ஹார்டிக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் இல்லை. அவரை விட இவர்தான் சிறந்த ஆல்ரவுண்டர் – மேத்யூ ஹைடன்

Hayden

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

pandya

எனவே இந்த தொடர்தான் உலககோப்பைக்கு முன்னதான இந்திய அணியின் கடைசி ஒருநாள் தொடராகவும், இந்திய அணியின் பலத்தினை சோதிக்கும் ஒரு தொடராகவும் அமையும். இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஹைடன் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் ஹைடன் கூறியதாவது : தற்போது உள்ள கிரிக்கெட் அணிகளில் ஹார்டிக் பாண்டியாவே சிறந்த ஆல்ரவுண்டர் என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால், அவரை விட சிறந்த ஆல்ரவுண்டர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்டோனிஸ் தான் பெஸ்ட். அவரின் வேகம் மற்றும் சிறப்பான பேட்டிங் போன்றவை அவரிடம் உள்ளது.

Stonis

ஸ்டோனிஸ் இந்தவருடம் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் நிச்சயம் அசத்துவார் வ்ன்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

இந்த காளியோட ஆட்டத்த பாகத்தானே போற. ஐ.பி.எல் சென்னை அணி குறித்து தமிழில் ட்வீட் செய்து அசத்திய – இம்ரான் தாஹிர் வைரல் பதிவு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள