அந்த தண்ணீரை தலையில் தெளித்துக் கொள்ளுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் சிவபெருமானுக்கு உகந்த பசுஞ்சான விபூதி 2 சிட்டிகை போட்டு, கொஞ்சமாக கருப்பு எள் போட்டு, கல் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள்.
பிறகு உங்கள் வலது கை ஆள்காட்டி விரலால் அந்த தண்ணீரில் “ஓம்” என்ற மந்திரத்தை எழுதி விட்டு அந்த தண்ணீரைக் கொண்டு குளிக்க வேண்டும். குளிக்கும்போது “ஓம் நமசிவாய” சொல்லி குளியுங்கள். உங்கள் கஷ்டத்தில் பாதி அந்த தண்ணீரோடு கரைந்து, உங்கள் உடம்பை விட்டு வெளியேறிவிடும். இது ஒரு எளிமையான சூட்சம பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பாருங்கள். குளித்து முடித்த உடனேயே உங்களுக்கு ஒரு நிம்மதி பிறப்பதை அந்த நொடியே உணர்வீர்கள்.
வேலைக்கு செல்பவர்களால் நாளை மாலை பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்ய முடியாது. ஆகவே, குளித்து முடித்த உடனே நாளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, எம்பெருமானிடம் உங்கள் வேண்டுதலை எல்லாம் சொல்லிவிட்டு, இந்த பாடலை படியுங்கள். சிவபெருமான் பாதத்தில் உங்களுக்கு இடம் கிடைத்துவிடும்.
சிவபுராணம் பாடல் வரிகள்
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்:
இதையும் படிக்கலாமே: வளர்பிறை சதுர்த்தி விரதம் பலன்கள்
சிவபுராணத்திலிருந்து எடுக்கப்பட்ட பாடல்கள் வரிகள் தான் இது. சிவனின் சென்றடைய சிவன் பாதத்தில் இடம் கிடைக்க அவனை போற்றி பாடக்கூடிய முக்கியமான வரிகள். இந்த பாடல் வரிகளை நாளைய தினம் படிப்பவர்கள் நிச்சயம் அந்த ஈசனின் பாதத்தில் இடம் கிடைக்கும். பொன் வேண்டும் பொருள் வேண்டும், எனக்கு இதைக் கொடு இறைவா, அதைக் கொடு இறைவா என்று கேட்பவர்கள் மத்தியில், ஈசனின் பாதத்தில் இடம் வேண்டும் என்று ஒருநாள் வழிபாடு செய்து பார்ப்போமே, அதில் இருக்கும் மன நிம்மதி என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. உங்களுக்கும் ஈசன் பாதத்தில் இடம் தேவை என்றால் மேல் சொன்ன பரிகாரமும் பாடலும் உங்களுக்கு சொந்தம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.