இந்த காளியோட ஆட்டத்த பாகத்தானே போற. ஐ.பி.எல் சென்னை அணி குறித்து தமிழில் ட்வீட் செய்து அசத்திய – இம்ரான் தாஹிர் வைரல் பதிவு

Tahir

இந்த 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டிகள் வரும் மார்ச் 23ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த வருடம் கோப்பையை கைப்பற்றியதன் மூலமாக சென்னையில் நடைபெற உள்ளது.

CSK

இதற்கான முறையான அட்டவணையை ஐ.பி.எல் நிர்வாகம் முறைப்படி வெளியிட்டது. அதன்படி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிராக முதல் போட்டி மார்ச் மாதம் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

மேலும், முதல் 15 போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை அணி ரசிகர்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனியே ஒரு அட்டவணையை தங்களது ரசிகர்களுக்காக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு பதிலளித்து சி.எஸ்.கே வீரரான இம்ரான் தாஹிர் தமிழில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு :

அவர் ரஜினி நடித்த பேட்டை பட வசனத்துடன் பதிவினை பதிவிட்டு இருந்தார். அதற்கு சி.எஸ்.கே நிர்வாகமும் திரும்ப பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட – ஐ.சி.சி தலைவர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்