கஷ்டம் காணாமல் போக அனுமன் படத்தை உங்களுடைய வீட்டில் இந்த திசையில் மாட்டி வையுங்கள். வெற்றியும் சந்தோஷமும் உங்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும்.

hanuman

எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் வீட்டில் இருக்க கூடிய சில தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். முயற்சிசெய்து தோல்வியுற்றவர்கள் நிச்சயமாக துவண்டு தான் போவார்கள். நம் வாழ்க்கையில், நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய பலவகையான பிரச்சனைக்கு தீர்வை கொடுக்கும் ஒரு சுலபமான ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அதை சுலபமாக தீர்க்கக்கூடிய சக்தி அனுமனுக்கு உண்டு.

hanuman

வெற்றியை இவருக்கு மட்டுமே சொந்தமாக்கி வைத்துள்ளார். அந்த வெற்றியை நாம் பெற வேண்டும் என்றால் இந்த ஹனுமனை நம் வீட்டில் எப்படி வழிபாடு செய்ய வேண்டும். ஹனுமனை சிலர் வீட்டில் வைத்து வழிபட கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த ஆஞ்சநேயரை தாராளமாக நம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.

வெறும் ஹனுமன் மட்டும் உள்ள சுவாமி படம் இருந்தாலும் சரி, அல்லது அனுமனோடு சேர்ந்த சிவபெருமான் இருக்கும் படம் கிடைத்தாலும் சரி, ராமர் சீதையோடு சேர்ந்த ஹனுமனின் படம் இருந்தாலும் சரி, அந்த தெய்வத்தின் திருவுருவப் படத்தை உங்கள் வீட்டு, வடமேற்கு மூலையில், தெற்கு பார்த்த வாறு மாட்டி வைத்து, தினம்தோறும் வழிபாடு செய்ய வேண்டும்.

vastu-direction

வடமேற்கு மூலையில், தெற்கு பார்த்தவாறு இந்த தெய்வத்தின் திரு உருவப் படத்தை மாட்டி வைத்தாலே போதும். உங்கள் வீட்டில் நம்பமுடியாத பல அதிசயங்கள் நடக்கும். தீர்க்க முடியாத பல குழப்பங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். எதனால் பிரச்சனை என்றே தெரியாமல் குழம்புபவர்களுக்கும், மனதில் ஒரு தெளிவு பிறக்கும். வீட்டில் வைத்திருக்கும் இந்த அனுமனை எப்படி வழிபடுவது?

- Advertisement -

தினமும் ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலையின் மேல் கொஞ்சமாக செந்தூரத்தை தடவி, அனுமனின் பாதங்களில் வைத்து எடுத்து அந்த செந்தூரத்தை உங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் ஹனுமனின் திருவுருவப்படத்திற்கு வாரத்தில் ஒரு நாள் வியாழக்கிழமை அன்று மட்டுமாவது 11 வெற்றிலைகளை மாலையாகக் கட்டி போட்டால் மிகவும் நல்லது.

senthuram

வாயு பகவானால் இந்த பூமியில் அவதரிக்க பட்டவர் ஹனுமன். வாயுபுத்திரன் அனுமன் அல்லவா அவர்! வாயு பகவானுக்கு சொந்தமான, வடமேற்கு மூலையில் அனுமனை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் முழுமையாக தீர்ந்து விடும். நீங்கள் ஹனுமனை உங்களுடைய வீட்டில் வழிபாடு செய்யத் தொடங்கிய நாள் முதலே உங்கள் கஷ்டங்கள் தீருவதற்கான அறிகுறியை உங்களால் நிச்சயமாக உணர முடியும்.

hanuman-seetha

கஷ்டங்கள் காணாமல் போனால், அதனை தொடர்ந்து வெற்றி நம்மை தேடி வரும். கலியுகத்தில் கடவுளே அவதாரம் எடுத்து வந்து யாருக்கும் உதவி செய்ய முடியாது. உங்கள் கஷ்டங்களை தீர்ப்பதற்கு எந்த மனித ரூபத்திலாபத்து வந்து நிச்சயமாக அந்த அனுமன் உதவி புரிவார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.