பேங்க் அதிகாரிக்கு பயந்து காரை மறைத்து வைத்தேன் – ஹார்டிக் பாண்டியா

pandya-1

இந்திய அணியின் வளர்ந்துவரும் இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இந்திய அணியில் மூன்றுவகை போட்டிகளிலும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாகவே உள்ளது. நீண்ட நாளுக்கு பிறகு இந்திய அணிக்கு கிடைத்த ஆல்ரவுண்டராக பாண்டியா கருதப்படுகிறார். இவரது அண்ணன் குருனால் பாண்டியாவும் இந்திய அணியின் டி20 போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

pandiya

ஹார்டிக் பாண்டியா ரஞ்சி கோப்பை போட்டிகளில் பரோடா அணிக்காக விளையாடினார். பிறகு இவரது ஆட்டம் தேர்வுக்குழுவினர் கண்களில் படத்தொடங்கியது. இதற்கடுத்து IPL போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரில் அவரது ஆட்டம் மிளிர அவர் இந்திய தேசிய அணிக்கு தேர்வானார்.

அதன் பிறகு இவர் உச்சம் தொட்டார். இவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றி பேசிய ஹார்டிக் பாண்டியா பேசியதாவது : நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்தில் நானும் என் அண்ணனும் ஒரு பேங்க் உதவி மூலம் கார் ஒன்றை வாங்கினோம். அப்போது எங்களிடம் அதற்கு நிலுவைத்தொகை கட்ட பணம் இல்லாததால் பேங்கில் இருந்து போன் செய்வார்கள்.

KL and HP

அவர்கள் காரை எங்களிடம் இருந்து எடுத்து சென்றுவிடுவார்களோ என்று பயந்து நாங்கள் காரை எங்களது நண்பர் வீட்டில் மறைத்து வைத்தோம். இப்போது அனைத்து வசதிகளும் எங்களிடம் இருந்தும் அந்த கார் எங்களுக்கு ராசியான ஒரு பொருளாக அதை நாங்கள் பாதுகாத்து வருகிறோம் என்று தனது ஆரம்பகால வாழ்க்கை பற்றி பேசினார் பாண்டியா.

இதையும் படிக்கலாமே :

700 கோடி செலவில் இந்தியாவில் அமைய உள்ள உலகின் பெரிய மைதானம். 1,10,000 இருக்கைகள் – அகமதாபாத்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்