வேண்டிய வேண்டுதலை, உடனே நிறைவேற்றித் தரும் ஹனுமன் வழிபாடு!

hanuman-vetrilai

நம்மில், நிறைய பேருக்கு ஹனுமன் வழிபாடு என்றாலே ஒருவித மன பயம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், ஹனுமன் வழிபாடு செய்தால் பிரம்மச்சரிய விரதம் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து எல்லோர் மனதிலும் இருப்பது இயற்கைதான். ஆனால், இல்லற வாழ்வில் இருப்பவர்களும் ஹனுமனை மனதார வழிபடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ராமரையும், சீதையையும் ஒன்றாக இணைப்பதற்கு பாலமாக இருந்தவர், அனுமன் என்பதை நாம் மறந்திருக்க மாட்டோம். ஆகவே, எந்தவிதமான பயம் இல்லாமல், ஹனுமனை தினம்தோறும் நம் மனதில் நினைத்து வழிபடலாம். வேண்டிய வேண்டுதலை, உடனே நிறைவேற்றி கொடுக்கும் அனுமனை, எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதாவது அனுமனுக்கு மிகவும் பிடித்தது வெற்றிலை. வெற்றியை தேடித்தரும் வெற்றிலையை வைத்து ஹனுமன் வழிபாடு!

hanuman

இந்த வழிபாட்டை தொடர்ந்து 11 நாட்கள் செய்தாலே உங்களது வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும். உங்கள் வீட்டில் அனுமனின் திருவுருவப்படம் இருந்தால், அந்தப் படத்துக்கு பூ போட்டு, அலங்காரம் செய்துவிட்டு, பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, வழிபாட்டை தொடங்கலாம். நைவேத்தியமாக ஏதாவது ஒரு பழத்தை வைத்து விடுங்கள். ஹனுமனின் திருவுருவ படம் இல்லாதவர்கள், நீங்கள் ஏற்றிவைக்கும் ஜோதியை, ஹனுமனாக பாவித்து, இந்த பரிகாரத்தை செய்வதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் வழிபாட்டினை நம்பிக்கையோடு செய்ய வேண்டும். காம்புப் பகுதியும், நுனி பகுதியும் எந்த சேதாரமும் இல்லாத வெற்றிலை 1 எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலையின் நடுவே ஹனுமனுக்கு பிடித்த செந்தூரத்தை தடவிக் கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொள்ள வேண்டும். கட்டாயம் ஒரு ரூபாய் நாணயத்தை தான் வைக்க வேண்டும்.

one rupee

செந்தூரம் தடவி வைத்திருக்கும் அந்த வெற்றிலையையும், ஒரு ரூபாய் நாணயத்தோடு சேர்த்து, நான்காக மடித்து, ஒரு நூல் சுற்றி கட்டி, ஹனுமனின் புகைப்படத்திற்கு காலடியில் வைக்க வேண்டும். ஹனுமனின் புகைபடம் இல்லாதவர்கள், உங்கள் பூஜை மாடத்தில் மேல் வைத்துக்கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை, நீங்கள் செய்யும் போது உங்களது மனதில் இருக்கும் வேண்டுதலை சொல்லிக்கொண்டே செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய தேவை எதுவாக இருந்தாலும், அந்த ஒரு வரியை மட்டும் மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். ‘வருமானம் அதிகரிக்க வேண்டும். கடன் தொல்லை தீர வேண்டும். அல்லது உங்களது பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கவேண்டும். குழந்தை பேறு கிடைக்க வேண்டும். தொழில் முடக்கம் சரியாக வேண்டும். கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும்.’ இப்படி எதுவாக இருந்தாலும், 11 நாட்களும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை வைத்து வழிபாடு செய்து பாருங்கள். அந்த வேண்டுதலுக்காக தீர்வு கட்டாயம் 11 நாட்களில் உங்களுக்கு கிடைக்கும் என்பது சந்தேகமே இல்லை. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் 11 நாட்களும் ஒரே வேண்டுதல் தான் வைக்கப்படவேண்டும். வேண்டுதலை மாற்றி மாற்றி வைக்க கூடாது.

குறிப்பிட்டுச் சொல்லப் போனால் 11 நாட்களுக்கு முன்பாகவே நல்ல செய்தி வருவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த வழிபாட்டை இடையிலேயே நிறுத்தி விடக்கூடாது. 11 நாட்களும் வழிபாட்டை முழுமையாக முடிக்க வேண்டும். 11வது நாள் வெற்றிலையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்துவிட்டு, மற்ற வெற்றிலைகளை கால் படாத இடங்களில் போட்டு விடுங்கள்.

vetrilai

அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும், கோவில் உண்டியலில் சேர்க்க வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் அனுமன் கோவில் இருந்தால் அதில் போட்டு விடலாம். ஹனுமன் கோவில் உண்டியலில் போட முடியாதவர்கள், மற்ற ஏதாவது ஒரு கோவிலில், அந்த ஒரு ரூபாய் நாணயங்களை உண்டியலில் சேர்த்து விடலாம்.

vetrilai-kodi

இந்த 11 நாட்களும் கட்டாயம் மாமிசம் சாப்பிடக்கூடாது. உங்களுடைய வீடு சுத்தபத்தமாக இருக்க வேண்டும். மனசுத்தம் கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 11 நாட்களில் நீங்கள் வேண்டிய வரம் உங்களுக்கு கிடைக்கப் போவது என்றால் இந்த வழிபாட்டினை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி, பண வரவு அதிகரிக்க நில வாசல்படியில் இந்த ஒரு பூ வைத்தாலே போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vetrilai pariharam in Tamil. Vetrilai pariharam Tamil. Hanuman valipadu. Hanuman valipadu Tamil.