இந்த ஐடியா மட்டும் தெரிஞ்சா போதும். கனமான ரொம்ப பெரிய போர்வையை கூட, கஷ்டமே இல்லாமல் ஈஸியா துவைக்கலாம். அதுவும் கையாலேயே.

bedsheet
- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கும் சில கனமான போர்வைகளை நம்மால் வாஷிங் மெஷினில் போட்டு துவைக்க முடியாது. காரணம் அந்த போர்வை சீக்கிரமே நூல் நூலாக பிரிந்து வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், மிகவும் கனமான மிருதுவான போர்வைகளை துவைப்பதற்கு நாம் ரொம்பவும் கஷ்டப்படுவோம். இதேபோல் கனமான மிதியடிகளை அழுக்குப் போக துவைப்பது என்றாலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் கஷ்டமான வேலை நான். இப்படி கனமான துணிகளை சுலபமாக கையில் துவைக்க ஒரு சூப்பர் ஐடியா உங்களுக்காக.

wash

நிறைய பேருக்கு இந்த ஐடியா தெரிந்திருக்கலாம். தெரிஞ்சவங்க யாரும் திட்டாதீங்க. சிலருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். தெரியாதவர்கள் ஒரு முறை இந்த முறையை பின்பற்றி கனமான துணிகளை, கனமான போர்வைகளை துவைத்துப் பாருங்கள்.

- Advertisement -

எப்போதும் போல தண்ணீரில் துணி துவைக்கும் பவுடர் அல்லது லிக்விடை சேர்த்து நன்றாக கரைத்து விட்டு, அந்த தண்ணீரில் கனமான துணியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 1/2 மணி நேரம் அல்லது 1 மணி நேரம் வரை துணி சோப்பு தண்ணீரில் ஊறலாம். பட்கெட்டில், சோப்பு தண்ணீரில் போர்வை ஊறியதும் அதனுள்ளே, உங்கள் வீட்டில் இருக்கும் சிறு பிள்ளைகளை ஏரி நன்றாக மிதிக்க சொல்லுங்கள்.

bedsheet1

அதாவது மார்ச் பாக்ஸ் செய்வார்கள் அல்லவா, குழந்தைகள் வலது காலையும் இடது காலையும் ஒரு கால் மாற்றி மற்றொரு காலைத் தூக்கி அப்படியே நன்றாக அந்தப் போர்வையை ஒரு நிமிடம் போல மிதிக்கட்டும். அதன்பின்பு சோப்புத் தண்ணீரில் இருந்து அந்த போர்வையை எடுத்து விடுங்கள். அந்த சோப்புத் தண்ணீரில் போர்வையில் இருக்கும் அழுக்கு அத்தனையும் வந்திருக்கும்.

- Advertisement -

மீண்டும் நல்ல தண்ணீரில் அந்த போர்வையை போட்டு மீண்டும் உங்களுடைய குழந்தையை விட்டு நன்றாக மிதிக்க சொல்லுங்கள். இரண்டு முறை இப்படி உங்கள் வீட்டு பிள்ளைகளை அந்த கனமான துணியின் மீது இரண்டு நிமிடம் மிதிக்க வைத்தாலே போதும். போர்வையில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் சுத்தமாக நீங்கி விடும்.

clothes-on-bed

ஏங்க குழந்தைகள் தான் இப்படி பண்ணனுமா. பெரியவர்கள் பண்ண கூடாதா, என்று நிச்சயமாக உங்களுக்கு சந்தேகம் வரும். பெரியவர்களும் பண்ணலாம். ஆனால் பிளாஸ்டிக் பக்கெட் பயன்படுத்தக் கூடாது. ஸ்டீல் பக்கெட், அலுமினிய கூடை, இருந்தால் அதன் உள்ளே துணிகளை ஊற வைத்துவிட்டு பெரியவர்கள் காலை சுத்தமாக கழுவிவிட்டு பெரியவர்களும் மிதித்து இந்த முறையில் உங்களுடைய கனமான போர்வையில் அழுக்கை நீக்கி கொள்ளலாம்.

bedroom

வேலை சுலபமாக முடிந்துவிடும். இறுதியாக ஒருமுறை நல்ல தண்ணீரை ஊற்றி போர்வையை நன்றாக அலசி அதன் பின்பு, நல்ல வெயிலில் காய போட்டு விடுங்கள். சூப்பரா போர்வை ரெடியாயிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்த ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -