வித்தியாசமான, சுவையான, ஆரோக்கியமுள்ள ‘ஜவ்வரிசி கொழுக்கட்டை’ இப்படி செய்து கொடுத்தால் வீட்டில் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்?

javvarisi-kozhukattai1
- Advertisement -

ஆரோக்கியம் மிகுந்த கொழுக்கட்டையை ஜவ்வரிசி கொண்டும் தயாரிக்க முடியும். பாயாசத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த ஜவ்வரிசியை வைத்து ஏராளமான தின்பண்டங்களை தயாரிக்கலாம்! அதில் இது போல ஜவ்வரிசி கொழுக்கட்டை செய்து கொடுத்தால் வீட்டில் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்? குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இந்த ஜவ்வரிசி கொழுக்கட்டை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஜவ்வரிசி கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், வறுத்த வேர்க்கடலை – கால் கப், முந்திரி, பாதாம் தலா 10, பேரிச்சை பழம் – 4, ஏலக்காய் – 2, பொடித்த வெல்லம் – கால் கப், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

ஜவ்வரிசி கொழுக்கட்டை செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். ஜவ்வரிசியில் மாவு ஜவ்வரிசி, நைலான் ஜவ்வரிசி என்று இரண்டு வகை உண்டு. மாவு ஜவ்வரிசி மாவு போல பெரிதாக இருக்கும். நைலான் ஜவ்வரிசி என்பது சிறுசிறு உருண்டைகளாக இருக்கும். இந்த சிறிய அளவிலான ஜவ்வரிசியை தான் நீங்கள் வாங்க வேண்டும். ஜவ்வரிசியை ஒரு முறை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவிவிட்டு பின்னர் மீண்டும் நல்ல தண்ணீர் ஊற்றி குறைந்தது மூன்று மணி நேரமாவது கண்டிப்பாக ஊற வைக்க வேண்டும்.

ஜவ்வரிசியை ஊற வைத்துவிட்டு, பின்னர் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெல்லத்தை உதிரியாக பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள். வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பாதாம் போன்றவை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து சேர்த்துக் கொள்ளலாம். பொடித்த வெல்லத்திற்கு பதிலாக பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை, கற்கண்டு, கருப்பட்டி போன்றவையும் சேர்க்கலாம். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொண்டு அதில் பொடித்த வெல்லம், துருவிய தேங்காய், இரண்டு ஏலக்காய், முந்திரி, பாதாம், வறுத்த வேர்க்கடலை, பேரீச்சம்பழம் ஆகியவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்க வேண்டும். பேரீச்சம்பழத்தை விதைகள் நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். மூன்று மணி நேரத்திற்கு பிறகு நன்கு ஊறிய ஜவ்வரிசியை தண்ணீரின்றி ஒரு பெரிய மிக்சி ஜாரில் போட்டு கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு கொஞ்சமாக உப்பு சேர்த்து மீண்டும் ஒரு முறை ஒரு சுற்று சுற்றி எடுத்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு அரைபடும். கொழுக்கட்டை மாவை கொஞ்சமாக கையில் எடுத்து உருட்டி கொள்ளுங்கள். பிறகு தட்டையாக தட்டிக் கொள்ளுங்கள்.

நீங்கள் தயாரித்து வைத்துள்ள பூரணத்தை சேர்க்க வேண்டும். பூரணத்தை சேர்த்த பின்பு மாவைக் கொண்டு நன்கு மூடி கொழுக்கட்டை உருட்டுவது போல உருண்டையாக உருட்டிக் கொள்ளுங்கள். பூரணம் வெளியில் வரக்கூடாது. அது போல உருட்டிக் கொள்ளுங்கள். பின்பு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அதன் மேல் இட்லி துணியை விரித்து ஒவ்வொரு உருண்டைகளையும் வைத்து 10 நிமிடம் மூடி வைத்து அவித்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஜவ்வரிசி கொழுக்கட்டை ரொம்பவே எளிதாக தயாராகி விட்டிருக்கும். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -