- Advertisement -

ஹனுமன் ரகசிய வழிபாடு

- Advertisement -

வழிபாடுகளிலேயே மிகச் சிறந்த வழிபாடு, சக்தி வாய்ந்த வழிபாடு என்றால் அது ஹனுமன் வழிபாடு தான். நமக்கு பிரச்சனை என்று கடவுளிடம் போனால் கூட, அந்த கடவுள் நம்மை சோதித்து பார்ப்பான். ஆனால் அனுமனிடம் பிரச்சனையை எடுத்துக் கொண்டு போய் பாருங்களேன். உங்களுக்கு எந்த சோதனையும் கொடுக்கவே மாட்டார். வானரமாக இந்த பூமியில் பிறந்து, மனிதர்களோடு வாழ்ந்து, கடவுளாக மாறிய இந்த அனுமனுக்கு பவர் ரொம்ப ரொம்ப அதிகம்.

நம்முடைய வாழ்க்கையில் வரும் தீர்க்க முடியாத பிரச்சனைகளை அனுமான் கையில் கொண்டு போய் கொடுத்து விடுங்கள். பிரச்சனைகளுக்கு உண்டான பரிகாரத்தையும் அவனே காட்டிக் கொடுப்பான். பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வையும் அவனே கொடுப்பான். அனுமனை பற்றிய ஒரு சில ஆன்மீகம் சார்ந்த வழிபாடுகளை இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

இந்த வழிபாடுகள் உங்களுக்கு கொஞ்சம் புதுசாக இருக்கலாம். இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலே நிச்சயமாக வாழ்வில் இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதற்கு அந்த அனுமனை சாட்சி. அனுமன் தான் பொறுப்பு.

ஹனுமன் ஸ்வரூப வழிபாடு

ஹனுமன் வாலில் மணிக்கட்டி கொண்டிருப்பது போல, சொரூபம் இருக்கும் அல்லவா. அந்த அனுமனை வழிபாடு செய்தால் உங்கள் வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும். தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு காட்டிக் கொடுக்கும் வேலையை இந்த ஹனுமன் பார்த்துக் கொள்வார். தேவையான பரிகாரங்களை சரியான வழியில் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும் ஹனுமன் இவர்.

- Advertisement -

இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து வணக்கம் சொல்வது போல, அனுமனின் ஸ்வரூபம் சில இடங்களில் காணப்படும். அதுபோல ஹனுமனை பார்த்து வழிபாடு செய்தால், நீங்கள் இவர் காதல் சொன்ன வேண்டுதல் 48 நாட்களில் நடக்கும். 48 நாள் உங்கள் பிரச்சினையை இந்த ஹனுமான் காதல் சொல்லி பாருங்கள் பிறகு உங்களுக்கே தெரியும்.

சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் அனுமன் ஸ்வரூபம், உங்களை கடமை தவறாமல் வேலை செய்ய வைக்கும். தீராத நோய்நொடிகளை தீர்த்து வைக்கவும் இந்த சஞ்சீவி மலை ஹனுமனை வழிபாடு செய்யலாம் ‌

- Advertisement -

கண்மூடி அமர்ந்து, ஹனுமன் தியான நிலையில் இருப்பார். இப்படிப்பட்ட அனுமனை வழிபாடு செய்தால் அவர் நமக்கு நல்ல நண்பனாகவும் இருப்பார். நம்முடைய வாழ்க்கையை நம்ம கையைப் பிடித்துக் கொண்டு வழி நடத்தி தருவார். மன அமைதியை கொடுப்பார்.

ஹனுமன் விஸ்வரூப ஹனுமன். அப்படியே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு சிலை இருக்கிறது. பெரிய ஹனுமன் இருக்கிறார். அவரை தினமும் சென்று வழிபாடு செய்தால், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தேவையான இல்லாத பிரச்சனைகள் உங்களை விட்டு தானாக விலகி செல்லும்.

வடை மாலை சாத்தி இருக்கும் அனுமனை சென்று வழிபாடு செய்து பாருங்கள், உங்கள் கர்ம வினை குறையும். ராகு கேதுவால் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கும். வாழ்க்கையில் நல்லது நடக்கும்.

உடம்பு முழுவதும் செந்தூரம் பூசிக்கொண்டு இருக்கும் ஹனுமனை பார்க்க, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பணகஷ்டம் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் இந்த ஹனுமனை கும்பிடலாம். குடும்ப ஒற்றுமை இருக்கும்.

நவகிரகங்களால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அனுமனது பாதத்தை இறுக்கப்பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயம் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். ராமாயணத்தில் ராமர், அனைவருக்கும் மோட்சம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடன் அழைத்துச் சென்றாராம். ஆனால் ராமர் அழைத்த போது ஹனுமான் மட்டும் போகவில்லையா ஏன் தெரியுமா.

இதையும் படிக்கலாமே: ஆஷாட நவராத்திரி இரண்டாவது நாள் வழிபாடு

மோட்சம் அடைந்து விட்டால் ராமரை தரிசனம் செய்ய முடியாது. ராம நாமத்தை சொல்ல முடியாது என்ற ஒரே காரணத்திற்காக ஹனுமன் மோட்சமே வேண்டாம் என்று சொல்லி இந்த பூலோகத்திலேயே தங்கி விட்டதாக புராண கதைகள் சொல்லுகிறது. ராமா ராமா என்று சொல்லிக்கொண்டு ஹனுமன் பின்னாலே செல்லுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் அதிசயங்கள் ஒன்றா இரண்டா, பல ஆயிரம். இதற்கு மேல் சொல்வதற்கு வார்த்தை ஒன்றும் இல்லை. எல்லாமே அந்த ராமரின் செயல். ராமர் பேரை சொல்லும் போது அனுமன் உங்களோடு ஓடி வந்து அமர்ந்து கொள்வார் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்