30 வயதை கடந்த பிறகும் கூட முடிவில்லா முடி வளர்ச்சியை பெற,  பவர்ஃபுல்லான இந்த ஹேர் சீரம் ஒன்றே போதும். முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் கூட கடகடவென மீண்டும் முடியை வளர செய்து விடலாம்.

hair2
- Advertisement -

சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். 30 வயது, 35 வயதை கடந்த பின்பும் முடி நிறைய உதிர தொடங்கி விட்டால், அதை நிறுத்த முடியாது. வயது ஆகிவிட்டது. அதன் காரணமாக முடி உதிர்கிறது. முடி வெள்ளை ஆகிறது என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் கிடையாது. நீங்கள் 30 வயதை கடந்தவர்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய முடி உதிர்வை நிறுத்த முடியும். உங்களுக்கு வரக்கூடிய வெள்ளை முடியை வரவிடாமல் இன்னும் கொஞ்ச நாட்கள் தள்ளிப் போட முடியும். அதற்கான ஒரு ஹேர் சீரமை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதற்காக இந்த ஹேர் சீரமை 30 வயதை கடந்தவர்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஹேர் சிரமை தாராளமாக பயன்படுத்தலாம்.

முடி வளர்ச்சியை அதிகரிக்க ஹேர் சீரம் தயார் செய்யும் முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு வாழைப்பழத்தின் தோல், பிரியாணி இலை 2, அலோவேரா ஜெல் 2 ஸ்பூன், டீத்தூள் 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் 3 லிருந்து 4, வெங்காயத்தை உரித்த தோலையும் அந்த தண்ணீரிலேயே போட்டு விடுங்கள். சின்ன வெங்காயம் இல்லாதவர்கள் பெரிய வெங்காயம் நறுக்கியது இரண்டு ஸ்பூன், ஒரு பெரிய வெங்காயத்தின் தோல் இதில் சேர்த்துக் கொள்ளவும். (இயற்கையான கற்றாழை கிடைத்தால் அரை அடி அளவு கற்றழைக்கு உள்ளே இருக்கும் ஜெல்லை சீவி இதில் போட்டுக் கொள்ளவும்.)

- Advertisement -

இந்த பொருட்களை எல்லாம் அந்த தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை கொதிக்க வையுங்கள். ஏழு நிமிடம் மிதமான தீயில் இந்த தண்ணீர் கொதிக்கட்டும். தண்ணீரின் நிறம் மாறி, தண்ணீர் சுண்டி வர தொடங்கும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். இரண்டு டம்ளர் தண்ணீர், ஒரு டம்ளர் தண்ணீர் வரும் வரை இதை கொதிக்க வைக்க வேண்டும். என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இந்த தண்ணீர் நன்றாக ஆறிய பின்பு வடிகட்டிக் கொள்ளுங்கள். நமக்கு ஒரு சீரம் கிடைக்கும் அல்லவா. அந்த சீரமை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தலையில் இந்த ஹேர் சீரமை அப்ளை செய்ய வேண்டும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வேர்க்கால்களில் படும்படி ஸ்பிரே செய்து தலையை மசாஜ் செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு காட்டன் பஞ்சில் இந்த சீரமை தொட்டு உங்களுடைய வேர்கால்களில் எல்லா இடங்களிலும் படும்படி வைக்கவும். முடியை பாகம் பாகங்களாக பிரித்து வேர்க்கால்களில் படும்படி இதை தலையில் அப்ளை செய்து விடவும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம்.

- Advertisement -

இன்னொரு பாத்திரத்தில் இந்த சீரமை தனியாக எடுத்து வைத்திருக்கிறோம் அல்லவா. அதில் நீங்கள் தலைக்கு குளிக்கும் ஷாம்புவை போட்டு நன்றாக கலந்து விடுங்கள். ஷாம்பூவும் இந்த சீரமும் சேர்ந்த கலவையை தலை முழுவதும் அப்ளை செய்து தலை கசக்கி அலசிக் கொள்ளவும். அவ்வளவுதான். உங்களுடைய முடிவுக்கு தேவையான ஊட்டச்சத்து இரண்டு மடங்கு கிடைப்பதற்கு இந்த சீரம் உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: அடர்த்தியான அழகான முடி வளர்ச்சிக்கு இனி எந்த கஷ்டமுமே பட வேண்டாம். இந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே, முடி அது பாட்டுக்கு வளர்ந்து செல்லும்.

வாரத்தில் இரண்டு நாள் சத்துக்கள் நிறைந்த இந்த அழகு குறிப்பு சீரமை பயன்படுத்தி வந்தாலே தலைமுடி உதிர்வில் மாற்றம் தெரியும். தலைமுடி வளர்ப்பதிலும் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள். ஆனால் அதற்கு ஒரு மூன்று மாதமாவது எடுக்கும். மூன்று மாதம் தொடர்ந்து வாதத்தில் இரண்டு நாள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -