உங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் நீங்கி நன்மைகள் ஏற்பட இதை செய்யுங்கள்

veppilai-vilakku
- Advertisement -

ஒரு சிலருக்கு வெளியில் இருக்கும் போது மன நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்கும். ஆனால் வீட்டிற்கு திரும்ப வேண்டும் என்றாலே ஒரு வித பதட்டமும், கவலையும் ஏற்படுகிறது. காரணம் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுடன் எந்நேரமும் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படுவது தான். இதற்கான உண்மையான காரணம் என்னவென்றால் நம்மால் உணர முடியாத பல நுட்பமான தீய அதிர்வுகள் வீட்டில் நிறைந்திருப்பதால் அங்கு வசிக்கும் யாருக்குமே நிம்மதியான ஒரு வாழ்வு இல்லாமல் போகிறது. இத்தகைய பிரச்சனைகள் நீங்கி குடும்ப ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்கான ஒரு பரிகார முறையை தெரிந்து கொள்ளலாம்.

deepam

தீய அதிர்வுகளை விளக்குவதற்காக வீட்டில் தீபம் ஏற்றும் பழக்கத்தை நாம் தொன்றுதொட்டு கடைபிடித்து வருகிறோம். தீபம் ஏற்றும் முறைகளில் பல விதமான ஆன்மீக சூட்சுமங்கள் உள்ளன. ஒவ்வொரு முறையில் தீபமேற்றுவது ஒவ்வொரு வகையான பிரச்சனையைப் போக்கும். அந்த வகையில் குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்க ஏற்றப்படும் தீபம் தான் வேப்பிலை தீபம் முறையாகும்.

- Advertisement -

தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டு வாசல் படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து கொள்ள வேண்டும். அந்த இரண்டு சதுரங்களிலும் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு இருப்பது நல்லது. பிறகு அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து, எண்ணை ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

மேற்கண்ட முறையில் தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால் அந்த வீட்டில் இருக்கின்ற எதிர்மறையான விடயங்கள் அனைத்தும் விரைவிலேயே நேர்மறையான ஆற்றல்களாக மாறுவதை நாம் காணலாம். குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் போன்றவை நீங்கும். பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் இந்த பரிகாரம் செய்வதால் கூடிய விரைவில் ஒன்றிணைந்து வாழ ஆரம்பிப்பார்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
இதை செய்தால் வீட்டில் செல்வம் சேரும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Happy family pariharam in Tamil. It is also called as Kudumba magilchi erpada in Tamil or Kudumba prachanaigal theera in Tamil or Magilchi adhikarika in Tamil or Veetil prachanaigal theera in Tamil.

- Advertisement -