குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தலையில் இருக்கும் பேன் தொல்லை ஒரே இரவில் முழுவதுமாக நீங்க இந்த எளிய குறிப்பை சரியான முறையில் பயன்படுத்துங்கள்

lice
- Advertisement -

முந்தைய காலத்தில் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் வயதான பெரியவர்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால் இன்றைய தலைமுறைகள் தனிக்குடித்தனம் என்ற பெயரில் அவர்களுடன் பெரியவர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்து வருகிறார்கள். இதுபோன்ற நிலைமைகளில் குழந்தைகளை பராமரிப்பதற்கு சரியான ஆட்கள் இருப்பதில்லை எனவே குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாகிறது. அதுபோல வெளியில் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும் சுற்றுச் சூழல் காரணமாக தலையில் பேன் தொல்லை, பொடுகுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளை முழுவதுமாக அகற்ற இந்த எளிய குறிப்பை பயன்படுத்தினால் போதும். ஒரே இரவில் உங்கள் தலையில் இருக்கும் 50 சதவீத பேன் தொல்லை தீர்ந்து விடும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

குழந்தைகள் மிகவும் சுட்டித்தனமான இருப்பவர்கள். எனவே அவர்கள் விளையாடும் பொழுது கைகளில் இருக்கும் அழுக்குகள் அவர்களின் தலையில் ஒட்டிக்கொள்கின்றன. தினமும் இவர்களை சரியாக பராமரிக்க முடியாததால் அந்த அழுக்குகள் சேர்ந்து தலையில் பேன் தொல்லை அதிகமாகிறது. இவர்களின் பெற்றோர்களும் தினமும் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தைகளை சரியாக பராமரிக்க முடிவதில்லை.

- Advertisement -

அதுபோலத்தான் வெளியில் சென்று வரும் பெரியவர்களுக்கும் தூசு தொல்லை காரணமாக தலையில் பொடுகு மற்றும் பேன் பிரச்சினை அதிகமாகிறது. இவர்களுக்கும் நேரமின்மை காரணமாக இவற்றை சரியாக பராமரிக்க முடிவதில்லை. இதுபோன்ற சமயங்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த எளிய குறிப்பை சரியாக பயன்படுத்தி வந்தால் பேன் தொல்லையிலிருந்து எளிதாக விடுபட முடியும்.

முதலில் 10 பல் பூண்டை தோல் நீக்கி விட்டு, அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த பூண்டு பேஸ்டை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தலை முடியின் வேர்க்கால்களில் பூசிவிட வேண்டும். இதற்காக சீப்பை பயன்படுத்தி சிறிது சிறிதாக முடியை வாகு எடுத்து சீவி விட்டு, வேர் கால்களில் படுமாறு தலை முழுவதும் பூசி விடவேண்டும். பின்னர் இதனை ஒரு மணிநேரத்திற்கு அப்படியே ஊறவிட்டு ஷாம்பு ஏதும் சேர்க்காமல் தலை முடியை வெறும் தண்ணீரில் அலசி குளிக்க வேண்டும்.

பிறகு தலை முடியில் ஈரம் காய்ந்த உடன் எப்பொழுதும் போல தேங்காய் எண்ணெய் தேய்த்துவிட்டு, பேன் சீப்பு பயன்படுத்தி தலை வராமல் அப்படியே விட வேண்டும். பின்னர் இரவு உறங்கி விட்டு மறுநாள் காலை எழுந்தவுடன் தலைமுடியை சிக்கெடுத்து பேன் சீப்பு பயன்படுத்தி தலை வார வேண்டும். அப்பொழுது பூண்டின் காரத்தன்மை காரணமாக தலையில் இருக்க முடியாமல் பேண்கள் அனைத்தும் சீப்பு வழியாக வெளியேறிவிடும். இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து பாருங்கள். உங்களுக்கு இருக்கும் பேன் பிரச்சனை முழுவதுமாக தீர்ந்து விடும்.

- Advertisement -