ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உங்களுடைய முடியும், அழகும் குறைந்து போகிறதா? தினமும் 1 டம்ளர் பாலை இப்படி இப்படி குடித்தால் உங்களுடைய அழகுக்கு எந்த ஆபத்தும் வராது.

milk
- Advertisement -

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து என்பது தினம் தோறும் நிறைவாக கிடைத்தால் தான் அழகும் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால் முடி உதிர்வு ஏற்படும். தோல் சுருக்கம் ஏற்படும். இளமையிலேயே வயதான தோற்றத்தை பெறுவீர்கள். ஊட்டச்சத்து குறைபாடு சரி செய்ய ஒரு புரோட்டின் ரிச் ட்ரிங்க் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் புரதச்சத்து, கால்சியம், மினரல் அனைத்தும் ஒரு சேர கிடைக்கும். மிக சுலபமான முறையில் சத்தான ரிச் புரோட்டின் டிரிங்க் ரெசிபி இதோ உங்களுக்காக.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 ஸ்பூன் சப்ஜா விதைகளை போட்டு, 1/4 கப் சுடுதண்ணீரை ஊற்றி, 10 நிமிடங்கள் போல ஊற வைத்துக் கொள்ளுங்கள். இந்த விதை அப்படியே ஊறட்டும்.

- Advertisement -

அதன் பின்பு வால்நட் – 1 ஸ்பூன், பாதாம் பருப்பு – 10, முந்திரி பருப்பு – 6 இந்த நட்ஸ் வகைகளை வெதுவெதுப்பான பாலில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இதுவும் ஊறட்டும். இந்த பருப்பு வகைகளுக்கு பதிலாக உங்களுக்கு வேறு ஏதாவது நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும் என்றாலும் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஊற வைத்திருக்கும் நட்ஸ் வகைகளை பாலோடு எடுத்து இந்த மிக்ஸி ஜாரில் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு 1/2 கப் அளவு பால், கொட்டை நீக்கிய 2 பேரிச்சம் பழங்களை சேர்த்து இதை ஸ்மூத்தாக அரைத்து ஒரு டம்ளருக்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த நட்ஸ் வகைகளோடு சேர்த்து அரைத்த பாலுடன் ஊற வைத்திருக்கும் சப்ஜா விதைகளை போட்டு நன்றாக கலந்து அப்படியே குடித்து விட வேண்டியதுதான். இது மிக மிக சுவையான ஒரு புரோட்டின் டிரிங்க்.

- Advertisement -

இதில் இனிப்பு சுவைக்காக சர்க்கரை தேன் எதுவுமே சேர்க்க வேண்டாம். பேரிச்சம் பழத்தில் இருக்கும் சுவையே போதுமானது. கூடுமானவரை இதை பசும்பாலில் தயார் செய்வது நல்லது. பசும்பால் கிடைக்காதவர்கள் பாக்கெட் பாலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினமும் இந்த பாலை குடித்து வர உடல் அவ்வளவு ஆரோக்கியம் பெறும். அது மட்டுமல்லாமல் நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசிக்கவே பசிக்காது. டயட்டில் உள்ளவர்களும் இந்த குறிப்பை தாராளமாக பின்பற்றலாம்.

உங்களுடைய அழகுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. முடி நன்றாக வளர வேண்டும். முடி கொட்டுவது உடனடியாக நிற்க வேண்டும் என்றால் இந்த குறிப்பை பின்பற்றுங்கள். குறிப்பாக உங்களுக்கு திருமணம் நடப்பதற்கு இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு முன்பாகவே இந்த பாலை குடித்து வந்தீங்கன்னா நீங்க பார்க்க அவ்வளவு அழகா மாறிடுவீங்க. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -