தீய சகவாசம், பணமுடக்கம் ஆகியவை நீங்க இந்த ஸ்லோகத்தை துதியுங்கள்

hanuman-1
- Advertisement -

மனிதன் என்பவன் தனித்து வாழ படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அல்ல. தனக்கென்று ஒரு குடும்பம் இருந்தாலும் சமுதாயத்தில் அனைவருடனும் நட்பு கொண்டு, அனைவருக்கும் நன்மை ஏற்படும் வகையிலான காரியங்களை செய்வதே சிறந்தது. தற்காலங்களில் பலரும் தீய நடவடிக்கைகள் கொண்ட நபர்களுடன் சகவாசம் கொண்டு கேடான பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு, குடும்பத்தினரை வேதனை படுத்துகின்றனர்.ஒரு சிலருக்கு பணவரவு இல்லமல் பணமுடை உண்டாகிறது. இவற்றையெல்லாம் தீர்க்கும் “ஸ்ரீ அனுமன் ஸ்லோகம்” இதோ.

Lord Hanuman

அனுமன் ஸ்லோகம்

ஓம் ஜம் ஹரீம், ஹனுமதே ராமதூதாயலங்கா வித்வம்ஸனாய;
அஞ்ஜனா கர்ப்ப ஸ்ம்பூதாய ஸாகினீடாகினீவித்வப்ஸனாய

- Advertisement -

கிலகிய பூபூ காரினே விபீஷணாய, ஹனுமத் தேவாய ஓம்
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹீரீம் ஹ்ரும் பட் ஸ்வாஹா

ராமதூதரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் ஸ்லோகம் இது.இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலுக்கு சென்று அனுமனுக்கு துளசி மாலை மற்றும் வெண்ணை சாற்றி இம்மந்திரத்தை 108 முறை மனதார துதித்து வந்தால் உங்கள் குடும்பத்தில் தீய பழக்கங்கள், சகவாசம் கொண்ட நபர்கள் விரைவில் அதிலிருந்து விடுபடுவார்கள். வேலை, தொழில் வியாபாரங்களில் இருந்து வந்த பணமுடை நீங்கும். கிரக தோஷங்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்பு நீங்கும். எதிரிகள் ஒழிவர்.

- Advertisement -

செயற்கரிய செயல்புரியும் என் சுவாமியே உம்மால் இயலாததும் உள்ளதோ சொல்வீர். ஸ்ரீ ராமதூதரும் கருணைக் கடலும் ஆகிய ஆஞ்சநேயரே என் பிராத்தனையை நிறைவேற்றிட அருள்புரிய வேண்டும் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருளாகும். தனது உண்மையான பக்தர்களுக்கு வெகு சீக்கிரத்தில் ஏதாவது ஒரு வடிவில் வந்து உதவுபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். அனுமனை நித்தம் வழிபடும் நபர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்க பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
கடன் பிரச்சனை தீர மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Hanuman slokam in Tamil. It is also called as Hanuman mantra in Tamil or Anjaneya stuti in Tamil or Hanuman stotram in Tamil or Anjaneya mantram in Tamil.

- Advertisement -