ஹேப்பி பர்த் டே மிஸ்டர் 360. டீவில்லியர்ஸின் அதிவேக சதம் பற்றி உங்களுக்கு தெரியும். ஆனால், பிறந்த நாள் பரிசாக சதத்தில் இவர் படைத்த அறிய சாதனை தகவல் இதோ – பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.பி.டி

ABD

தென்னாபிரிக்க அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் இன்று அவரது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் அதிரடி ஆட்டத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. அந்த அன்பான ரசிகர்கள் மூலம் அவருக்கு கிடைத்த பெயர் தான் மிஸ்டர் 360.

Devilliers

பெங்களூரு ராயல் சேலன்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் ஐ.பி.எல் போட்டிகளில் அணைத்து முன்னணி பந்துவீச்சாளார்களையும் நாலாபுறமும் சிதறவிட்டுட்டு காட்டுடி அடித்ததை நாம் பார்த்துள்ளோம். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று தனது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளிலும், 228 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 78 டி20 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடி இருக்கிறார். இவரின் அதிவேக சதம் பற்றி உங்கள் அனைவர்க்கும் தெரியும். ஆனால், தெரியாத ஒரு சாதனையை இன்று அவர் பிறந்தநாள் அன்று உங்களுக்கு தெரிய படுத்த விரும்புகிறேன்.

Devilliers 1

அதன்படி, ஒருநாள் போட்டிகளில் இவர் 25 சதங்களை அடித்துள்ளார். அந்த அணைத்து சதமும் 100 ஸ்ட்ரைக் ரேட்க்கு மேல் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே இவர் ஒருவர் மட்டும் தான் இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

இதையும் படிக்கலாமே :

கிட்-அப் சேலன்ஞ் . போட்டிக்கு முதலில் தயாராவது யார் ? 30 வயது பிட்டஸ்ட் கோலியா ? 45 வயது ஓல்டஸ்ட் சச்சினா ? – விடை வீடியோ வடிவில் இதோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்